கோயம்புத்தூர் விரைவு செய்திகள்
25 Feb 2026, 3:22 pm

சாலையில் சுற்றித்திரியும் நாய்களால் அவதி

தருமபுரி, பிப்.25- கடத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் சாலைகளில் கூட்டமாக சுற்றித்திரியும் தெரு நாய்களால் வாகன ஓட்டிகள், பள்ளி மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தருமபுரி மாவட்டம், கடத்தூர் ஒன்றியம், குருபர அள்ளி, வேப்பிலைபட்டி, நொச்சிகுட்டை, அய்யம்பட்டி, புட்டிரெட்டி பட்டி உள்ளிட்ட பகுதியில் நாளுக்குநாள் தெரு நாய்களின் நட மாட்டம் அதிகரித்துள்ளது. சாலையோரம் ஆங்காங்கே குப்பையுடன் கொட்டப்படும் இறைச்சிக்கடை, ஓட்டல்கடை கழிவுகளை சாப்பிட சாலையில் ஆங்காங்கே நாய்கள் சுற்றித் திரிகின்றன. இதனால், பள்ளி மாணவர்கள் அச்சத்துடன் சாலையில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இரவு நேரங்களில் சாலையில் மனித நடமாட்டம் குறையும் போது, தெரு நாய்களின் கூட்டம் சாலையின் நடுப்பகுதியிலேயே படுத்துக் கொள்வதால், அவ்வழியாக இருசக்கர வாகனங்க ளில் வருபவர்கள் விபத்துகளில் சிக்குகின்றனர். உடலில் காயம் ஏற்படுவதுடன், நாய்களால் கடிபட்டு, அரசு மருத்துவ மனைக்கு செல்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், நாளுக்கு நாள் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும், இது வரை நிரந்தர நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, தெரு நாய்களை பிடித்து பாதுகாப்பான இடங்களில் அடைக்க வும், அவற்றின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தி, ரேபிஸ் தடுப்பூசி செலுத்த வேண்டும் எனவும் பொதுமக்கள் வலியு றுத்தியுள்ளனர்.

அரசுப்பள்ளியில் அம்பேத்கர் படம் வரைய மறுப்பு?

திருப்பூர், பிப்.25- குண்டடம் ஒன்றியம், குங்காருபா ளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நூற்றாண்டு விழா கொண் டாட்டத்தை முன்னிட்டு தேசத் தலை வர்கள் படம் வரையப்படுவதில், இந் திய அரசியல் சட்ட சிற்பி அம்பேத்கர் படத்தை வரைய முடியாது என பள்ளி நிர்வாகத்தினர் மறுப்புத் தெரிவிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திருப்பூர் மாவட்டம், குண்டடம் ஒன் றியம், ஊதியூர் அருகே அமைந்துள் ளது குங்காருபாளையம். காங்கேயம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இந்த கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக் கப்பள்ளியில் பிப்.27ஆம் தேதி வெள்ளி யன்று நூற்றாண்டு விழா கொண்டாடப் பட உள்ளது. இதை முன்னிட்டு பள்ளி யில் வர்ணம் பூசி, தேசத் தலைவர்கள் படம் வரைந்து வைப்பதற்கான ஏற்பாடு கள் செய்யப்பட்டு வருகின்றன. திருவள்ளுவர், மகாத்மா காந்தி, நேரு, ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பல் வேறு தலைவர்கள் படங்கள் வரையப் பட்டு வருகின்றன. இந்த தலைவர்கள் படங்களில் அம்பேத்கர் படம் இடம் பெறாததை கவனித்து உள்ளூரை சேர்ந்த சிலர் பள்ளி தலைமை ஆசிரியரி டம் கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு அவர் “சாதித் தலைவர்” படம் வரைய முடியாது என்று பதிலளித்ததாக கூறினர். இதைப்பற்றி கல்வித் துறை அதி காரிகளிடமும் கேட்டிருக்கின்றனர். அவர்கள் பள்ளி விழா முடியட்டும், பிறகு அம்பேத்கர் படம் வரைந்து அங்கு வைக்கலாம் என பதிலளித்ததாக கூறி னர். இந்நிலையில் தொடர்புடைய கல்வி அதிகாரியைத் தீக்கதிர் சார்பில் தொடர்பு கொண்டு இப்பிரச்சனை குறித்து கேட்டபோது, அம்பேத்கர் உட்பட அனைத்து தலைவர்கள் பட மும் வரைந்து வைக்கப்படும். இதில் எந்த பிரச்சனையும் இல்லை என்று பதி லளித்தார். எனினும் குங்காருபாளையத்தை சேர்ந்தவர்களிடம் விசாரித்தபோது, இந்த நிமிடம் வரை அம்பேத்கர் படம் வரையப்படவில்லை. மேலும் பள்ளி விழா எந்த பிரச்சனையும் இல்லாமல் நடைபெறட்டும் என்று மட்டுமே சம்பந் தப்பட்டவர்கள் கூறி வருவதாக தெரி வித்தனர். இதன் மூலம் அம்பேத்கர் படத்தை வரையாமல் தவிர்ப்பதற்கு முயற்சி நடைபெறுவதாகவும் உள் ளூரை சேர்ந்தோர் கூறினர். மேலும், வெள்ளியன்று (நாளை) நடைபெற இருக்கும் பள்ளி விழாவில் தொகுதியின் எம்எல்ஏவும், மாநில செய்தி மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சருமான மு.பெ.சாமிநாதன் பங்கேற்க இருப்பதாக கூறினர். இந் திய அரசியல் சட்டத்தை உருவாக்கிய மேதை அம்பேத்கரை சாதித் தலைவர் என்ற குறுகிய கண்ணோட்டத்தில் கல் வித்துறை ஆசிரியர்கள், உள்ளூர் ஆதிக்க சக்தியினர் கருதினால் அதை ஏற்கக் கூடாது. அம்பேத்கர் படம் வரை வதை உறுதிப்படுத்தி விட்டு அமைச்சர் சாமிநாதன் இந்நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என அவர்கள் கூறினர்.

