சிவப்பு புத்தக தின வாசிப்பு
22 Feb 2026, 3:26 pm
<p><strong>சிவப்பு புத்தக தின வாசிப்பு</strong></p>
<p>திருச்சிராப்பள்ளி, பிப்.22- திருச்சி பி.எச்.இ.எல். கணேசா சிஐடியு சங்க அலுவலகத்தில் “கூலி உழைப்பும், மூலதனமும்’’ என்ற புத்தகத்தை முன்வைத்து சிவப்பு புத்தக தின வாசிப்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பெல் சிஐடியு சங்கத்தின் செயலாளர் இசக்கிமுத்து தலைமை வகித்தார். புத்தக வாசிப்பின் கருத்தியலை முன்வைத்து தோழர்கள் கலந்துரையாடல் நடத்தினர். கலந்துரையாடலின் தொகுப்புரையை பெல் சிஐடியு சங்கத்தின் தலைவர் ஸ்ரீதர் வழங்கினார். கூட்டத்தில், சிஐடியு திருச்சி புறநகர் மாவட்டச் செயலாளர் சம்பத் உள்பட பெரும்பான்மையானோர் வாசிப்பு இயக்கத்தில் பங்கேற்றனர். சிஐடியு சங்க பொருளாளர் மோகன்ராஜ் நன்றி கூறினார்.</p>
