தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதிகளில் பூத்துக் குலுங்கும் செங்காந்தள்

23 Nov 2025, 3:44 pm
மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதிகளில்  பூத்துக் குலுங்கும் செங்காந்தள்
<p><strong>மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதிகளில் &nbsp;பூத்துக் குலுங்கும் செங்காந்தள்</strong></p> <p>இராஜபாளையம், நவ.23- விருதுநகர் மாவட்டம் இராஜ பாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் தமிழக அரசின் மலரான செங்காந்தள், கார்த்திகை மாதத்தில் பூத்துக் குலுங்கி சுற்றுப் புறத்தை கவர்ந்திழுக்க வைத்துள்ளது. கார்த்திகை 1ஆம் தேதி முதல் &nbsp;மலரத் தொடங்கும் இந்த மலர்கள் மாத இறுதிக்குள் உதிரும் இனத்தைச் சேர்ந்தவை. இளம் சிகப்பு மற்றும் மஞ்சள் கலந்த ஒளிரும் நிறத்துடன் கொத்துக் கொத்தாக பூக்கும் செங்காந்தள், இயற்கைச் சூழலில் ரம்மியமான தோற்றத்தை ஏற்படுத்து வதால் &lsquo;கார்த்திகை பூ&rsquo; என்றும் &lsquo;கண்வழிப்பூ&rsquo; என்றும் அழைக்கப்படு கிறது. இராஜபாளையம் அய்யனார் கோவில் மற்றும் செண்பகத் தோப்பு செல்லும் பகுதிகளில் பெருமளவில் மலர்ந்துள்ளதால் தினமும் சுற்றுலாப் பயணிகள் திரளாக வந்து ரசித்து வரு கின்றனர். இம்மலரின் வேர்க்கிழங்கு சித்த மருத்துவத்தில் அரிதானது எனக் கருதப்படுவதால் பெரியகுளம், கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சிலர் வேர்களை பிடுங்கிச் செல்வது அதிகரித்துள்ளது. இத னால் செங்காந்தள் செடிகள் வேரின்றி காய்ந்து அழியும் அபாயம் ஏற்பட்டு ள்ளதாக உள்ளூர் மக்கள் கவலை தெரி விக்கின்றனர். கார்த்திகை மாத முடிவில் பூத்துப் &nbsp;பூரண வளர்ச்சி அடைந்த பிறகே வேரை எடுப்பது முறையாக இருப்பி னும், பூத்த உடனேயே கிழங்கு எடுக்கப்படுவது மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்துகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டு மாநில மலரான செங்காந்தளை பாது காக்கவும், பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கண்டுகளிக் கும் வகையில் பாதுகாப்பு நட வடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளவும் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.