கோயம்புத்தூர் விரைவு செய்திகள்
31 Dec 2025, 3:37 pm

மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள்

கோவை, டிச.31- அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கர்ப் பிணி உயிரிழந்த நிலையில், உடலை வாங்க மறுத்து உறவினர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை அம்மன்குளம் பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாதுரை. இவரது மனைவி சங்கீதா. இந்த தம்பதிக்கு கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு கோவை அரசு மருத்துவமனையில் இரண்டாவது பிரச வம் நடந்துள்ளது. அப்போது சங்கீதாவிற்கு குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அறுவை சிகிச்சை செய்யப்பட்ட 9 ஆண்டுகளுக்குப் பிறகு சங்கீதா மீண் டும் கர்ப்பமடைந்துள்ளார். சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலை யில், தாயும் கருவில் உள்ள குழந்தையும் ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ள னர். இதனைத் தொடர்ந்து அவருக்கு அவசர அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அப்போது 6 மாதக் குழந்தை இறந்த நிலையில் இருந்தது. அந்தச் சோகம் மறைவதற்குள்ளேயே, அறுவை சிகிச் சைக்குப் பிறகு சங்கீதாவின் உடல்நிலை மோசம டைந்து புதனன்று அதிகாலை 1.30 மணியளவில் அவர் உயிரிழந்தார். இந்நிலையில், முறையான சிகிச்சை அளிக்காததே இந்த உயிரிழப்புகளுக்குக் கார ணம் என குற்றம்சாட்டி, சங்கீதாவின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் குவிந்தனர். இதனையடுத்து, அங்கு பாது காப்புப் பணியில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர்.

கோவிலில் உண்டியல் கொள்ளை ஈரோடு, டிச.31- தாளவாடி மலைப்பகுதியிலுள்ள கோவில் ஒன்றி லிருந்த உண்டியல் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர். ஈரோடு மாவட்டம், தாளவாடி மலைப்பகுதியில் உள்ள கும்டாபுரம் கிராமத்தில் பழமை வாய்ந்த பீரேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் தினந்தோறும் காலை, மாலை பூஜைகள் நடைபெறு வது வழக்கம். இந்நிலையில், திங்களன்று மாலை வழக்கம்போல் அர்ச்சகர் பூஜை முடித்து, கோவிலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். தொடர்ந்து, செவ்வா யன்று காலை கோவிலுக்குள் சென்று பார்த்தபோது, கோவிலில் வைக்கப்பட்டிருந்த உண்டியல் காணா மல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து உடனடியாக கிராம மக்களுக்கு தகவல் தெரி வித்தார். இதைத்தொடர்ந்து ஊர் பொதுமக்கள் சார் பில் தாளவாடி காவல் நிலையத்தில் புகாரளிக்கப் பட்டது. அதன்பேரில் தாளவாடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தட்டுப்பாடின்றி குடிநீர் விநியோகம் செய்ய அறிவுறுத்தல்

தருமபுரி, டிச.31- மாவட்டம் முழுவதும் தட்டுப்பா டின்றி குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என தருமபுரி நாடாளு மன்ற உறுப்பினர் ஆ.மணி அறிவு றுத்தியுள்ளார். தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலு வலக கூட்டரங்கில், நிகழ் காலாண் டுக்கான மாவட்ட வளர்ச்சி மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் செவ் வாயன்று ஆட்சியர் ரெ.சதீஸ் முன் னிலையில் நடைபெற்றது. இக்கூட் டத்தில் கலந்து கொண்ட சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.பி.வெங்கடேஸ் வரன், ஆ.கோவிந்தசாமி, வே.சம்பத் குமார் ஆகியோர், மக்கள் கோரிக்கை மற்றும் தொகுதியில் நிறைவேற்ற வேண்டிய திட்டங்கள் குறித்து வலி யுறுத்தினர். முன்னதாக, இக்கூட்டத் திற்கு தலைமை வகித்து நாடாளு மன்ற உறுப்பினரும், கண்காணிப்புக் குழு தலைவருமான ஆ.மணி பேசு கையில், தருமபுரி மாவட்டத்தின் வளர்ச்சிக்கும், மக்களின் வாழ்க்கைத் தர மேம்பாட்டுக்கும் எண்ணற்ற திட் டங்களை தமிழக அரசு செயல்ப டுத்தி வருகிறது. அரசின் பல்வேறு திட்டங்களை விரைந்து செயல் படுத்தி, அரசுத்துறை அலுவலர்கள் முழுமையாக நிறைவேற்ற வேண் டும். அரசின் திட்டங்களை செயல் படுத்துவதில் ஏதேனும் சிரமங்கள் இருப்பின், அதுகுறித்து உடனடி யாக தகவல் தெரிவித்தால், அதற் குரிய தீர்வை கண்டறிந்து காலதாம தமின்றி விரைவாக நிறைவேற்றுவ தற்கு ஏதுவாக இருக்கும். அதேபோல, மாவட்டத்தில் இனி வருங்காலங்களில் குடிநீர் தட்டுப் பாடின்றி விநியோகம் செய்ய உள் ளாட்சித்துறை முனைப்போடு செயல் பட வேண்டும். மேலும், வனப்பகுதி யில் சாலைகள் அமைக்கும்போது, அதற்குரிய அனுமதியை வனத்து றையினர் காலதாமதமின்றி அளிக்க வேண்டும், என்றார். இக்கூட்டத் தில், மாவட்ட வன அலுவலர் ராஜாங் கம், மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் ரூபன் சங்கர்ராஜ், மாவட்ட ஊரக வளர்ச்சி செயற் பொறியாளர் பாலகிருஷ்ணன் உட் பட பலர் கலந்து கொண்டனர்.

