தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

செங்கடல் பாதை மூடல்! இந்தியாவில் எரிசக்தி நெருக்கடி அபாயம்

18 Jul 2026, 8:47 pm
செங்கடல் பாதை மூடல்! இந்தியாவில் எரிசக்தி நெருக்கடி அபாயம்
<p><strong>செங்கடல் பாதை மூடல்! இந்தியாவில் எரிசக்தி நெருக்கடி அபாயம்</strong> </p><p>ஈரான் மீது அமெரிக்கா தொ டர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரானும் பதிலடியாக மேற்கு ஆசியாவில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் அமெரிக்கா ஈரானின் மின்சார உள்கட்டமைப்பைத் தாக்கி னால், செங்கடலையும் ஏமன் வளை குடாவையும் இணைக்கும் முக்கியமான ‘பாப் எல்-மண்டேப்’ ஜலசந்தியை மூடுமாறு ஏமனின் ஹவுதி அமைப்பிற்கு ஈரான் உத்தரவிட்டுள்ளதாகத் தகவல் கள் வெளியாகியுள்ளன. ஹோர்முஸ் நீரிணைப் போல செங்கடல் பகுதியும் மூடப்பட்டால் உலக நாடுகள் கச்சா எண்ணெய் கிடைக்கா மல் நெருக்கடியில் விழும் அபாயம் எழும். குறிப்பாக இந்தியா பெரும் எரிசக்தி நெருக்கடியில் விழும் அபாயம் உள்ளது என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஹோர்முஸ் நீரிணை ஏற்கெனவே மூடப்பட்ட நிலையில், சவூதி அரேபியா தனது கச்சா எண்ணெய்யை கிழக்கு-மேற்கு குழாய்த்திட்டம் மூலம் செங் கடல் துறைமுகங்களுக்கு அனுப்பி வருகிறது. இச்சூழ்நிலையில் செங் கடல் பாதையும் முடக்கப்பட்டால், இந்தியாவின் கச்சா எண்ணெய் விநியோ கம் கடுமையாகப் பாதிக்கப்படும். சவூதி அரேபியா இந்தியாவின் மூன்றாவது பெரிய கச்சா எண்ணெய் விநியோகஸ்தராக உள்ளது. இந்தியா வில் உள்ள சுத்திகரிப்பு ஆலைகளில் சுமார் 20 நாட்களுக்கு மட்டுமே தேவை யான இருப்பு உள்ளது. இந்நிலையில் செங்கடல் பாதை முடக்கப்பட்டால் அது நாட்டின் எரிசக்தித் தேவையில் பெரும் தட்டுப்பாட்டை உருவாக்கும் என்று ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் எரிசக்தி ஆய்வாளர் புரோபால் சென் எச்சரித்துள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.