தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

காவிரி கடைமடைப் பகுதியின் சம்பா சாகுபடிக்கு மேட்டூர் அணையிலிருந்து கூடுதலாக தண்ணீர் திறந்திடுக!

19 Jan 2026, 2:23 pm
காவிரி கடைமடைப் பகுதியின் சம்பா சாகுபடிக்கு மேட்டூர் அணையிலிருந்து கூடுதலாக தண்ணீர் திறந்திடுக!
<p><strong>காவிரி கடைமடைப் பகுதியின் சம்பா சாகுபடிக்கு மேட்டூர் அணையிலிருந்து கூடுதலாக தண்ணீர் திறந்திடுக!</strong></p> <p>தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை தஞ்சாவூர், ஜன.19- &nbsp;காவிரி கடைமடைப் பகுதியின் சம்பா சாகுபடிக்காக, மேட்டூர் அணையிலிருந்து கூடுதலாக தண் ணீர் திறக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் சாமி.நடரா ஜன், தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். தஞ்சாவூரில் திங்கள்கிழமை தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் &nbsp;டெல்டா மாவட்ட நிர்வாகிகள் ஆலோ சனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு, விவசாயிகள் சங்க தஞ்சாவூர் மாவட்டத் தலைவர் பி. செந்தில்குமார் தலைமை வகித் தார். தஞ்சாவூர் மாவட்டச் செயலா ளர் என்.வி. கண்ணன் முன்னிலை வகித்தார். &nbsp;தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தின் மாநிலத் தலைவர் டி.ரவீந்தி ரன் கலந்து கொண்டார். மாநிலப் பொதுச் செயலாளர் சாமி.நடராஜன் &nbsp;பிப்.4 ஆம் தேதி, ஒன்றிய அரசின் &nbsp;வேளாண் விரோதப் போக்கை கண் டித்து நடைபெறும் பெருந்திரள் போ ராட்டம் தொடர்பாக ஆலோசனை களை வழங்கினார். &nbsp;பின்னர் அவர் செய்தியாளர்களி டம் கூறுகையில், &ldquo;மேட்டூர் அணை யில் 90 அடிக்கு மேல் தண்ணீர் இருப்ப தால், அணையிலிருந்து டெல்டா பாச னத்துக்கு கூடுதலாக தண்ணீர் திறந்து விட வேண்டும். பாதுகாக்கப் பட்ட வேளாண் மண்டலமாக டெல்டா பகுதி அறிவிக்கப்பட்டுள்ளதால், இயற்கை எரிவாயு எடுக்கும் பேர ழிவு திட்டத்தை ஒன்றிய அரசு அனு மதிக்கக் கூடாது. &nbsp;இதுபோன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்.4 ஆம் தேதி தமிழ கத்தில் விழுப்புரம், ஈரோடு, மதுரை, &nbsp;தஞ்சாவூர் ஆகிய நான்கு இடங்க ளில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் பெருந்திரள் தர்ணா போராட்டம் நடைபெறவுள்ளது. தஞ்சாவூரில் நடைபெறவுள்ள இந்தப் போராட்டத்தில் டெல்டா வைச் சேர்ந்த விவசாயிகள் பெருமள வில் பங்கேற்கவுள்ளனர்&rdquo; என்றார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.