தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பஞ்சமி நிலங்களை மீட்டு பட்டியல் சாதி மக்களுக்கு வழங்க வேண்டும்!. பஞ்சமி நிலங்களை மீட்டு

2 Aug 2026, 9:54 pm
பஞ்சமி நிலங்களை மீட்டு  பட்டியல் சாதி மக்களுக்கு வழங்க வேண்டும்!. பஞ்சமி நிலங்களை மீட்டு

பஞ்சமி நிலங்களை மீட்டு பட்டியல் சாதி மக்களுக்கு வழங்க வேண்டும்!. பஞ்சமி நிலங்களை மீட்டு

பட்டியல் சாதி மக்களுக்கு வழங்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு வலியுறுத்தி

யுள்ளது. 1892 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசாங்கம் அன்றைய சென்னை மாகாணத்தில் மட்டும் சுமார் 12,61,013 ஏக்கர் விளை நிலங்களை, சுமார் 2,604 கிராமங்களைச் சேர்ந்த பட்டியல் சமூக மக்களுக்கு வழங்கியது.

134 ஆண்டுகளுக்கு முன்பாகவழங்கப்பட்ட இந்த பஞ்சமி நிலங்களை பட்டியல் சமூகம் அல்லாதவர்களுக்கு கை மாற்ற முடியாது; பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு தான் விற்கவோ, தானம்செய்யவோ, அடமானம் வைக்கவோ, குத்தகைக்கு விடவோ முடியும்; மற்ற சமூகத்தவருக்கு கை மாற்றம்செய்யப்பட்டு இருந்தால் அந்த நிலத்தை அரசு பறிமுதல் செய்யும். இழப்பீடாக எதையும் பெற முடியாது என்றும் விதிமுறைகள் வகுக்கப்பட்டு வருவாய்த் துறைபதிவேட்டில் பஞ்சமி நிலங்கள்என தனியாக வகைப்படுத்தப் பட்டுள்ளது. அதேபோல், 1960-இல் கூட்டுறவு முறையில்செங்கல்பட்டு, திருவண்ணா மலை, வேலூர் ஆகிய மாவட்டங்களிலும் பட்டியல் சமூக மக்களுக்குகூடுதலான நிலம் வழங்கப் பட்டுள்ளது.

பட்டியல் சாதி அல்லாதவர்களின் பட்டாவை ரத்து செய்க!

2011-இல் தமிழ்நாடு அரசால் பஞ்சமி நிலம் மீட்புக்கான குழு ஒன்று அமைக்கப்பட்டது. அதேபோல் சென்னை உயர்நீதிமன்றம் 2012 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் வழங்கியுள்ள தீர்ப்புகளில், பஞ்சமிநிலங்களை வைத்துள்ள பட்டியல் சாதி அல்லாதவர்களின் பட்டா ரத்து செய்யப்படும்; நிபந்தனைகளை மீறி விற்கப்பட்ட நிலங்களை அரசு மீட்கலாம்; மீட்கப்பட்ட நிலங்கள் தகுதியான ஏழை - எளியமக்களுக்கு வழங்கப்படும்; பஞ்சமி நில பரிமாற்றங் களை எதிர்த்து தொடரப்படும் வழக்குகளில் ஆக்கிரமிப்பாளர்கள் உரிமை கோரமுடியாது என்று ஏற்கனவே நடைமுறையில் இருந்த சட்ட விதிகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

ஆனாலும், தமிழ்நாடு முழுவதும் பஞ்சமி நிலங்கள் பல ஆண்டு காலமாக சட்ட விதிகளை மீறி பட்டியல் சாதிஅல்லாத நபர்களால் வீட்டு மனைகளாக, பள்ளிக்கூடங்களாக, குடியிருப்புகளாக, மற்றும் அரசின் தேவைகளுக்காக என்ற வகையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன.

எனவே, தமிழக அரசு உடனடியாக பஞ்சமிநிலங்களை மீட்டு பட்டியல் சமூக மக்களுக்கு கிடைப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது. மாநில அரசு இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளாத பட்சத்தில், பஞ்சமி நிலங்களை கண்டறிந்து களப்போராட்டங்களை மேற்கொண்டு, நிலங்களை சம்பந்தப்பட்ட பயனாளிகளுக்குவழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானித்துள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.