உதவித்தொகை வழங்க மறுப்பு: சிபிஎம் போராட்டம்
19 Feb 2026, 3:09 pm
<p><strong>உதவித்தொகை வழங்க மறுப்பு: சிபிஎம் போராட்டம்</strong></p>
<p>நாமக்கல், பிப்.19- திருச்செங்கோடு அருகே எலச்சிபாளையம் இலுப்புலி பெடரல் வங்கி நிர்வாகம் மனநலம் பாதிக்கப்பட்ட நபருக்கு அரசு உதவி செய்த உதவித்தொகை வழங்க மறுப்பு தெரிவித் ததால் மார்க்சிஸ்ட் கட்சியினர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், திருச்கெங்கோடு எலச்சிபாளை யம் ஒன்றியம் கிளாப்பாளையம் கிராமத்தில் ராமசாமிக்கு இரண்டு மகன்கள் அதில் மூத்த மகன் குமரவேல் (45) என்பவர் மனநலம் பாதிக்கப்பட்டு அரசு சார்பில் மாதாந்திர உதவித்தொகையை கடந்த 20 வருடங்களாக பெற்று கொண்டி ருக்கின்றார். இவரது தந்தை ராமசாமி உயிரோடு இருக்கும் வரை பராமரிப்புத் தொகையினை அவரிடம் வழங்கப்பட்டது. பின்னர் அவர் மறைவுக்கு பிறகு மாதந்திரத் தொகை எடுக்க முடியாத நிலையில் குமரவேல் உள்ளார். இவரது தம்பி பொன்னர் என்பவர் குமரவேலை பராமரிப்பு செய்து வருகி றார். இவர் பெடரல் பேங்க் நிர்வாகத்திற்கு பலமுறை சென்று பராமரிப்பு தொகை வழங்குங்கள் என்று கேட்டபோது நீதி மன்றத்திற்கு சென்று வழக்கு பதிவு செய்து பெற்றுக் கொள் ளுங்கள் என்று கூறிவிட்டனர். பின்னர், நீதிமன்றத்திற்கு சென்ற போது மாவட்ட நிர்வா கம் முடிவெடுத்துக் கொள்ளலாம் என கூறிவிட்டனர். இதனை தொடர்ந்து முதல்வர் திட்டம் முகாமில் மனு அளிக்கப்பட்டது. மனு அளித்ததின் பெயரில் நாமக்கல் மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில் இருந்து சம்பந்தப்பட்டவருக்கு அதிகாரி கள் தொடர்பு கொண்டு பேசி தீர்வு ஏற்படுத்த கூறினார்கள். பல இடங்களுக்கு அலைக்கழிக்கப்பட்ட நிலையில் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலி யுறுத்தி இலுப்புலி பெடரல் வங்கி முன்பு வியாழனன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் காத்திருக்கும் போராட் டத்தில் ஈடுபட்டனர். காலை துவங்கி மாலை வரை போராட் டம் நீடித்த நிலையில், போராட்டக்காரர்களிடம் வங்கி மேலா ளர் ஜேசுராஜ், கிராம நிர்வாக அலுவலர் பிரகாஷ், காவல் உதவி ஆய்வாளர்கள் உட்பட பலர் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக எழுத்துப்பூர்வமாக உறுதியளித்த தன் பெயரில் போராட்டம் கைவிடப்பட்டது.</p>
