தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அன்று பாசிசத்தை வீழ்த்திய செங்கொடி, இன்று நவபாசிசத்தையும் வீழ்த்தும்! - அ.அன்வர் உசேன்

11 May 2026, 9:09 pm
அன்று பாசிசத்தை வீழ்த்திய செங்கொடி, இன்று நவபாசிசத்தையும் வீழ்த்தும்! - அ.அன்வர் உசேன்

அன்று பாசிசத்தை வீழ்த்திய செங்கொடி, இன்று நவபாசிசத்தையும் வீழ்த்தும்! - அ.அன்வர் உசேன்

பாசிச ஜெர்மனியை சோசலிச சோவியத் யூனியன் வீழ்த்திய 81-ஆவது ஆண்டு வெற்றி தினம், 2026 மே 9 அன்று மாஸ்கோவில் மிகப்பிரம்மாண்டமாக நடந்து முடிந்துள்ளது. சோவியத் யூனியனில் சோசலிசம் பின்னடைவைச் சந்தித்த பொழுதும், ரஷ்ய மக்களின் சிந்தனை யிலும் உணர்விலும் ஒன்றுகலந்த இந்த வெற்றித் திரு விழா தலைமுறை தலைமுறையாகத் தொடர்கிறது. ரஷ்யா ஒரு முதலாளித்துவ தேசமாக மாறிய பின்ன ரும், இந்த நிகழ்ச்சி இவ்வளவு பிரம்மாண்டமாகக் கடைப்பிடிக்கப்படுவதற்கு ஒரு வரலாற்றுத் தேவை இருக்கிறது.

ஏகாதிபத்திய தேசங்களால் ரஷ்யா பழிவாங்கப்படு வது இன்றும் தொடர்வதால், செஞ்சேனையின் வெற்றி குறித்த பெருமிதங்களை அழுத்தமாக நினைவுபடுத்த வேண்டிய தேவை ரஷ்ய ஆட்சியாளர்களுக்கு உள்ளது. செஞ்சேனையின் வெற்றி எனில், அதற்குத் தலைமை தாங்கிய மகத்தான தலைவர் ஸ்டாலினை அதிலிருந்து பிரிக்கவே இயலாது. உக்ரைனை ஒரு பகடைக்காயாக வைத்து அமெரிக்காவும் நேட்டோ நாடுகளும் ரஷ்யாவைச் சிதைக்க முயலும் இத்தரு ணத்தில், இத்தகைய வெற்றி விழாக்கள் ரஷ்ய மக்களின் வீரத்தையும் தேசப்பற்றையும் முன்நிறுத்த முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறுகின்றன.

அதீத கம்யூனிச எதிர்ப்பு: முதலாளித்துவ நாடுகளின் நயவஞ்சகம்

இரண்டாம் உலகப்போர் என்பது வெறுமனே இரு ராணுவப் பிரிவுகளிடையே நடந்த போர் அல்ல! அது உலகை அச்சுறுத்திக் கொண்டிருந்த பாசிச சக்திகளுக்கும் ஜனநாயக சக்திகளுக்கும் இடையே நடந்த போர் ஆகும். ஜெர்மானிய ஆரிய இனத்தின் பரிசுத்தத் தன்மையை நிலைநாட்ட இனப்படுகொலை செய்த ஹிட்லரின் நாஜிச வடிவத்திலான பாசிசமும், இத்தாலிய முசோலினியின் பாசிசமும், சீன மக்களை அழிக்க எத்தனித்த ஜப்பானின் சர்வாதிகாரி யும் அன்று கைக்கோர்த்தனர். இவர்களின் முதல் இலக்கு சோசலிசம் மட்டுமே. முதல் சோசலிச அரசை வீழ்த்துவது ஹிட்லரின் நோக்கம் எனில், இத்தாலி யில் வளர்ந்து வந்த சோசலிச சக்திகளை அழிப்பதே முசோலினியின் நோக்கமாக இருந்தது. சீனக் கம்யூ னிஸ்டுகளை வேட்டையாடுவது அன்றைய ஜப்பானிய சர்வாதிகார சக்திகளுக்குத் தேவையாக இருந்தது.

