முந்தய பக்கம்

சிவப்பு புத்தக வாசிப்பு இயக்கம்

24 Feb 2026, 3:55 pm
சிவப்பு புத்தக வாசிப்பு இயக்கம்
<p><strong>சிவப்பு புத்தக வாசிப்பு இயக்கம்</strong></p> <p>நாகப்பட்டினம், பிப்.24 &nbsp;சிவப்பு புத்தக வாசிப்பு தினத்தை முன்னிட்டு, நாகை தெற்கு ஒன்றியத்தில் &nbsp; &ldquo;கூலி உழைப்பும் மூலதனமும்&rsquo;&rsquo; என்ற தலைப்பில் வாசிப்பு முகாம் நடைபெற்றது. &nbsp;பாப்பாகோவிலில் உள்ள நாகை தெற்கு ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற &nbsp;இந்த நிகழ்ச்சியில், கீழ்வேளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகைமாலி, தெற்கு ஒன்றியச் செயலாளர் வடிவேல் மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினர்கள், கிளைச் செயலாளர்கள், கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். &nbsp;மயிலாடுதுறை &nbsp;மயிலாடுதுறை மாவட்டத்தில், மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில், மயிலாடுதுறை, தரங்கம்பாடி, செம்பனார்கோவில், குத்தாலம், சீர்காழி, கொள்ளிடம், மயிலாடுதுறை நகரம் ஆகிய ஒன்றியக் குழுக்கள் சார்பில், 20-க்கும் மேற்பட்ட குழுக்களாக பிரிக்கப்பட்டு வாசிப்பு இயக்கம் நடைபெற்றது. &nbsp;தரங்கம்பாடி ஒன்றியக் குழு அலுவலகமான திருக்கடையூர் ஏகேஜி பவனில் மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன் வாசிப்பு இயக்கத்தை துவக்கி வைத்தார். &nbsp;ஒன்றியச் செயலாளர் ஏ. ரவிச்சந்திரன் மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினர்கள், கிளைச் செயலாளர்கள், முன்னணி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram