முந்தய பக்கம்

5 ஆண்டுகளில் 76,374 குடியிருப்புகள் கட்டியது சாதனை: முதலமைச்சர்

11 Mar 2026, 3:52 pm
5 ஆண்டுகளில் 76,374 குடியிருப்புகள் கட்டியது சாதனை: முதலமைச்சர்
<p><strong>5 ஆண்டுகளில் 76,374 குடியிருப்புகள் கட்டியது சாதனை: முதலமைச்சர்&nbsp;</strong></p> <p>சென்னை, மார்ச் 11 - தனது &nbsp;தலைமையிலான திமுக ஆட்சியில் நகர்ப்புற வாழ்விட &nbsp;மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் &nbsp;தமிழ்நாடு முழுவதும் ஆயிரக் கணக்கான அடுக்குமாடி குடியிருப்பு கள் கட்டப்பட்டு, எளிய மக்களின் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டு இருப்பதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை துறைமுகம் சட்ட மன்றத் தொகுதிக்கு உட்பட்ட வால் டாக்ஸ் சாலை தண்ணீர் தொட்டித் தெருவில் ரூ. 133 கோடி செல வில் நவீன உட்கட்டமைப்பு வசதி களுடன் கட்டப்பட்டுள்ள 700 அடுக்கு மாடி குடியிருப்புகள் கொண்ட &ldquo;முதல்வர் நகர்ப்புற குடியிருப்பு களை&rdquo; முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். அப்போது அவர் பேசுகையில், &ldquo;குடிசை யில்லாத் தமிழ்நாடு எனும் &nbsp;கனவை அடைவ தற்காக 1970-ஆம் ஆண்டு தலைவர் கலைஞர் தமிழ்நாடு குடிசைமாற்று வாரியத்தை உரு வாக்கினார். நமது திமுக ஆட்சியில் அதனை &lsquo;நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்&rsquo; எனப் பெயர் மாற்றம் செய்தோம். இது வெறும் பெயர் மாற்றம் அல்ல; செயல்பாட்டில் புதிய முன்னேற்றத்தை உருவாக்கியிருக்கிறோம்&rdquo; என்றார். 2016 முதல் 2021 வரை நடைபெற்ற அதிமுக ஆட்சிக் காலத்தில் சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் மொத்தம் 27,668 குடியிருப்புகள் மட்டுமே கட்டப்பட்ட தாகவும், ஆனால் தமது ஆட்சி யில் சென்னையில் மட்டும் 30,167 குடி யிருப்புகளும், பிற மாவட்டங்களில் 46,207 குடியிருப்புகளும் என மொத்தம் 76,374 குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளதாகவும் முதல்வர் தெரிவித்தார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram