ரீத்தாபுரம் பிராவிடன்ஸ் பள்ளியில் வகுப்பறை நூலகம் உருவாக்கம்
31 Oct 2026, 10:14 pm

ரீத்தாபுரம் பிராவிடன்ஸ் பள்ளியில் வகுப்பறை நூலகம் உருவாக்கம்

நாகர்கோவில், அக்.31-கன்னியாகுமரி மாவட்டம் ரீத்தாபுரம் பிராவிடன்ஸ் மேல்நிலைப்பள்ளியில் அப்பள்ளியின் முன்னாள் மாணவியும் மறைந்த ஆசிரியருமான ரேவதி ராணி நினைவு வகுப்பறை நூலகம் உருவாக்கப்பட்டது. மாணவி நிலா வரவேற்றார்.தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் சசிக்குமார் நிகழ்ச்சியை அறிமுகப்படுத்தி புத்தகம் குறித்து பாடல் பாடினார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டத் துணைத் தலைவர் டோமினிக் ராஜ் நிகழ்ச்சியை அறிமுகப்படுத்தி புத்தகங்கள் வாசிப்பதால் ஏற்படும் மாற்றங்கள் குறித்துஎடுத்துரைத்தார். தலைமை ஆசிரியர் அருட்சகோதரி புனிதா தலைமை உரையாற்றினார்.

நூலகப் பொறுப்பாசிரியர் அல்கா சகாய ரோஸ் வாசிப்பின் அவசியம் குறித்து எடுத்துக் கூறினார்.புத்தகங்களை வாசிப்பதாகவும் அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகவும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.