வனப்பகுதிகளில் வீசப்படும் பிளாஸ்டிக் பாட்டில்கள்!

உதகை, டிச.31- நீலகிரி எல்லைகளில் உள்ள வாகன சோதனைச்சாவடிகளில் அதிகாரிக ளின் அலட்சியத்தால், வனப்பகுதிக ளில் பிளாஸ்டிக் பாட்டில்கள் வீசப்படு வதால் சுற்றுச்சூழல் பாதிக்கும் அபா யம் ஏற்பட்டுள்ளது. ‘மலைகளின் அரசி’ என்றழைக்கப் படும் நீலகிரி மாவட்டம், அடர்ந்த வனப் பகுதியை கொண்டது. இந்த வனப்பகு தியில் பல்வேறு வனவிலங்குகள் உள் ளன. இயற்கையை பாதுகாக்கவும், சுற் றுச்சூழலை பாதுகாக்கவும் ஒரு லிட்டர், 2 லிட்டர் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில் கள், குளிர்பான பாட்டில்கள், பிளாஸ் டிக் டம்ளர்கள், தட்டுகள் உள்ளிட்ட 19 வகையான பிளாஸ்டிக் பொருட்க ளுக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித் துள்ளது. இந்நிலையில், அண்மைக் காலமாக தடை செய்யப்பட்ட பிளாஸ் டிக் பொருட்களை நீலகிரி மாவட்டத் திற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணி கள் தங்களது வாகனங்களில் எடுத்து வருவதோடு, வனப்பகுதிகளிலும், சாலையோரங்களிலும் வீசிவிட்டு செல் கின்றனர். இதனை கருத்தில் கொண்ட மாவட்ட நிர்வாகம் நீலகிரி மாவட்டத் தில் எல்லை பகுதிகளான கல்லாறு, நாடுகாணி, பாட்டவயல், கக்கநல்லா உள்ளிட்ட சோதனை சாவடிகளில் வரும் வாகனங்களை சோதனை செய்து அதி காரிகள் பிளாஸ்டிக் பொருட்களை பறி முதல் செய்து வருகின்றனர். ஆனால், சமீப காலமாக அதிகாரிகளின் அலட்சி யத்தால் இந்த சோதனைச்சாவடிகளில் முறையான பிளாஸ்டிக் சோதனையில் அதிகாரிகள் ஈடுபடுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் பிளாஸ்டிக் பாட்டில்கள் உள்ளிட்ட பொருட்களை எடுத்து வரும் சுற்றுலாப் பயணிகள் வனப்பகுதிகளிலும், சாலையோரங்களிலும் வீசிவிட்டு செல்கின்றனர். இவ்வாறு பிளாஸ்டிக் பாட்டில்கள், குளிர்பான பாட்டில்களை குரங்குகள் எடுத்துக் கொண்டு, மரங் கள் மீது ஏறி அதனைத் திறந்து அருந்தி வரும் காட்சிகள் தற்போது வேகமாக பரவி வருகிறது. மேலும், வனப்பகுதிகளில் வீசப் பட்டுள்ள பிளாஸ்டிக் தட்டுகள், டம் ளர்கள், பிளாஸ்டிக் பாட்டில்களை வன விலங்குகள் உட்கொள்ளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் சுற்றுச் சூழல் வெகுவாக பாதிப்படைந்து வருவ தாக இயற்கை ஆர்வலர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர். எனவே, உட னடியாக சோதனைச்சாவடிகளில் முறையாக அதிகாரிகள் சுற்றுலா வாக னங்களை சோதனை செய்கின்றார் களா? என மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிறுத்தைகள் உலா

உதகை, டிச.31- நீலகிரி மாவட்டம் முழுவ தும் குடியிருப்புப் பகுதிக ளில் சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இந்நி லையில், உதகை அருகே யுள்ள கரிமொராஹட்டி கிரா மத்தில் திங்களன்று இரவு இரு சிறுத்தைகள் உலா வந் தன. இரவு நேரத்தில் குடியி ருப்பை ஒட்டிய சாலையில் சிறுத்தை சுற்றி திரிந்ததால், அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்த னர்.