ஜெர்மனியில் முதலாளித்துவம் மிகக் கொடூர மான பாசிச வடிவத்தை எடுத்து வருகிறது என்பதை சோவியத் யூனியன் 1928-ஆம் ஆண்டிலிருந்தே உலகிற்கு எச்சரித்தது. இந்த பாசிசக் கூட்டணியை முறியடிக்க அனைத்து நாடுகளும் ஒரு ‘ஐக்கிய முன்னணி’ அமைக்க வேண்டும் என சோவியத் யூனியன் வலியுறுத்தியது. எனினும் பிரான்ஸ், பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகள் செவிமடுக்கவில்லை. அவர்களுக்கு சோசலிசப் புரட்சிதான் பாசிசத்தை விட அதிக பயத்தை அளித்தது. அமெரிக்க ஜனாதி பதி ஹாரி ட்ரூமனின் கீழ்க்கண்ட கூற்று அவர்களின் கம்யூனிச எதிர்ப்பை மிகத் தெளிவாக வெளிப்படுத்தியது:

“ஜெர்மனி வெல்வது போலச் சூழல் உருவானால் நாம் ரஷ்யாவுக்கு உதவ வேண்டும். ரஷ்யா வெல்வது போலச் சூழல் உருவானால் நாம் ஜெர்மனிக்கு உதவ வேண்டும். அந்த வகையில் அவர்களுக்குள் போரிட்டுக் கொண்டு அதிகபட்சம் ஒருவருக்கொருவர் கொன்று குவித்துக் கொள்ளட்டும்.” கம்யூனிச எதிர்ப்பு அவர்களின் கண்களை மறைத்தபோதும், சோவியத் யூனியன் ஒற்று மைக்காகத் தொடர்ந்து கடினமாக உழைத்தது. அதே சமயத்தில் போருக்குத் தன்னை ஆயத்தப்படுத்திக் கொண்ட சோவியத், 1941-இல் ஹிட்லர் தாக்கியபோது தன்னந்தனியாக நின்று வீரத்துடன் போரிட்டது.

கடைசிச் சொட்டு இரத்தம் வரை போராடிய சோவியத் மக்கள்

1941 ஜூலை 31 அன்று சோவியத் மக்களுக்கு ஆற்றிய உரையில் ஸ்டாலின் இவ்வாறு குறிப்பிட்டார்: “ஜெர்மனியுடன் நடக்கும் இந்த யுத்தம் சாதாரண யுத்தம் அல்ல. இது இரண்டு இராணுவங்களுக்கு இடையே நடந்த யுத்தம் அல்ல. மாறாக, இது பாசிச ஜெர்மனி இராணுவத்திற்கு எதிராக அனைத்து சோவியத் மக்களின் வரலாறு காணாத யுத்தம் ஆகும்.”

சோவியத் மக்கள் காட்டிய அந்தத் தீரம்தான் ஹிட்லருக்கு முதல் தோல்வியைப் பரிசளித்தது. அதற்குப் பின்னர்தான் ஏனைய முதலாளித்துவ நாடுகளுக்கு நம்பிக்கை ஏற்பட்டது. இரண்டாம் உலகப்போரில் பலியான 6 கோடி பேரில், சோவியத் யூனியன் மட்டும் 2.5 கோடி மக்களை உயிர்த்தியாகம் செய்தது. இதில் 95 லட்சம் மாவீரர்களும் அடங்குவர். சோவியத் யூனியன் சந்தித்த இழப்புகள் மனித கற்பனைக்கு அப்பாற்பட்டவை. 1,700 நகரங்கள் தரைமட்டமாக்கப்பட்டன; 27,000 கிராமங்கள் அழிந்தன. 61,600 கி.மீ. நீளமுள்ள இருப்புப் பாதை நாச மானது – இது பூமியின் சுற்றளவைவிடக் கூடுதல் என்பதில் இருந்தே பாதிப்பின் அளவைப் புரிந்து கொள்ளலாம்.

