முந்தய பக்கம்

திருப்பூர் மாவட்டத்தில் சிவப்பு புத்தக தினம்

21 Feb 2026, 4:39 pm
திருப்பூர் மாவட்டத்தில் சிவப்பு புத்தக தினம்
<p><strong>திருப்பூர் மாவட்டத்தில் சிவப்பு புத்தக தினம்</strong></p> <p>திருப்பூர், பிப். 21- உலக சிவப்பு புத்தக தினத்தை முன்னிட்டு திருப் பூர் மாவட்டத்தில் பல்வேறு &nbsp;பகுதிகளில் கார்ல் மார்க்ஸ் &nbsp;எழுதிய கூலி உழைப்பும், &nbsp;மூலதனமும் நூல் வாசிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. 1848ஆம் ஆண்டில் கம் யூனிஸ்ட் கட்சி அறிக்கை வெளியிடப்பட்ட பிப்ரவரி &nbsp;21ஆம் தேதி, உலக சிவப்புப் புத்தக தினமாக &nbsp;கடந்த 2020ஆம் ஆண்டு முதல் உலகளவில் &nbsp;இடதுசாரி முற்போக்கு வெளியீட்டு நிறுவ னங்களால் கடைப்பிடிக்கப்பட்டு வரு கின்றன. அதன் ஒரு பகுதியாக தமிழகத்தி லும் பல நூறு மையங்களில் சிவப்புப் புத்தக &nbsp;தினம் நிகழ்வு நடைபெறுகிறது. இதில் கார்ல் &nbsp;மார்க்ஸ் எழுதிய கூலி உழைப்பும், மூலதன மும் எனும் சிறு நூல் வாசிக்க தேர்வு செய்யப் பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர், அங் கேரிபாளையம், இடுவாய், வேலம்பாளை யம் தண்ணீர்பந்தல், பெரியார் காலனி, பொங் கலூர் துத்தாரிபாளையம், உடுமலை உள்பட &nbsp;பல்வேறு மையங்களில் இந்த சிவப்புப் புத்தக &nbsp;தின வாசிப்பு நிகழ்வு நடைபெற்றது. இதில் &nbsp;கட்சியின் மாவட்ட செயற்குழு, மாவட்டக் குழு, இடைக்குழு உறுப்பினர்கள், கட்சி &nbsp;கல்விக்குழுவினர் பங்கேற்று கூலி உழைப் பும், மூலதனமும் நூலை அறிமுகம் செய்து &nbsp;வைத்து, புத்தகத்தை வாசித்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram