முந்தய பக்கம்

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் “மக்கள் அறிவியல் சாசனம்” வெளியீடு

11 Apr 2026, 5:30 am
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் “மக்கள் அறிவியல் சாசனம்” வெளியீடு

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் “மக்கள் அறிவியல் சாசனம்” வெளியீடு

கடலூர், ஏப். 10- தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கடலூர் மாவட்ட நிர்வாகக் குழுக் கூட்டம் கடலூர் மாவட்டத் தலைவர் க.சேதுராமன் தலைமையில் கடலூர் அரசு ஊழியர் சங்கக் கட்டிடத்தில் நடைபெற்றது. மாவட்ட இணைச் செயலாளர் எஸ். கே.தேவநாதன் தலைமை தாங்கிய இக்கூட்டத்தில், மாநிலம் தழுவிய “மக்கள் அறிவியல் சாசனம்” வெளியிடப்பட்டது.

கல்வி, சுகாதாரம், சூழலியல், அறிவியல் பிரச்சாரம் உள்ளிட்ட ஐந்து முக்கியத் தலைப்புகளில் நிபுணர்களால் உருவாக்கப்பட்ட இந்தத் கோரிக்கை சாசனத்தைத் தேர்தல் வேட்பாளர்களுக்கு வழங்க அறிவியல் இயக்கம் முடிவு செய்துள்ளது. மாவட்ட அளவில் இச்சாசனத்தை மாநிலப் பொறுப்பாளர் ஸ்டீபன் நாதன் வெளியிட, ஓய்வுபெற்ற கூட்டமைப்பின் தலைவர் டி.புருஷோத்தமன் பெற்றுக்கொண்டார்.

இந்நிகழ்வில் மாநிலத் துணைத் தலைவர் ஆர். தாமோதரன், மாவட்ட செயலாளர் பி. தனலட்சுமி, துணைத் தலைவர் கலைச்செல்வி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். இறுதியாகக் கடலூர் நகர பொருளாளர் புஷ்பி நன்றி கூறினார்.

Share
FacebookXWhatsAppTelegram