மலர் நாற்றுகளை பாதுகாக்கும் பணி

உதகை, பிப்.25- நீலகிரி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத் தால், பகல் மற்றும் இரவு நேரங்களில் மலர் நாற்றுகளை பாது காக்கும் பணியில் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்ற னர். நீலகிரி மாவட்டம், குன்னூரிலுள்ள சிம்ஸ் பூங்கா நூற் றாண்டு பழமை வாய்ந்தது. இங்குள்ள அரிய வகை மரங்கள் மற்றும் மலர் செடிகள் ஆகியவை சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகின்றன. ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நடைபெறுவது வழக்கம். மே மாத இறுதியில் சிம்ஸ் பூங்காவில் பழக்கண்காட்சியும் நடத் தப்பட்டு வருகிறது. இந்தாண்டு மே மாதம் இறுதியில் 66 ஆவது பழக்கண்காட்சி நடைபெற உள்ளது. இந்நிலையில், சிம்ஸ் பூங்காவில் மலர் நாற்றுகள் நடவு செய்யும் பணி கடந்த ஜன.31 ஆம் தேதி முதல் தொடங்கியது. சால்வியா, டேலியா, பால்சம், மேரி கோல்டு, ஆஸ்ட்டர், பேன்சி, பிளாக்ஸ் உட்பட்ட 125க்கும் மேற்பட்ட ரகங்கள் நடவு செய்யப்பட்டன. பூங்கா முழுவதும் சுமார் 4 லட்சத்து 50 ஆயிரம் மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட உள்ள நிலையில், தற்போது முதற்கட்டமாக நடவு செய்யப்பட்ட மலர் நாற்றுகளை பாதுகாக்கும் விதமாக பூங்கா ஊழியர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். மேலும், இரவு நேரத்தில் பனிப்பொழிவு இல்லாமல் நாற்றுகள் மீது பைகளை விரித்தும், பகல் நேரங்களில் தினமும் நாற்றுகளுக்கு தண்ணீர் பாய்ச்சியும் நாற்றுகளை பாதுகாக்கும் பணியில் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

