தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருச்சி விரைவு செய்திகள்

21 Feb 2026, 3:26 pm
திருச்சி விரைவு செய்திகள்

இராமநாதபுரத்தில் சிவப்பு  புத்தகம் வாசிப்பு இயக்கம்

இராமநாதபுரம், பிப்.21- இராமநாதபுரம் மாவட்டத்தில் சிவப்பு புத்தகம் தினத்தையொட்டி கூலி உழைப்பும் மூலதனமும் என்ற  புத்தகத்தை வாசிக்கும் வாசிப்பு இயக்கம் மாவட்டத்தில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்றது. அதில் ஒரு பகுதியாக இராமநாதபுரம் தாலுகா குழு சார்பாக இராமநாதபுரத்தில் கே.ராகுல் தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் ரெ.குருவேல், தாலு காச் செயலாளர் என்.வெங்கடேஷ், மாவட்டக்குழு உறுப்பினர்கள் பி.கல்யாணசுந்தரம், டி.முத்துப்பாண்டி, தாலுகா குழு உறுப்பினர் எஸ்.பி.பூமிநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

பிப்.23 - கல்விக் கடன் சிறப்பு முகாம்

சிவகங்கை, பிப்.21- சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாண வர்கள் பயன்பெறும் வகையில் கல்விக் கடன் பெறு வதற்கான சிறப்பு முகாம் வரும் 23 ஆம் தேதி நடைபெறு கிறது என்று மாவட்ட ஆட்சித் தலைவர் கா.பொற்கொடி தெரிவித்துள்ளார். அனைத்து வங்கிகளின் சார்பில் நடைபெறும் முகா மில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் https://pmvidyalaxmi.co.in இணையதளத்தில் பதிவு செய்த விண்ணப்ப நகல், மாணவர் மற்றும் பெற்றோரின் புகைப்படங்கள், கூட்டு வங்கி கணக்கு பாஸ்புக் நகல், இருப்பிடச் சான்று, வருமானச் சான்று, சாதிச் சான்று, பான் கார்டு, ஆதார் அட்டை நகல், கல்லூரி வழங்கிய அசல் Bonafide சான்றிதழ், கல்விக் கட்டண விவரம், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மற்றும் பிற படிப்புகளின் மதிப்பெண் சான்றிதழ்கள், முதல் பட்டதாரி சான்று  (இருந்தால்), கலந்தாய்வு மூலம் பெற்ற சேர்க்கை ஆணை  உள்ளிட்ட ஆவணங்களுடன் வர வேண்டும். முகாமில் பெறப்படும் விண்ணப்பங்கள் வங்கி களின் விதிமுறைகளின்படி பரிசீலிக்கப்பட்டு தகுதியான வர்களுக்கு உடனடி கல்விக் கடன் ஒப்புதல் வழங்கப் படும் என்றும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மகாத்மா வித்யாலயா பள்ளியில்  விளையாட்டு விழா

திருவில்லிபுத்தூர், பிப்.21- மகாத்மா வித்யாலயா பள்ளியில் 22-வது ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்ற விருந்தினர்களை பள்ளித் தாளாளர் முருகேசன் வரவேற்றார். முதல்வர் ராணி முன்னிலை வகித்தார். ஆசிரியை நர்மதா விளையாட்டு விழா ஆண்டு அறிக்கையை வாசித்தார். திருவில்லிபுத்தூர் இன்னர் வீல் சங்கம் தலைவர் டாக்டர் சுகுமாரி மற்றும் செயலாளர் சாந்தி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். விழாவின் ஒரு பகுதியாக மாணவர்களின் வண்ணமய மான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கராத்தே, யோகா,  சிலம்பம், வில்வித்தை உள்ளிட்ட பல்வேறு திறன்களை  மாணவர்கள் வெளிப்படுத்தினர். மேலும் மாணவர் களுக்கு பல்வேறு விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்  பட்டன. ஆசிரியர்களுக்கான சிறப்பு போட்டிகளும் நடந்தன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவி யர்களுக்கு சிறப்பு விருந்தினர்கள் பரிசுகளை வழங்கினர்.  பள்ளி ஒருங்கிணைப்பாளர் அருணா நன்றி கூறினார்.

அங்கன்வாடி மையங்களுக்கு  கற்றல் உபகரணங்கள் வழங்கும் விழா

இராமநாதபுரம், பிப்.21- மாவட்ட ஆட்சியர் அலுவலக பயிற்சி மையத்தில், பாவை பவுண்டேஷன் சார்பில் அங்கன்வாடி மையங்க ளுக்கு கற்றல் திறன் மேம்பாட்டு உபகரணங்கள் வழங்கும்  நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் விஸ்பவதி தலைமை தாங்கி னார். பாவை பவுண்டேஷன் மாவட்ட ஒருங்கிணைப்பா ளர் கனகராஜ் முன்னிலை வகித்தார். குழந்தைகளின் ஆரம்பக் கல்வித் தரத்தை உயர்த் தும் நோக்கில் கற்றல் விளையாட்டு பொருட்கள், அறி வாற்றல் வளர்ச்சிக்கான உபகரணங்கள் மற்றும் குழந்தை களின் உயரத்தை கண்காணிக்கும் அளவீட்டு கருவிகள் அங்கன்வாடி பணியாளர்களுக்கு வழங்கப்பட்டன.

