தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அரசு நிலத்தை மீட்டு சமூக நலக்கூடம் அமைத்திடுக! ஆட்சியரிடம் சிபிஎம் தலைவர்கள் கோரிக்கை

23 Dec 2025, 4:05 pm
அரசு நிலத்தை மீட்டு சமூக நலக்கூடம் அமைத்திடுக! ஆட்சியரிடம் சிபிஎம் தலைவர்கள் கோரிக்கை
<p><strong>அரசு நிலத்தை மீட்டு சமூக நலக்கூடம் அமைத்திடுக! ஆட்சியரிடம் சிபிஎம் தலைவர்கள் கோரிக்கை</strong></p> <p>சென்னை, டிச. 23 - தனியார் ஆக்கிரமிப்பை அகற்றி அங்கு சமூக நலக்கூடம் அமைக்க வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. &nbsp;இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சி யர் ரஷ்மி சித்தார்த் ஜெக டேவிடம், சிபிஎம் தென் &nbsp;சென்னை மாவட்டக்குழு உறுப்பினர் வி.தாமஸ், மதுர வாயல் பகுதிக்குழு உறுப்பினர் சி.வி.தாமோதரன், நெற்குன்றம் கிளைச் செயலாளர் ஜி.சங்கர் மற்றும் எஸ்.டி.ராஜன் ஆகி யோர் மனு அளித்தனர். அதில், 145வது வார்டில் (நெற்குன்றம்) ஒரு ஏக்கர் 14 சென்ட் அரசு நிலத்தை தனியார் நிறு வனம் ஆக்கிரமித்து வைத்தி ருந்தது. இதனை எதிர்த்து அனைத்து கட்சி மற்றும் ஊர் பொது மக்களின் போராட்டம் நடத்தியதோடு, அன்றைய மாவட்ட ஆட்சியர் சீதா லட்சுமியிடம் புகார் அளிக்கப்பட்டது. இதனை யடுத்து அரசு நிலத்தை மீட்கப்பட்டு வருவாய் துறைக்கு சொந்தம் என பெயர் பலகை வைக்கப் பட்டது. இதனையடுத்து தனி யார் நிறுவனம் போலி ஆவணங்களுடன் பூந்த மல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. மதுரவாயல் வட்டாட்சியர் முறையான ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வில்லை. இதனால் நீதி மன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. அதேசமயம் அந்த இடத்தில் இதுவரை எந்த கட்டிடமும் கட்டப்படவில்லை. எனவே, அரசு நில ஆக்கிரமிப்பை உரிய முறையில் மீட்டு, அங்கு சமூகநலக்கூடம் அமைத்திட வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.