குன்னூர் நெடுஞ்சாலையில் காட்டுமாடுகள் உலா

உதகை, பிப்.25- குன்னூர் செல்லும் நெடுஞ்சாலையில் காட்டு மாடுகள் உலா வருவதால், வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். வனப்பகுதியில் நிலவும் வறட்சி காரண மாக பசுந்தீவனம் கிடைக்காததால், உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு, தேயி லைத் தோட்டங்கள், சாலைகளில் யானை கள் உலா வருவது அதிகரித்துள்ளது. இந்நி லையில், கோத்தகிரியிலிருந்து குன்னூர், உதகை செல்லும் நெடுஞ்சாலையில் அமைந் துள்ள கன்னிமாரியம்மன் கோவில் அருகே காட்டு மாடுகள் கூட்டம் எவ்வித அச்சமுமின்றி உலா வந்தன. இதனால், இருசக்கர, நான்கு சக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளா கினர். தொடர்ந்து, இதேபோன்ற காட்டு மாடு கள் சாலையில் உலா வருவதால், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் மற்றும் இருசக்கர, நான்கு சக்கர வாகனங் கள் நிலை அறிந்து வனத்துறையினர் சாலை யில் உலா வரும் காட்டு மாடுகளை வனப் பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குங்காருபாளையம் பள்ளியில் அம்பேத்கர் படம் வரைய மறுப்பு?

திருப்பூர், பிப்.25 - திருப்பூர் மாவட்டம் குண்டடம் ஒன்றியம் குங்காருபாளையம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு தேசத் தலை வர்கள் படம் வரையப்படுவதில், இந்திய அர சியல் சட்ட சிற்பி அம்பேத்கர் படத்தை வரைய முடியாது என பள்ளி நிர்வாகத்தினர் மறுப்பு தெரிவிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள் ளது. திருப்பூர் மாவட்டம் குண்டடம் ஒன்றியம் ஊதியூர் அருகே அமைந்துள்ளது குங்காரு பாளையம். காங்கேயம் சட்டமன்ற தொகு திக்கு உட்பட்ட இந்த கிராமத்தில் ஊராட்சி ஒன் றிய தொடக்கப் பள்ளியில் வரும் 27ஆம் தேதி வெள்ளியன்று நூற்றாண்டு விழா கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு பள்ளியில் வர்ணம் பூசி, தேசத் தலைவர்கள் படம் வரைந்து வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. திருவள்ளுவர், மகாத்மா காந்தி, நேரு, ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பல்வேறு தலை வர்கள் படங்கள் வரையப்பட்டு வருகின்றன. இந்த தலைவர்கள் படங்களில் அம்பேத்கர் படம் இடம் பெறாததை கவனித்து உள்ளூரை சேர்ந்த சிலர் பள்ளி தலைமை ஆசிரியரி டம் கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு அவர் “சாதித் தலைவர்” படம் வரைய முடியாது என்று பதிலளித்ததாக கூறினர். இதைப் பற்றி கல்வித் துறை அதிகாரிகளி டமும் கேட்டிருக்கின்றனர். அவர்கள் பள்ளி விழா முடியட்டும், பிறகு அம்பேத்கர் படம் வரைந்து அங்கு வைக்கலாம் என பதிலளித்த தாகக் கூறினர். இந்நிலையில் தொடர்புடைய கல்வி அதி காரியை தீக்கதிர் சார்பில் தொடர்பு கொண்டு இப்பிரச்சனை குறித்து கேட்ட போது, அம்பேத்கர் உட்பட அனைத்து தலை வர்கள் படமும் வரைந்து வைக்கப்படும். இதில் எந்த பிரச்சனையும் இல்லை என்று பதிலளித்தார். எனினும் குங்காருபாளையத்தை சேர்ந்தவர்களிடம் விசாரித்தபோது, இந்த நிமிடம் வரை அம்பேத்கர் படம் வரையப்பட வில்லை. மேலும் பள்ளி விழா எந்த பிரச்சனை யும் இல்லாமல் நடைபெறட்டும் என்று மட் டுமே சம்பந்தப்பட்டவர்கள் கூறி வருவதாக தெரிவித்தனர். இதன் மூலம் அம்பேத்கர் படத்தை வரையாமல் தவிர்ப்பதற்கு முயற்சி நடைபெறுவதாகவும் உள்ளூரை சேர்ந் தோர் கூறினர். வெள்ளிக்கிழமை நடைபெற இருக்கும் பள்ளி விழாவில் தொகுதியின் எம்எல்ஏவும், மாநில செய்தி மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சருமான மு.பெ.சாமிநாதன் பங்கேற்க இருப்பதாக கூறினர். இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்கிய மேதை அம்பேத்கரை சாதித் தலைவர் என்ற குறு கிய கண்ணோட்டத்தில் கல்வித் துறை ஆசி ரியர்கள், உள்ளூர் ஆதிக்க சக்தியினர் கருதி னால் அதை ஏற்கக் கூடாது. அம்பேத்கர் படம் வரைவதை உறுதிப்படுத்தி விட்டு அமைச்சர் சாமிநாதன் இந்நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என அவர்கள் கூறினர்.

