தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வாழ்க்கையை மீட்டெடுப்பதற்கான நடைமுறை வழிகாட்டி: ‘Reclaim Your Life’ - எம்.ஜே.பிரபாகர்

21 Jun 2026, 9:21 pm
வாழ்க்கையை மீட்டெடுப்பதற்கான நடைமுறை வழிகாட்டி: ‘Reclaim Your Life’  - எம்.ஜே.பிரபாகர்

வாழ்க்கையை மீட்டெடுப்பதற்கான நடைமுறை வழிகாட்டி: ‘Reclaim Your Life’ - எம்.ஜே.பிரபாகர்

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் சமூக ஊடகங்களும், ஸ்மார்ட்போன் அறிவிப்புகளும் நம்முடைய கவனம், நேரம் மற்றும் ஆற்றலை எப்படிச் சூறையாடுகின்றன என்பதை மிகத் துல்லியமாக விவரிக்கிறது கல்வியாளரும் சுயமுன்னேற்றப் பேச்சாளருமான ஜி. டி. தரணீதரன் எழுதிய ‘Reclaim Your Life’ என்னும் நூல்.

நாம் அறியாமலேயே ஒரு ‘டிஜிட்டல் அடிமையாக’ மாறிக்கொண்டிருப்பதைச் சுட்டிக்காட்டி, அதிலிருந்து விடுபட்டு நம் வாழ்வின் மீதான கட்டுப்பாட்டை மீண்டும் கையில் எடுப்பதற்கான எளிய வழிகாட்டியாக இது அமைந்துள்ளது. இந்நூல் கவனம் (Attention), நேரம் (Time), ஆற்றல் (Energy) ஆகிய மூன்று முக்கிய தூண்களை அடிப்படையாகக் கொண்டது.

மல்டிடாஸ்கிங் என்ற பெயரில் கவனத்தைச் சிதறடித்துக் கொள்வதைத் தவிர்த்து, ‘ஆழமான வேலை’ (Deep Work) செய்வதற்கான உத்திகளை ஆசிரியர் கற்றுக்கொடுக்கிறார். தேவையற்ற விஷயங்களுக்கு ‘இல்லை’ (No) என்று சொல்வதன் மூலமே உற்பத்தித்திறனை அதிகரிக்க முடியும் என்பதை நடைமுறை கால அட்டவணைகளுடன் விளக்குகிறார்.

மேலும், எதிர்மறை எண்ணங்கள் மற்றும் டிஜிட்டல் நச்சுத்தன்மை (Digital Toxicity) நம் ஆற்றலை உறிஞ்சுவதைத் தடுத்து, மன மற்றும் உடல் நலனைப் பாதுகாக்கும் எளிய பயிற்சிகளையும் வழங்கியுள்ளார்.

இன்றைய இளைஞர்கள் மற்றும் வேலைக்குச் செல்பவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் எளிய நடைமுறை உதாரணங்கள், சுயபரிசோதனைக் கேள்விகள் மற்றும் அன்றாட ‘To-do’ உத்திகளுடன் இப்புத்தகம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மொபைல் ஸ்க்ரோலிங்கில் நேரத்தை வீணடிப்பதாகக் குற்றஉணர்ச்சி உள்ளவர்களுக்கும், சுயமுன்னேற்றப் பாதையில் பயணிக்க விரும்பும் ஆரம்பநிலை வாசகர்களுக்கும் இப்புத்தகம் ஒரு சிறந்த ‘ஆக்சன் புளூபிரிண்ட்’ ஆகும். Reclaim Your Life (Attention, Time and Energy) ஆசிரியர்: GD தரணிதரன் விலை: ₹499/- தொடர்புக்கு: g.d.dharaneetharan@gmail.com​​​​​​​

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.