தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஈடி, ஐடி, சிபிஐயை எதிர்கொள்ளத் தயார்! முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதி

23 Feb 2026, 5:09 pm
ஈடி, ஐடி, சிபிஐயை எதிர்கொள்ளத் தயார்! முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதி
<p><strong>ஈடி, ஐடி, சிபிஐயை எதிர்கொள்ளத் தயார்! முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதி</strong></p> <p>சென்னை, பிப். 23 - தமிழ்நாட்டின் 11.19 சதவிகித வளர்ச்சி வேறு எந்த மாநிலத்தாலும் சாதிக்க முடியாத சாதனை என்றும், எல்லாத் தரப்பினரையும் உள்ளடக்கிய &lsquo;எல்லாருக்கும் எல்லாம்&rsquo; என்ற கொள்கையின் அடிப்படையில் இந்த வளர்ச்சி சாத்தியமானது என்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். &nbsp;தமிழ்நாட்டில் உள்ள எந்தக் குடும்பத்தை எடுத்துக்கொண்டாலும் ஒருவரா வது அரசின் திட்டங்களால் பயனடைந்துள்ள னர் என்று அவர் கூறினார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், திங்கட்கிழமை (பிப். 23)சென்னை யில், &lsquo;சிஎன்என் நியூஸ்-18&rsquo; சார்பில் நடை பெற்ற &lsquo;டவுன்ஹால் சென்னை&rsquo; நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றினார். &nbsp;கூட்டணிக்கு மிரட்டவே புலனாய்வு அமைப்புகள் அப்போது, &ldquo;புலனாய்வு முகமைகளை அரசியலுக்குப் பயன்படுத்துவதை கண்டிக் கிறோம். ஒன்றிய பாஜக அரசு அமலாக்கத் துறை (ஈடி), வருமானவரித்துறை (ஐடி), மத்திய புலனாய்வுக் கழகம் (சிபிஐ) ஆகிய புலனாய்வு முகமைகளை அரசியல் கருவிகளாகப் பயன்படுத்தி தமிழ்நாட்டை மிரட்ட நினைத்தாலும், அதை எதிர்கொள்ள திமுக அரசு தயாராக இருக்கிறது&rdquo; என்றார். &nbsp;ஈ.டி. பதிவு செய்த 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகளில் தண்டனை வழங்கப்பட்ட வழக்குகள் மிகக் குறைவே &nbsp;என்று சுட்டிக்காட்டிய அவர், ஊழல் குற்றச் சாட்டிற்கு ஆளானவர்கள் உடனடியாக பாஜக கூட்டணியில் சேர்ந்து விடுவதே இதன் உண்மை முகத்தை வெளிப்படுத்து கிறது என்றும் குறிப்பிட்டார். மாநில சுயாட்சியே &nbsp;வளர்ச்சிக்கு அடிப்படை பன்முகத்தன்மை கொண்ட இந்தியா விற்கு கூட்டாட்சியும் மாநில சுயாட்சியும் அவ சியம் என்று வலியுறுத்திய முதலமைச்சர், மாநில அரசுகளே மக்களுக்கு நெருங்கிய அரசுகள் என்பதால் அவற்றுக்கு அதி காரங்கள் வழங்கப்பட வேண்டும் என்றார். ஒன்றிய - மாநில உறவுகள் குறித்த உயர்நிலைக் குழுவின் அறிக்கையை அனைத்துக் கட்சிகளுக்கும் அனுப்பி வைத்ததாகவும், இது குறித்த தேசிய அளவிலான விழிப்புணர்வை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். &nbsp;தமிழ்நாட்டில் நடக்க இருப்பது ஜனநாயகத்திற்கும் பாசிசத்திற்கும் இடையிலான தேர்தல் என்று வரையறுத்த முதலமைச்சர், &lsquo;தமிழ்நாடு எதிர் என்.டி.ஏ.&rsquo; என்ற இந்தப் போட்டியில் தமிழ்நாடு நிச்சயம் வெல்லும் என்று உறுதியாகக் கூறினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.