மேலும், 90 சதவீத நிலக்கரிச் சுரங்கங்கள், 30,000-க்கும் அதிகமான ஆலைகள், 84,000 பள்ளிகள் மற்றும் 43,000 நூலகங்கள் தரைமட்டமாயின. சுமார் 70 லட்சம் குதிரைகள், 170 லட்சம் கால்நடைகள் கொல்லப் பட்டன அல்லது களவாடப்பட்டன. இது குறித்து அமெரிக்கப் படைகளின் தளபதியும், பின்னாளில் ஜனாதிபதியுமான ஐசன்ஹோவர் தனது நினைவுக் குறிப்புகளில், “1945-இல் நான் விமானத்தில் செல்லும் போது கண்ட காட்சிகள் சொல்ல முடியாத மனவேத னையை அளித்தன. மேற்கு எல்லையிலிருந்து மாஸ்கோ வரை ஒரு வீடுகூட முழுமையாக இல்லை” எனப் பதிவு செய்துள்ளார். இவ்வளவு பெரிய இழப்பு களைச் சந்தித்துத் தான் சோவியத் யூனியன் உலகைப் பாசிசத்திடமிருந்து காப்பாற்றியது.

நவபாசிசத்தையும் வீழ்த்துவோம்!

1945-இல் வீழ்த்தப்பட்ட பாசிசம் இன்று ‘நவபாசிசமாக’ உலகின் பல பகுதிகளில் தலை யெடுத்து வருகிறது. அதில் ஆர்.எஸ்.எஸ். முன்வைக்கும் “இந்துத்துவா” என்பது இந்திய வடிவத்தி லான பாசிசம் ஆகும். பழைய பாசிசத்துடன் இந்துத்துவா சக்திகள் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தனர். இந்துத்துவாவின் பிதாமகர்களில் ஒருவரான பி.எஸ். மூஞ்சே நேரடியாக முசோலினி யைச் சந்தித்துப் பேசினார். ஹிட்லர் சிறுபான்மை யூதர்களை இனப்படுகொலை செய்த நடைமுறை களை இந்தியாவில் கையாள வேண்டும் என அன்றே கோல்வால்கர், சாவர்க்கர் ஆகியோர் பாராட்டியதுடன் வாதிடவும் செய்தனர்.

இன்று இந்தியாவின் பன்முகத்தன்மையை அழிக்க எத்தனிக்கும் ஒரு ஆக்டோபஸாக இந்துத்துவா முன்வந்துள்ளது. சிறுபான்மை மக்களுக்கு எதிராகப் பெரும்பான்மை மக்களை அணி திரட்ட முயலும் அதேவேளையில், இந்து மதத்திற்குள் இருக்கும் வர்ணாசிரமத்தையோ அல்லது மனுவாத கருத்தியலையோ அது நிராகரிப்பதில்லை. தமிழ் போன்ற மொழிகளின் தனித்தன்மையைச் சிதைத்து, அனைத்தையும் ஒரே குடையின் கீழ் அடைக்க முயற்சிகள் ஏவப்படுகின்றன. அனைத்துவிதமான பன்முகத்தன்மைகளையும் காலில் போட்டு மிதிக்க நவீன பாசிச சக்திகள் முயல்கின்றன.

இந்தியாவில் இந்துத்துவாவையும் ஏனைய மதவாதங்களையும் எதிர்த்து எவ்விதச் சமரசமு மின்றி உறுதியாகப் போராடும் குணம் கொண்டது செங்கொடி இயக்கம் மட்டுமே! அனைத்து ஜனநாயக சக்திகளையும் ஓரணியில் திரட்ட அயராது பாடுபடும் இயக்கம் இது. பழைய பாசிசத்தை வீழ்த்திய பெருமை செங்கொடிக்கே உண்டு; அதுபோல இந்தியாவின் நவீன பாசிசத்தை வீழ்த்தும் கடமையிலும் செங்கொடியே முன்நிற்கும்!

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.