விலை கொடுத்து வாங்கிய நிலத்திற்கு பட்டா வழங்க மறுப்பு
16 Dec 2025, 5:54 pm
<p><strong>விலை கொடுத்து வாங்கிய நிலத்திற்கு பட்டா வழங்க மறுப்பு</strong></p>
<p>ஈரோடு, டிச.16- ஈரோடு ஒன்றியத்தில் விலை கொடுத்து வாங்கி வீடு கட்டி வசித்து வரும் இடத்திற்கு பட்டா வழங்க மறுக்கப் படுவதாகப் புகார் எழுந்துள்ளது. ஈரோடு வட்டம், தோட்டாணி கிராமத்தில் எஸ்.கே.சுப்பிர மணி என்பவர் வீட்டுமனைகள் விற்பனை செய்து வந்தார். கூரபாளையம் ஊராட்சியில் அங்கீகாரம் பெற்று நடைபெற்ற விற்பனையில் கடந்த 2007ஆம் ஆண்டு பலரும் வீட்டுமனை வாங்கினர். பெருந்துறை சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவும் செய்தனர். அந்த இடத்தில் வீடு கட்டி, மின் இணைப்பு பெற்றுள்ளனர். இந்நிலையில் பத்திரத்தை பட்டா வாக மாற்ற முற்பட்டனர். ஆனால் ரீ.சர்வேயில் (நில அளவை யில்) ஓடை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால் பட்டா வழங்க முடியாது என்று வருவாய்த்துறையினர் மறுக்கின்ற னர். நிலவியல் ஓடை, பூமி தான நிலம், அனாதீனம் என்று கூறப்படும் நிலையில் பழைய கிராம கணக்குகளில் தனியார் பட்டா நிலம் என்றும் வண்டிப்பாதை என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது. இதனால் கடன் வாங்கி வீடு கட்டலாம் என நினைப்பவர்கள் கடன் பெற முடியவில்லை. அரசு வழங்கும் வீடுகளும் மறுக்கப்படுகிறது. ஆகவே தமிழ்நாடு வருவாய் பேரிடர் மேலாண்மைத்துறை 21.2.2025 அன்று ஆட்சேபணை யற்ற அரசு புறம்போக்கு நிலங்களுக்கு பட்டா வழங்கலாம் என்று வெளியிட்ட அரசாணை 97ன்படி பட்டா வழங்கலாம் என பாதிக்கப்பட்ட மக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர். பி.ஆர் நினைவு தினத்தையொட்டி நடைபெற்ற மனு கொடுக்கும் இயக்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் என்.பாலசுப்பிரமணி, மாவட்டக்குழு உறுப்பினர் பா.லலிதா, மாதர் சங்க தாலுகா செயலாளர் தனலட்சுமி ஆகி யோர் உடனிருந்தனர்.</p>
<p> </p>
