சாதி ஆணவக் கொலைகளைத் தடுக்க சிறப்புச் சட்டம் தொடர்பாக
28 Feb 2026, 2:29 pm
<p>சாதி ஆணவக் கொலைகளைத் தடுக்க சிறப்புச் சட்டம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி கே.என்.பாஷா தலைமையிலான ஆணையத்திடம் தீண்டாமை ஒழிப்பு முன்னணி வழங்கிய பரிந்துரைகளை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கு.செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ-விடம், தலித் விடுதலைக்கான தேசிய மேடையின் அகில இந்திய துணைத் தலைவர் கே.சாமுவேல்ராஜ், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலத் தலைவர் த.செல்லக்கண்ணு, பொதுச் செயலாளர் பி.சுகந்தி, மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஐ.ஆபேல்பாபு ஆகியோர் சந்தித்து வழங்கினர். ஒன்றிய, மாநில அரசுகள் சட்டம் இயற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது.</p>
