வாக்களித்ததை உறுதி செய்யும் ‘எஸ்எம்எஸ்’ கோரிக்கை நிராகரிப்பு
11 Apr 2026, 5:30 am

வாக்களித்ததை உறுதி செய்யும் 'எஸ்எம்எஸ்' கோரிக்கை நிராகரிப்பு

சென்னை, ஏப். 10 - தேர்தல் நடைமுறைகள் ஏற்கனவே தொடங்கிவிட்ட நிலையில் நீதிமன்றம் தலையிட இயலாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. வாக்காளர்கள் வாக்களித்ததை உறுதிசெய்யும் குறுஞ்செய்தி அனுப்ப தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரிய வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தமிழ்நாடு இசை வேளாளர்கள் இளைஞர் நலச் சங்கத் தலைவர் கே.சி.பி. முகேஷ் தாக்கல் செய்த இந்த மனுவில், ரேஷன் விநியோகம், எரிவாயு சிலிண்டர் பதிவு, வங்கிப் பரிவர்த்தனை போன்றவற்றுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படுவதைப் போல, வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்காளருக்கு 'வோட் கன்பர்மேஷன் எஸ்எம்எஸ்' அனுப்பும் திட்டத்தை அமல்படுத்தக் கோரினார். இது கள்ள வாக்கினைத் தடுக்கும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தலைமை நீதிபதி எஸ்.வி. கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஜே. சத்யநாராயண பிரசாத் அடங்கிய அமர்வு விசாரித்தபோது, 2024ஆம் ஆண்டு தேர்தல் நடைமுறைகள் அனைத்தும் இந்த கோரிக்கை வைக்கப்படும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே பரிசீலிக்கப்படவேண்டும் என்று மனுதாரர் தரப்பு தெரிவித்தது. இதை விசாரித்த நீதிபதிகள், இதுகுறித்து முடிவெடுப்பது தேர்தல் ஆணையத்தின் அதிகாரம் என்றும், தேர்தல் நடைமுறை தொடங்கிவிட்ட இந்நிலையில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் தெரிவித்தனர். அடுத்த தேர்தலுக்காக தேர்தல் ஆணையத்திடம் மீண்டும் மனு அளிக்கலாம் என்று ஆலோசனை கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்.