மழையால் பாதிக்கப்பட்ட ஆதிதிராவிடர் குடியிருப்பு மக்களுக்கு நிவாரண உதவி
3 Jan 2026, 4:56 pm
<p><strong>மழையால் பாதிக்கப்பட்ட ஆதிதிராவிடர் குடியிருப்பு மக்களுக்கு நிவாரண உதவி</strong></p>
<p>சென்னை, ஜன. 3- திருவொற்றியூர் 4ஆவது வார்டில் மழையால் பாதிக்கப்பட்ட ஏடி காலனி மக்களுக்கு நிவாரண உதவிகளை மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமன் வழங்கினார் . கடந்த மழையின் போது திருவொற்றியூர் 4ஆவது வார்டு ஆதிதிராவிடர் குடி யிருப்பு பகுதி மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. அப்பகுதியில் வசிக்கும் பெரும்பான்மையான மக்கள் கட்டுமானத் தொழிலாளர்கள், தூய்மை பணியாளர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் போன்ற விளிம்பு நிலையில் உள்ளவர்கள். இப்பகுதி மக்கள் மழை வெள்ளத்தின் போது எங்கும் வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அப்போது அவர்களுக்கு 4 நாள் உணவு வழங்கப்பட்டது. தொடர்ந்து அப்பகுதி மக்களின் ஏழ்மை நிலையைக் கருதி நிவாரண பொருட்கள் வழங்க மாநகராட்சியில் தொடர்ந்து வலி யுறுத்தி சுமார் 200 குடும்பங்களுக்கு 5 கிலோ அரிசி, ஒரு கிலோ பாமாயில், துவரம் பருப்பு, பால் பவுடர் போன்ற பொருட்களை அப்பகுதி மக்களுக்கு மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமன் சனிக்கிழமை (ஜன. 3) வழங்கினார். இதில் 4ஆவது வார்டு உதவி பொறி யாளர் திவ்யஸ்ரீ, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.பாக்கியலட்சுமி, வடக்கு பகுதி செயலாளர் எஸ்.கதிர்வேல், நிர்வாகி கள் கே.வெங்கடையா, அலமேலு, குமார், தனலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>
