தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

இலங்கை கடற்படையினரால் 7 மீனவர்கள் கைது விடுவிக்கக்கோரி மீனவர்களின் உறவினர்கள் தங்கச்சிமடத்தில் சாலை மறியல்

27 Mar 2026, 3:15 pm
இலங்கை கடற்படையினரால் 7 மீனவர்கள் கைது விடுவிக்கக்கோரி மீனவர்களின் உறவினர்கள் தங்கச்சிமடத்தில் சாலை மறியல்
<p><strong>இலங்கை கடற்படையினரால் 7 மீனவர்கள் கைது விடுவிக்கக்கோரி மீனவர்களின் உறவினர்கள் தங்கச்சிமடத்தில் சாலை மறியல்</strong></p> <p>இராமேஸ்வரம், மார்ச் 27- இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 7 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி மீனவர்களின் உறவினர்கள் வெள்ளியன்று தங்கச்சிமடத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். &nbsp;கடந்த 25ஆம் தேதி இராமேஸ்வரம் மீன்பிடித்துறைமுகத்தில் இருந்து &nbsp;சசிகுமார் மற்றும் சிம்சன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் 7 மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்றனர். இவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக்கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அவர்களை &nbsp;காரை நகர் கடற்கரை முகாமிற்கு அழைத்துச் சென்று ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். தமிழக மீனவர்கள் 7 பேரையும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். &nbsp;மீனவர்களை கைது செய்ததைக் கண்டித்தும் அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரியும் வெள்ளிக்கிழமையன்று மீனவர்களின் உறவினர்கள் இராமேஸ்வரத்தை அடுத்த தங்கச்சிமடத்தில் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து மறியலை கைவிட்டு, கலைந்து சென்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.