இஸ்லாமிய கைதிகளை விடுதலை செய்ய நடவடிக்கை
19 Jul 2026, 10:34 pm
<p><strong>இஸ்லாமிய கைதிகளை விடுதலை செய்ய நடவடிக்கை</strong></p><p>கோவை, ஜூலை 19– கோவை மற்றும் பிற பகுதிகளில் உள்ள இஸ்லாமிய கைதிகளை விடு தலை செய்யவதற்கான உரிய நடவ டிக்கைகள் எடுக்கப்படும் என சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு தெரி வித்தார். கோவை விமான நிலையத்தில் சனி யன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், கெம்பனூர் கிராமத்திற்கு அரசு பேருந்து வசதி இல்லாதது அப்பகுதி மக்களின் நீண்ட நாள் குறையாக உள் ளது. இந்நிலைமை ஒரு நவீன தீண்டாமையாகவே பார்க்கப்படு கிறது. இதுகுறித்து அரசு தற்போது தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது. காந்திபுரம் பகுதியில் டாக்டர் அம்பேத் கர் சிலை அமைப்பது தொடர்பாக கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சரு டன் ஆலோசனைகள் நடத்தப்பட்டுள் ளன. விரைவில் அதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும். தமிழகத்தில் எந்த பகுதியிலாவது ‘இரண்டு குவளை முறை’ கடைப்பிடிக்கப்படுவது கண்ட றியப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப் படும். பழங்குடியின மக்களின் வாழ் வாதாரப் பிரச்சினைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன. அவர்களின் கோரிக்கைகள் ஒவ்வொன் றாக நிறைவேற்றப்படும், என்றார்.</p><p>ஈரோடு மாவட்டத்தி லுள்ள பெருந்துறை, ஈங்கூர் தொழிற்பேட்டை களில் சமூகநீதித்துறை அமைச்சர் வன்னியரசு ஞாயிறன்று ஆய்வு மேற்கொண்டார். தொழிற்பேட்டைகளில் மேற்கொள்ளபட்டுள்ள அடிப்படை உள் கட்டமைப்பு வசதிகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும், தொழிற்பேட்டை களில் இயங்கி வரும் தொழில் நிறுவனங்களின் செயல்பாடுகள், புதிய முதலீட்டு வாய்ப்புகள், நடைபெற்று வரும் வளர்ச்சிப்பணிகளின் முன் னேற்றம் மற்றும் தொழில்துறை வளர்ச்சிக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நட வடிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கேட்டறிந்தார். இந் நிகழ்வின் போது ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் முத்துசாமி, சமூகநீதித் துறை அலுவலர் சுடலைமணி, வட்டாட்சியர் செல்வகுமார் உள்ளிட்டோர் உட னிருந்தனர்.</p>
