தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஒரே நேரத்தில் 1,932 மாணவர்கள் கிளைடர்கள் பறக்க விட்டு சாதனை

8 Feb 2026, 3:55 pm
ஒரே நேரத்தில் 1,932 மாணவர்கள் கிளைடர்கள் பறக்க விட்டு சாதனை
<p><strong>ஒரே நேரத்தில் 1,932 மாணவர்கள் கிளைடர்கள் பறக்க விட்டு சாதனை</strong></p> <p>தஞ்சாவூர், பிப்.8 - &nbsp;தஞ்சாவூர் அருகே வல்லம் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் சனிக்கிழமை ஆசியா புத்தக சாதனைக்காக 1,932 மாணவர்கள் ஒரே நேரத்தில் கிளைடர்கள் (ஆளில்லா &nbsp;சிறிய ரக விமான வடிவம்) பறக்க விட்டனர். பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், தஞ்சா வூர் ஆரா ஏரோஸ்பேஸ் நிறுவனம் இணைந்து இளம் தலைமுறையினரி டையே விண்வெளி, புதுமை மற்றும் பொறியியல் துறைகளில் ஆர்வத்தை ஏற்படுத்தும் விதமாக &ldquo;ஆயிரம் கனவு களின் விமானம்&rdquo; என்ற பிரம்மாண்ட மான விண்வெளி சார்ந்த இந்நிகழ்ச்சியை &nbsp;இந்தியா புத்தக சாதனை மற்றும் ஆசியா புத்தக சாதனை முயற்சிக்காக நடத்தின. இதற்காக 27 பள்ளிகள், 2 பாலி டெக்னிக் கல்லூரிகளைச் சார்ந்த 1,932 மாணவர்கள் தங்களது கையால் நெகிழியில் 966 கிளைடர்களை செய்த னர். ஒரு கிளைடரை இரு மாணவர்கள் &nbsp;வீதம் செய்துள்ளனர். தொடர்ந்து இந்த &nbsp;கிளைடர்களை மாணவர்கள் பெரியார் &nbsp;மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனத்துக்கு சனிக்கிழமை கொண்டு வந்து, ஒரே இடத்தில், ஒரே நேரத்தில் பறக்கவிட்டனர். இதை இந்தியா மற்றும் ஆசியா புத்தக சாதனை நிறுவனத்தின் தீர்ப்பா ளரான எஸ். சகாயராஜ் பதிவு செய்து, &nbsp;ஒரே இடத்தில் அதிக எண்ணிக்கையி லான கைமுறை கிளைடர்கள் பறக்க விட்ட பெரியார் மணியம்மை அறிவியல் &nbsp;மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இது &nbsp;கல்வி மற்றும் தொழில்நுட்பத் துறை யில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந் துள்ளது என பேராசிரியர்கள் தெ ரிவித்தனர். முன்னதாக, இந்நிகழ்ச்சியை பெரி யார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன செயற்குழு உறுப்பினர் வீ.அன்புராஜ் தொடங்கி வைத்தார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி &nbsp;நிறுவனத்தின் ஓய்வு பெற்ற விஞ்ஞானி &nbsp;டி.கே. சுந்தரமூர்த்தி, திருப்பதி ஐஐடி &nbsp;தொழில்நுட்ப புதுமை மையம் அபிஜித் தேவானந்தம் சிறப்புரையாற்றினர். &nbsp;பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன துணை வேந்தர் வெ. இராமச்சந்திரன் வரவேற் றார். விண்வெளி பொறியியல் துறைத் &nbsp;தலைவர் ஐ.கார்த்திக் சுப்ரமணியன் நன்றி கூறினார். இணை துணைவேந்தர் ஆர்.மல்லிகா, பதிவாளர் பி.கே. ஸ்ரீவித்யா &nbsp;உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.