சட்டவிரோத மது விற்பனை:  2 பேர் கைது

திருவில்லிபுத்தூர், பிப். 21- வத்திராயிருப்பு காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட  அரசு மருத்துவமனை அருகே, சார்பு ஆய்வாளர் கோட்டி யப்பசாமி தலைமையிலான போலீசார் ரோந்து சென்ற போது மேலப்பாளையத்தைச் சேர்ந்த ஈஸ்வரன் என்பவர்  அரசு அனுமதி இன்றி 26 மது பாட்டில்களை விற்பனைக்கு  வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மது  பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு அவர் மீது வழக்குப்  பதிவு செய்யப்பட்டது. அதேபோல் கூமாபட்டி காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட கான்சாபுரம் கல்மண்டபம் அருகே, சார்பு  ஆய்வாளர் முருகானந்தம் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றபோது கான்சாபுரத்தைச் சேர்ந்த முருகன் என்பவர் அனுமதி இன்றி மதுபாட்டில்கள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. அவரிடமிருந்து 26 மது  பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு அவர் மீது வழக்குப்  பதிவு செய்யப்பட்டது. இரு சம்பவங்களிலும் பறிமுதல் செய்யப்பட்ட மது  பாட்டில்களை கைப்பற்றி, மேலும் விசாரணை நடை பெற்று வருகிறது என போலீசார் தெரிவித்தனர்.

வாகனம் மோதி பெண் உயிரிழப்பு

ஸ்ரீவில்லிபுத்தூர், பிப்.21- ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கொழூர்பட்டியில் வசித்து வந்த சாந்தி வெள்ளிக்கிழமை சிவகாசி மெயின் ரோடு செல்லும் சாலையை கடக்க முயன்றபோது, அத்திக்குளம் காலனியைச் சேர்ந்த மணிகண்டன் ஓட்டி வந்த இருசக்  கர வாகனம் மோதியது. இந்த விபத்தில் சாந்திக்கு தலையில் ரத்தக்காயம், வலது தொடையில் எலும்பு முறிவு மற்றும் இடது கை மணிக்கட்டில் சிராய்ப்பு காயம் ஏற்பட்டது. சம்பவ இடத்தி லேயே மயங்கி விழுந்தார். தகவல் அறிந்த அவரது தம்பி கார்த்திகேயன், 108  ஆம்புலன்ஸ் மூலம் அவரை ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தார். அங்கு சிகிச்சை அளிக்  கப்பட்டும், சாந்தி உயிரிழந்தார்.

காலி நிலத்தில் புற்கள் எரிந்து தீ விபத்து

ஸ்ரீவில்லிபுத்தூர், பிப்.21- குடியிருப்பு பகுதியில் காலி நிலத்தில் இருந்த காய்ந்த புற்கள் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பர பரப்பு ஏற்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம், சிவ காசி செல்லும் சாலையில் மாவட்ட  நீதிமன்றம் அருகே உள்ள ராஜீவ்  காந்தி நகர் குடியிருப்பு பகுதி யில் சனிக்கிழமை மதியம் இந்த  சம்பவம் நடைபெற்றது. குடி யிருப்பு வீடுகளுக்கு அருகிலுள்ள காலி நிலத்தில் காய்ந்த புற்கள் அதிகமாக இருந்த நிலையில் திடீ ரென தீப்பற்றி எரிந்தது. வெயிலின் தாக்கம் அதிகமாக  இருந்ததும், பலத்த காற்று வீசி யதும்  தீ வேகமாக பரவி அருகி லுள்ள வீடுகளுக்கு ஆபத்து ஏற்பட்டது. இதையடுத்து பகுதி மக்கள் தகவல் அளித்ததன் பேரில் ஸ்ரீ வில்லிபுத்தூர் தீயணைப்பு நிலை யத்தினர் நிலைய அலுவலர் மற்றும் போக்குவரத்து அலுவலர் சுந்தர்ராஜன் தலைமையில் தீய ணைப்பு வீரர்கள் ராஜ்குமார், கருப்ப சாமி, சாந்தி, செல்வராஜ், கண் ணன், வெங்கடேசபெருமாள் உள்  ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரை ந்து வந்து தீயை கட்டுப்படுத்தி அணைத்தனர்.

