சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்களுக்கு மீண்டும் பணி வழங்குக! சாம்சங் தொழிலாளர்கள் நடைபயணம்: 32 பேர் கைது
17 Nov 2025, 3:10 pm
<p><strong>சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்களுக்கு மீண்டும் பணி வழங்குக! சாம்சங் தொழிலாளர்கள் நடைபயணம்: 32 பேர் கைது</strong></p>
<p>காஞ்சிபுரம், நவ. 17- காஞ்சிபுரம் அருகே சுங்குவார்சத்தி ரம் சாம்சங் தொழிற்சாலையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 27 தொழிலாளர்களுக்கு ஆறு மாத கால மாகியும் நிர்வாகம் பணி வழங்கா ததை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி நடைபயணம் மேற்கொள்ள முயன்ற தொழிலாளர் கள் உட்பட சிஐடியு சங்கத் தலைவர்கள் 32 பேரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். காஞ்சிபுரம் மாவட்டம், சுங்கு வார்சத்திரம் பகுதியில் இயங்கி வரு கிறது பன்னாட்டு தொழிற்சாலை சாம்சங் இந்தியா. இங்கு வீட்டு உபயோ கப் பொருட்கள் தயாரிக்கும் பணியில் பல ஆயிரம் தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். கடந்த ஆண்டு, சிஐடியு தொழிற்சங்க அங்கீகாரம் மற்றும் பல்வேறு தொழி லாளர் நல கோரிக்கைகளை முன் வைத்து 40 நாட்களாக ஆயிரத்துக் கும் மேற்பட்ட தொழிலாளர்கள் போ ராட்டத்தில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தைக் குப் பிறகு மீண்டும் தொழிற்சாலைக்கு பணிக்கு திரும்பினர். இந்நிலையில், தொழிற்சாலை யில் நிர்வாகத்திற்கு எதிரான செயல் களில் ஈடுபட்ட தொழிலாளர்கள் பணி யிடை நீக்கம் செய்யப்பட்டனர். 6 மாதங்கள் கடந்தும் அந்த 27 தொழிலா ளர்களுக்கு பணி வழங்காமல் கால தாமதம் செய்யும் நிர்வாகப் போக்கை கண்டித்து, பல கட்டப் போராட்டத்தில் சிஐடியு தொழிற்சங்கத்தினர் ஈடுபட்ட னர். தொழிற்சாலை நிர்வாகத்தின் செயல்களைக் கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி சுங்கு வார்சத்திரத்தில் இருந்து மூன்று நாள் நடைபயணம் மேற்கொள்ள முடிவு செய்து, அதற்கான அறிவிப்பு சிஐடியு தொழிலாளர் சங்கம் சார்பில் வெளி யிடப்பட்டது. இந்த நடைபயணத்திற்கு காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில், திட்டமிட்டபடி திங்களன்று (நவ.17) சுங்குவார்சத்திரம் பேருந்து நிலையம் அருகே 50-க்கும் மேற்பட்டோர் சிஐடியு காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் இ.முத்துக்குமார் தலைமையில் நடைபயணமாக புறப் பட்டனர். அப்போது, காவல்துறையினர் அவர்களை பேருந்து நிலையம் அருகே தடுத்து நிறுத்தினர். சங்கத் தலைவர்கள் காவல்துறையினருடன் அமைதியான முறையில் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனாலும், காவல்துறையினர் தங்கள் நிலைப் பாட்டில் இருந்து சற்றும் விட்டுக் கொடுக்கவில்லை. இதனால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, முத்துக்குமார் மற்றும் சிஐடியு தலை வர்கள் உட்பட தொழிலாளர்கள் 32 பேரைக் காவல்துறையினர் கைது செய்தனர். சிபிஎம்-சிஐடியு கண்டனம் “அமைதியான முறையில் ஊர்வலம் புறப்பட்ட சாம்சங் தொழிலாளர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்ததை கண்டித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் கே.நேரு, கடந்த ஆறு மாதமாக வேலையை இழந்து பரிதவித்து வரும் சாம்சங் தொழிலாளர்களின் வாழ்வா தாரத்தை கருத்தில் கொண்டு மாவட்ட ஆட்சியர் தலையிட்டு நிர்வாகத்திற்கு உரிய அறிவுரை வழங்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார். “அமைதியான முறையில் ஊர்வ லம் புறப்பட்ட சாம்சங் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டது அரசியல் அமைப்பு சட்டத்தின் ஜனநாயக உரி மைகளுக்கு எதிரானது என்றும் காவல் துறையின் இத்தகைய செயலை சிஐ டியு காஞ்சிபுரம் மாவட்டக் குழு வன்மை யாக கண்டிக்கிறது” என்றும் மாவட்டச் செயலாளர் இ.முத்துக்குமார் தெரிவித் தார். சாம்சங் தொழிலாளர்கள் பிரச்ச னையில் தமிழ்நாடு அரசும் முதல மைச்சரும் தலையிட வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கும் முத்துக்குமார், நவ.20 ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து முறை யீடு செய்ய உள்ளதாகவும் தெரிவித் தார்.</p>