குழாய் உடைந்து வெளியேறிய ஒகேனக்கல் குடிநீர்

தருமபுரி, பிப்.25- நல்லம்பள்ளி அருகே ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைந்தால், பல்லாயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணானது. தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளியை அடுத்துள்ள புற வடை ஜங்ஷன் பகுதி வழியாக தேசிய நெடுஞ்சாலை செல்கி றது. இச்சாலையின் இருபுறமும் விரிவாக்கப் பணிகள் நடை பெற்று வருகிறது. இந்நிலையில், செவ்வாயன்று மாலை அவ்வழியாக செல்லும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட பிர தான குழாய், உடைந்து தண்ணீர் வெளியேற தொடங்கியது. சிறிது நேரத்தில் தண்ணீர் வேகம் அதிகமானதால், சுமார் 10 அடி உயரத்துக்கு மேல் தண்ணீர் பீய்ச்சி அடித்தது. இதனால் பல்லாயிரம் லிட்டர் ஒகேனக்கல் குடிநீர் வீணாக வெளியேறி யது. அதேபோல் கெங்கலாபுரம் பகுதியில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் குழாயின் பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டு, கடந்த 2 நாட்களாக தண்ணீர் வீணாக வெளியேறியது. அதன் பிறகு உடைந்த குழாயை சீரமைத்தவர்கள், தோண்டிய குழியை அப்படியே விட்டுவிட்டு சென்றனர். இதனால் இரவு நேரங்க ளில் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக் கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைந்த அன்றே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து, உடைந்த குழாயை சீரமைத்து இருந்தால் பல்லாயிரம் லிட்டர் தண்ணீர் வீணாகுவது தடுக்கப் பட்டிருக்கும். ஆனால், 2 அல்லது 3 நாட்கள் கழித்து தான், உடைந்த குழாயை சீரமைக்கின்றனர் என பொதுமக்கள் குற் றஞ்சாட்டியுள்ளனர்.

ரயில் நிலையம் முன்பு நிறுத்தும் வாகனங்களுக்கு அபராதம்: சிபிஎம் கண்டனம்

தருமபுரி, பிப்.25- மொரப்பூர் ரயில் நிலையம் முன்பு வாகனங்களை நிறுத் தும் பொதுமக்களுக்கு அபராதம் விதிப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சிபிஎம் தருமபுரி மாவட்டச் செயலாளர் இரா. சிசுபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மொரப்பூர் ரயில் நிலையத்திற்கு தினசரி நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். உறவினர்களை ரயிலில் ஏற்ற வரு வோர் ரயில் நிலையம் முன்பாக இருசக்கர வாகனங்களை நிறுத்தி விட்டு செல்கின்றனர். அனைத்து ரயில் நிலையங் கள் முன்பாகவும் உள்ள வழக்கமான நடைமுறை இது. ஆனால், மொரப்பூரில் ரயில் நிலையம் முன்பாக இருசக்கர வாகனங்களை நிறுத்தும் பொதுமக்களுக்கு அபராதம் விதிப் பது கண்டிக்கத்தக்கது. காவல் துறையினரை பயன்ப டுத்தி போக்குவரத்தை முறைப்படுத்துவதற்கு மாறாக, பொதுமக்களுக்கு இடையூறு விளைவிப்பது ஏற்கத்தக்க தல்ல. இத்தகைய நடைமுறையை ரயில்வே நிர்வாகம் உடன டியாக கைவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.