தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

யுஜிசி-யின் சமத்துவ வழிகாட்டல்கள் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மறுபரிசீலனை செய்க!

31 Jan 2026, 3:56 pm
யுஜிசி-யின் சமத்துவ வழிகாட்டல்கள் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மறுபரிசீலனை செய்க!
<p><strong>யுஜிசி-யின் சமத்துவ வழிகாட்டல்கள் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மறுபரிசீலனை செய்க!</strong></p> <p>தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தல் சென்னை, ஜன.31 - &nbsp;யு.ஜி.சி வெளியிட்ட சமத்துவ வழிகாட்டல் களுக்கு உச்ச நீதிமன்றத்தால் இடைக்கால தடை &nbsp;விதிக்கப்பட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சியை அளிப்பதாகவும், இதை மறுபரிசீலனை செய்ய வேண்டுமெனவும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு &nbsp;முன்னணி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து முன்னணியின் மாநிலத் தலைவர் &nbsp;த.செல்லக்கண்ணு, மாநில பொதுச் செயலாளர் பி.சுகந்தி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை யில் தெரிவித்திருப்பதாவது: உயர்கல்வி நிலையங்களில் சாதிய பாகுபாடு களும் அதன் காரணமாக இடைநிற்றல்களும் தற்கொலைகளும் நிகழ்ந்து வருகின்றன. ரோகித் &nbsp;வெமுலா தற்கொலை உலகின் கவனத்தை ஈர்த்ததோடு, இத்தகைய சாதிய பாகுபாடுகள் பற்றிய விவாதத்தையும் பெரும் அளவில் பொதுச் சமூகத்தின் மத்தியில் கொண்டு வந்தது. இந்தி யாவின் பல்வேறு ஜனநாயக, சமூக நீதி, முற்போக்கு அமைப்புகள் உயர்கல்வி நிலையங் களில் சாதிய பாகுபாட்டை முடிவுக்கு கொண்டு வர &lsquo;ரோகித்&rsquo; சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி வந்தன. &nbsp;ரோகித் வெமுலாவின் தாயாரும், பயல் தாட்வி &nbsp;தாயாரும் தொடர்ந்த உச்ச நீதிமன்ற வழக்கின் பின்புலத்தில் யு.ஜி.சி புதிய விதிமுறைகளை வெளியிட்டது. சமத்துவக் குழுக்கள், சமத்துவ உதவி &nbsp;எண், சமத்துவ காவல் அணி ஆகியவற்றை அமைக்குமாறு யு.ஜி.சி-இன் புதிய விதிமுறைகள் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. பார பட்சத்தை வரையறுப்பது குறித்த தெளிவின்மை இருந்த போதிலும், புதிய விதிமுறைகள் ஓர் முன் னேற்றம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியது. ஆனால் இப்பரிந்துரைகளுக்கு எதிராக &ldquo;உயர்&rdquo; சாதி மாணவர்கள் களமிறக்கப்பட்டனர். போராட்டங்கள் தூண்டப்பட்டன. இதன் பின் புலத்தில் சங் பரிவார் அமைப்புகளும் பாஜக பிர முகர்களும் இருந்தார்கள். உச்ச நீதிமன்றத்தில் சில &ldquo;உயர்&rdquo; சாதி மாண வர்கள் தொடர்ந்த வழக்கில் யு.ஜி.சி வெளியிட்ட புதிய விதிமுறைகளுக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது. இது பெரும் அதிர்ச்சியை தருகிறது. &nbsp;இந்த விதிமுறைகள் சமூகத்தை &ldquo;பிளவு படுத்தக் கூடியது&rdquo; என்று தலைமை நீதிபதி &nbsp;உள்ளிட்ட அமர்வு வெளியிட்டுள்ள கருத்து, &nbsp;சமூகத்தைப் பற்றிய புரிதல் நீதி முறைமையின் உச்சத்தில் இருப்பவர்களுக்கு எவ்வளவு பலவீன மாக இருக்கிறது என்பதன் வெளிப்பாடு. இந்தியச் சமூகம் எவ்வாறு சாதிய ரீதியாக ஏற்கனவே பிளவுபட்டு, அநீதிகளை உள்ளடக்கிய தாக இருக்கிறது என்பதை உச்ச நீதிமன்றம் உணரவில்லையா? என்ற கேள்வி எழுகிறது. ஆகவே உச்ச நீதிமன்ற தீர்ப்பு மறு பரி சீலனைக்கு உள்ளாக்கப்பட வேண்டுமென்றும், இதற்கான மேல் முறையீட்டை ஒன்றிய அரசும், யு.ஜி.சியும் செய்ய வேண்டுமென்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.