நியாய விலைக்கடை திறப்பு

தருமபுரி, டிச.31- மொரப்பூர் அருகே ரூ.9.75 லட்சம் மதிப்பீட்டில் கட் டப்பட்ட நியாய விலைக்கடை மக்கள் பயன்பாட் டிற்கு திறந்து வைக்கப்பட்டது. தருமபுரி மாவட்டம், மொரப்பூர் மேற்கு ஒன்றி யம், ஜக்குப்பட்டியில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தி னர் வசித்து வருகின்றனர். இவர்கள் கம்பைநல்லூர் நியாய விலைக்கடைக்கு சென்று பொருட்கள் வாங்கி வந்தனர். ஆனால், பொருட்கள் வாங்குவதில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதால், மக்கள் சிரமத்திற்குள்ளாகி வந்தனர். இதனால் தங்கள் பகுதிக்கு பகுதி நேர நியாய விலைக்கடை வேண்டும் என ஜக்குப்பட்டி கிராம மக் கள், அரூர் சட்டமன்ற உறுப்பினர் சம்பத்குமாரிடம் கோரிக்கை வைத்தனர். அதனை ஏற்ற அவர், தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.9.75 லட்சம் ஒதுக் கீடு செய்து, கடந்த 4 மாதத்திற்கு முன்பு கட்டுமானப் பணிகளை தொடங்கி வைத்தார். இந்நிலையில், அதன் பணிகள் நிறைவடைந்த நிலையில், நியாய விலைக் கடையை சம்பத்குமார் எம்எல்ஏ திறந்து வைத்து, ரேசன் பொருட்கள் விநியோகத்தை தொடங்கி வைத் தார். இந்நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டனர்.

அதிக ஒலியுடன் கூடிய பட்டாசுகளை வெடிக்கக்கூடாது!

உதகை, டிச.31- நீலகிரி மாவட்டத்தில் வனப் பகுதிகளில் உள்ள விடுதிகளில் தங்கும் சுற்றுலாப் பயணிகள் அதிக ஒலியுடன் கூடிய பட்டாசுகளை வெடிக்கக்கூடாது என வனத்துறை யினர் அறிவுறுத்தியுள்ளனர். நீலகிரி மாவட்டம் சுமார் 60 சத விகிதம் வனப்பகுதியை கொண் டது. இங்குள்ள பெரும்பாலான சுற் றுலாத் தலங்கள் மற்றும் சுற்றுலா விடுதிகள் வனப்பகுதியை ஒட்டியே அமைந்துள்ளன. நீலகிரியில் உள்ள காலநிலையில் புத்தாண்டை கொண்டாட தமிழ்நாடு மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகை தந்து, விடுதிகளில் தங்கி கொண்டாட்டத்தில் ஈடுபடு வர். பெரும்பாலும் இரவு நேரங்க ளில் விடுதிகளில் பட்டாசு வெடித் தல், அதிக சப்தத்துடன் கூடிய ஆடல், பாடல் நிகழ்க்சிகள் நடத்து தல், கேம் பயர் (தீ மூட்டி) அதைச் சுற்றி நடனமாடுதல், இரவு நேரத் தில் வாகனங்களில் வனப்பகுதி சாலைகளில் வலம் வருதல் உள் ளிட்ட கேளிக்கைகளில் ஈடுபடுவர். மேலும், டிரோன் மூலம் வனப்பகுதி யில் வீடியோ எடுப்பதும் வழக்கம். இதைத் தடுக்கும் வகையில் வனப் பகுதியை ஒட்டி அமைந்துள்ள தங்கும் விடுதிகளில் தங்குபவர் களிடம் விடுதி உரிமையாளர்கள் அல்லது மேலாளர்கள் இது போன்ற விதிமீறல்களில் ஈடுபடா மல் இருக்க பார்த்துக் கொள்ள வேண்டும் என்று வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். இதேபோன்று, கோவை மாவட்ட வனத்துறை வெளியிட்ட அறிக்கையில், புத்தாண்டு கொண் டாட்டத்தின் போது, மேற்கு தொடர்ச்சி மலைக்குட்பட்ட பகுதி களில் உள்ள ரிசார்ட்டுகளில், பட் டாசுகள் வெடிக்கக்கூடாது, அதிக சத்தத்துடன் இசை நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனை கட்டா யம் பின்பற்ற வேண்டும் என்றும், இதனை மீறுபவர்கள் மீது நடவ டிக்கை எடுக்கப்படும் என தெரி விக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு கொண்டாட்டத் திற்கு இத்தனை விதிமுறைகளை விதிக்கும் வனத்துறையினர், சிவ ராத்திரி என்கிற பெயரில் அனைத்து விதிமுறைகளையும் மீறும் ஈஷா யோகா மையத்தின் மீது இதுவரை யில் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என்பது குறிப்பிடத்தத் கது.