தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நகர தபால் நிலையத்தில் செல்வமகள் சேமிப்பு திட்ட நிதி வாங்க மறுப்பு

31 Dec 2025, 3:37 pm
நகர தபால் நிலையத்தில் செல்வமகள் சேமிப்பு திட்ட நிதி வாங்க மறுப்பு
<p><strong>நகர தபால் நிலையத்தில் செல்வமகள் சேமிப்பு திட்ட நிதி வாங்க மறுப்பு</strong></p> <p>வாடிக்கையாளர்கள் அவதி விருதுநகர், டிச.31- விருதுநகர் நகர தபால் நிலை யத்தில், எவ்வித முன் அறிவிப்பு மின்றி செல்வமகள் சேமிப்பு திட் &nbsp;டத்தில் பணம் செலுத்த மறுக்கப் படுவதால், வாடிக்கையாளர்கள்பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். 2015ஆம் ஆண்டு ஒன்றிய அர சால் பெண் குழந்தைகளின் நலன் கருதி செல்வமகள் சேமிப்பு திட்டம் &nbsp;அறிமுகப்படுத்தப்பட்டது. இத் திட்டத்தில், பெற்றோர்கள் தங்க ளின் முதல் மற்றும் இரண்டாவது பெண் குழந்தைகளுக்காக மாதந் தோறும் குறைந்தபட்சம் ரூ.500 முதல் சேமிக்கலாம் என்றும், குழ ந்தை 19 வயதை எட்டியதும் &nbsp;முதிர்வுத் தொகையை பெற்றுக் கொள் &nbsp;ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பெண் குழந்தையுள்ள பெற்றோர்கள் பலர் &nbsp;அஞ்சலகங்களில் சேமிப்புக் கணக் &nbsp;குகளைத் தொடங்கி, குழந்தை களின் உயர்கல்வி மற்றும் திரு மணம் உள்ளிட்ட எதிர்கால தேவை களை கருத்தில் கொண்டு தொட ர்ந்து பணம் செலுத்தி வருகின்றனர். இத்தொகையை அந்தந்த வட் &nbsp;டங்களில் உள்ள தபால் நிலையங்க ளில் செலுத்தலாம் என அறிவிக்கப் &nbsp;பட்டிருந்ததால், பொதுமக்கள் எளி தாக சேமிப்பை மேற்கொண்டு வந்த னர். இந்த நிலையில், விருதுநகர் பழைய பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வந்த தபால் நிலையம் &nbsp;எவ்வித முன் அறிவிப்புமின்றி திடீ ரென மூடப்பட்டது. அங்கு பணி யாற்றி வந்த ஊழியர்கள், தேச பந்து மைதானம் அருகே உள்ள &nbsp;விருதுநகர் நகர தபால் நிலை யத்திற்கு மாற்றப்பட்டனர். இத னால், உள்ளூர் மற்றும் வெளியூ ரைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள் நகர தபால் நிலையத்திற்குச் செல்ல &nbsp;வேண்டிய நிலை ஏற்பட்டது. குறிப்பாக செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் அதிகளவில் இங்கு வருகை தந்தனர். இந்நிலையில், நகர தபால் நிலையத்தில் பணிபுரியும் ஊழி யர்கள், செல்வமகள் சேமிப்பு திட் &nbsp;டத்தில் பணம் செலுத்த வேண்டு மெனில், மல்லாங்கிணறு சாலை யில் உள்ள தலைமைத் தபால் &nbsp;நிலையத்தில்தான் செலுத்த வேண் &nbsp;டும் என தெரிவித்து வருகின்றனர். இதனால், வாடிக்கையாளர்கள் பெரும் அலைக்கழிப்புக்கு உள் &nbsp;ளாகியுள்ளனர். மேலும், நெரி சல் மிகுந்த மல்லாங்கிணறு சாலை யில் கூடுதல் நேரம் செலவழித்து பணம் செலுத்த வேண்டிய சூழ் நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். எனவே, வாடிக்கையாளர் களின் நலன் கருதி, விருதுநகர் நகர &nbsp;தபால் நிலையத்தில் தொடர்ந்து செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் &nbsp;பணம் செலுத்த உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும் என &nbsp;பொதுமக்கள் வலியுறுத்தியுள்ள னர். மேலும், மூடப்பட்ட என்.ஜி.ஓ. காலனி மற்றும் பழைய பேருந்து நிலைய தபால் நிலையங்களை மீண்டும் திறக்க வேண்டும். அதோடு, &nbsp;அந்த இடங்களில் ரயில் டிக்கெட் முன்பதிவு சேவை மையங்களை யும் தொடங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.