தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

இளைய தலைமுறைக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வேலை நேரத்தைக் குறைக்க வேண்டும்

10 May 2026, 10:07 pm
இளைய தலைமுறைக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வேலை நேரத்தைக் குறைக்க வேண்டும்

இளைய தலைமுறைக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வேலை நேரத்தைக் குறைக்க வேண்டும்

மதுரையில் எஸ். கண்ணன் முழக்கம் மதுரை, மே 10 - உழைக்கும் மக்களின் உன்னதத் திருநாளான மே தினத்தை முன்னிட்டு, சிஐடியு மற்றும் ஏஐடியுசி மதுரை மாநகர் மாவட்டக் குழுக்கள் சார்பில் 140-வது மே தின பொதுக்கூட்டம் சனிக்கிழமை மாலை நடைபெற்றது.

சிஐடியு மாவட்டச் செயலாளர் இரா. லெனின் தலைமையில் நடைபெற்ற இந்தப் பொதுக்கூட்டத்தில், சிஐடியு மாநிலப் பொதுச் செயலாளர் எஸ். கண்ணன் சிறப்புரையாற்றினார்.

அவர் தனது உரையில் முன்வைத்த முக்கிய அம்சங்கள் வருமாறு: தொழில்நுட்ப வளர்ச்சியும் வேலைவாய்ப்புச் சுரண்டலும் “உலக அளவில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப வளர்ச்சி, குறிப்பாக செயற்கை நுண்ணறிவு (AI), மனித உழைப்பிற்கான தேவையைச் சுருக்கி வருகிறது.

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), விப்ரோ, ஆரக்கிள் போன்ற முன்னணி நிறுவனங்களில் பணிநீக்கங்கள் அதிகரித்து வருவதை நாம் காண்கிறோம்.

இத்தகைய தானியங்கி மயமாக்கல் சூழலில், வேலைவாய்ப்புகளைப் பாதுகாக்க வேண்டியது அவசியம்.

எனவே, தற்போதுள்ள 8 மணி நேர வேலை நேரத்தைக் குறைப்பதன் மூலம் மட்டுமே, புதிய இளைய தலைமுறைக்குத் தேவையான வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும்.

முதலாளித்துவ வளர்ச்சி என்பது தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டியே கட்டமைக்கப்படுகிறது என்ற கார்ல் மார்க்ஸின் கூற்று இன்றும் பொருந்தும்.

அன்று சிகாகோ தியாகிகள் சிந்திய இரத்தத்தால்தான் 8 மணி நேர வேலை, வார விடுமுறை போன்ற உரிமைகள் கிடைத்தன

. அந்தப் போராட்ட வரலாற்றை இன்றைய தலைமுறைக்குச் சொல்லித்தர வேண்டியது நமது கடமை.” மத்திய - மாநில அரசுகளின் கொள்கைகள் “ஒன்றிய பாஜக அரசின் கொள்கைகள் முற்றிலும் கார்ப்பரேட் முதலாளிகளுக்குச் சாதகமாக உள்ளன.

வட இந்திய மாநிலங்களில் நடைபெறும் தொழிலாளர் போராட்டங்கள் இதற்குச் சாட்சி. இங்கிலாந்துத் தேர்தலில் தொழிலாளர் விரோதக் கொள்கைகளால் கியர் ஸ்டார்மர் தலைமையிலான கட்சி சந்தித்த பின்னடைவு, ஆட்சியாளர்களுக்கு ஒரு பாடமாகும்.

தமிழகத்தில் புதிய ஆட்சி அமைந்துள்ள நிலையில், தனியார் மயமாக்கல் மற்றும் ஒப்பந்த வேலை முறையைத் தடுத்து, தொழிலாளர் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

” இவ்வாறு எஸ்.கண்ணன் பேசினார். எலி பலவீனமானால் பூனை ஆட்சி செய்யும்: பெரியசாமி எச்சரிக்கை ஏஐடியுசி மாநிலத் துணைத் தலைவர் ந.பெரியசாமி பேசுகையில், “தொழிலாளர் வர்க்கம் பலவீனமாக இருக்கும் வரை சுரண்டல் தொடரும்.

‘எலி பலவீனமானால் பூனை ஆட்சி செய்யும்’ என்ற பழமொழியைப் போல, தொழிலாளர்கள் ஒன்றிணையாததால் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. போராட்டத்திற்கு ஒரு கொடியையும், தேர்தலின் போது வேறு ஒரு கொடியையும் ஏந்தும் இரட்டை மனப்பான்மையைத் தொழிலாளர்கள் கைவிட வேண்டும்.

போராட்டமும் அரசியலும் ஒரே திசையில் பயணிக்க வேண்டும்,” என்றார்.

பாசிச எதிர்ப்பு வெற்றியும் மதுரை மண்ணும் விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் ஜோதி ராமலிங்கம் தனது உரையில், நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய அரசு தொழிலாளர் சட்டங்களை நீர்த்துப்போகச் செய்வதைச் சுட்டிக்காட்டினார்.

சிஐடியு மாவட்டத் தலைவர் எம். பாலசுப்பிரமணியன் பேசுகையில், மே 9-ஆம் தேதி ஹிட்லரின் நாஜி படைகளை வீழ்த்தி சோவியத் செஞ்சேனை கொடி ஏற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க நாளை நினைவு கூர்ந்தார்.

மேலும், மதுரையில் கள்ளழகர் விழா நடைபெறுவதைக் கருத்தில் கொண்டு, மக்களின் வழிபாட்டு உரிமைக்கு இடையூறு நேராத வகையில் இந்தப் பொதுக்கூட்டம் ஒரு வாரம் தள்ளி நடத்தப்பட்டதாக அவர் விளக்கமளித்தார்.

மதுரை மாநகராட்சி முறைகேடு புகார் மதுரை மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மைப் பணியில் ஈடுபட்டுள்ள ‘அவர்லேண்ட்’ நிறுவனம், குப்பைக் கணக்கில் கல், மண் சேர்த்துப் பெரும் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாகப் புகார் எழுப்பப்பட்டது.

சுமார் 150 டன் குப்பைகளைக் கூடுதலாகக் காட்டி மோசடி செய்துள்ள அந்த நிறுவனத்தின் ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனப் பொதுக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் சிஐடியு மற்றும் ஏஐடியுசி அமைப்புகளின் நிர்வாகிகள், தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர். (ந.நி.)

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.