தீக்காயம் அடைந்து சிகிச்சையில் இருந்தவர் பலி

ஸ்ரீவில்லிபுத்தூர், பிப்.21- தீக்காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஒருவர் மதுரையில் உயிரிழந்தார். ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம், வன்னியம் பட்டி காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட அழகு தெய்வேந்திரபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வீராசாமி. கடந்த ஜனவரி 25 அன்று அரை லிட்டர் பெட்ரோல் வாங்கி, குடிபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார். வண்டிக்கு பெட்ரோல் ஊற்ற வேண்டும் என கூறி பெட்ரோல் கேனை அருகில் வைத்தபடியே தூங்கியுள்ளார். மாலை சுமார் 4.30 மணியளவில் கேன்  சாய்ந்து பெட்ரோல் வெளியேறிய நிலை யில், தூக்கத்தில் இருந்து எழுந்த வீராசாமி  அதனை கவனிக்காமல் சிகரெட் பற்ற வைத்துள்ளார். இதனால் உடலில் தீப்பற்றி யது. அவரது அலறல் சத்தம் கேட்டு மனைவி  சத்தியப்ரியா, மகன் சஞ்சய் மற்றும் அரு கிலுள்ள உறவினர்கள் வந்து தீயை அணைத்தனர். சம்பவத்தில் தலை முதல் இடுப்பு கீழ்பகுதி வரை உடலின் பின்புறம் கடுமையான தீக்காயம் ஏற்பட்டது. உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், மேல்சிகிச்  சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த வீராசாமி வெள்ளிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து மனைவி சத்தியப்பிரியா அளித்த புகாரின் பேரில் வன்னியம்பட்டி காவல்நிலைய போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தரமற்ற தார்ச்சாலை அமைப்பு நடவடிக்கை எடுக்க சிபிஎம் வலியுறுத்தல்

விருதுநகர், பிப்.21- விருதுநகர் நகராட்சி 15 ஆவது வார்டிற்கு உட்பட்ட  ஐ.சி.ஏ. காலனி, பேராசி ரியர்கள் காலனி உள்ளிட்ட பகுதிகளில் பல லட்சம் ரூபாய் செலவில் அமைக் கப்பட்ட புதிய தார் சாலை தரமின்றி உள்ளதாகக் கூறி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இராமமூர்த்தி சாலை  1-வது தெருவில் அமைந் துள்ள இப்பகுதிகளில் தாமி ரபரணி கூட்டுக் குடிநீர் திட் டத்தின் கீழ் குழாய் பதிப்பு பணிகள் நடைபெற்றதால் சாலைகள் சேதமடைந்தன. இதையடுத்து புதிய தார்  சாலை அமைக்க பொதுமக் கள் கோரிக்கை விடுத்தனர். அதன் பேரில் திட்ட மதிப் பீடு தயாரிக்கப்பட்டு, சேதம டைந்த சாலைகளை சீர மைக்க தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்தது. டெண்டர் வழங்கப்பட்ட தைத் தொடர்ந்து, சில நாட்க ளுக்கு முன்பு இரவு நேரத்தில்  அவசரமாக சாலை அமைக்  கப்பட்டதாக கூறப்படுகிறது.  ஆனால் சாலை மிகவும் தர மற்றதாக உள்ளதாக பொது மக்கள் குற்றம்சாட்டுகின்ற னர். சாலையில் பரப்பப்பட்ட ஜல்லிக் கற்கள் கைக்கு வருவதுடன், கற்கள் சிதறிய நிலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்து நகராட்சி பொறியாளர் பிரபாகரன் கூறுகையில், தற்போது ஒரு  அடுக்கு மட்டுமே அமைக் கப்பட்டுள்ளதால் இந்நிலை ஏற்பட்டதாகவும், அடுத்த கட்டமாக பி.சி. அடுக்கு போடப்பட்ட பிறகு சாலை சீராக இருக்கும் என்றும் தெரிவித்தார். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் நகரச் செய லாளர் எம்.ஜெயபாரத் கூறு கையில், புதிய சாலை பணி கள் நடைபெறும் இடங்களில்  திட்ட விபரம், நீளம், அக லம், ஒப்பந்ததாரர் பெயர் உள்ளிட்ட தகவல்கள் அடங்  கிய அறிவிப்பு பலகை  கட்டாயம் வைக்கப்பட வேண்டும். ஆனால் இப்பகு தியில் அத்தகைய பலகை வைக்கப்படவில்லை என குற்றம்சாட்டினார். மேலும், போதிய அளவு தார் பயன்படுத்தாமல் சிறிய ஜல்லிக் கற்கள் மட்டுமே பரப்பப்பட்டுள்ளதாகவும், ஒரு மழைக்குக் கூட சாலை  தாங்காது என்றும் அவர்  கூறினார். மக்களின் வரிப்  பணம் வீணடிக்கப்பட்டுள்ள தாக குற்றம்சாட்டிய அவர், தரமின்றி சாலை அமைத்த ஒப்பந்ததாரர் மற்றும் சம்  பந்தப்பட்ட அதிகாரிகள் மீது  கடும் நடவடிக்கை எடுக்க  வேண்டும் என தமிழக அர சிடம் புகார் அளிக்கப்பட உள்  ளதாக தெரிவித்தார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.