தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

5 ஆண்டுகளில் ரூ. 45 லட்சம் கோடிக்கு அமெரிக்கப் பொருட்களை வாங்கத் தயார்! டிரம்ப்பிடம் அடிமை சாசனம் எழுதிக் கொடுத்தது மோடி அரசு

7 Feb 2026, 2:02 pm
5 ஆண்டுகளில் ரூ. 45 லட்சம் கோடிக்கு அமெரிக்கப் பொருட்களை வாங்கத் தயார்! டிரம்ப்பிடம் அடிமை சாசனம் எழுதிக் கொடுத்தது மோடி அரசு

5 ஆண்டுகளில் ரூ. 45 லட்சம் கோடிக்கு அமெரிக்கப் பொருட்களை வாங்கத் தயார்!  டிரம்ப்பிடம் அடிமை சாசனம் எழுதிக் கொடுத்தது மோடி அரசு

புதுதில்லி, பிப். 7 - இந்தியப் பொருட்கள்  மீதான வரி விதிப்பை 18  சதவிகிதமாக அமெரிக்கா குறைத்துள்ள நிலையில்,  இதற்கான ஒப்பந்தத்திற் காக, இந்திய விவசாயிகள்  - சிறு, குறு உற்பத்தியா ளர்கள் நலனை, மிக மோச மான முறையில் மோடி அரசு  பலி கொடுத்துள்ளது. இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் இறுதி  செய்யப்பட்டு விட்டதாக வும், அதனடிப்படையில், இந்தியா மீதான 25 சத விகித வரியை 18 சத விகிதமாக குறைப்பதாகவும் கடந்த திங்கள்கிழமை (பிப்.  2) அன்று டிரம்ப் கூறியிருந் தார். காவு கொடுக்கப்பட்ட இந்தியாவின் நலன்கள் ரஷ்யாவிடம் கச்சா எண் ணெய் வாங்குவதற்கு அப ராதமாக விதிக்கப்பட்ட 25  சதவிகித வரியில் மாற்ற மில்லாமல் இருந்தது. இதனி டையே, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கியதால் கூடுதலாக விதிக்கப்பட்ட 25 சதவிகித அபராத வரியையும் முழு மையாக ரத்து செய்து சனிக் கிழமையன்று டிரம்ப் உத்தர விட்டுள்ளார். இதன்படி, இந்தியா மீதான 25 சதவிகித தண் டனை வரி ரத்து செய்யப் பட்டு, மொத்த வரி 18 சத விகிதமாக மாறியுள்ளது. இந்த புதிய வரிவிதிப்பு பிப்ர வரி 7 அதிகாலை 12.01 மணி முதல் அதிகாரப்பூர்வமாக

நடைமுறைக்கும் வந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் இந்த அறிவிப்பு, இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு சாதகமானது என்று ஒன்றிய பாஜக அரசு ஊட கங்களில் செய்திகளை பரப்பிக் கொண்டி ருக்கிறது. உண்மையில், இந்த வரிக்குறைப்புக்காக, இந்திய விவசாயிகள், சிறு, குறு, நடுத்தரத் தொழில் முனைவோர், சிறு உற்பத்தியாளர்கள், வியாபாரி கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களின் நலன்களையும் மோடி அரசு காவுகொடுத் துள்ளது. சரணாகதி உறுதிமொழிகள் ஆண்டுக்கு 100 பில்லியன் டாலர் விகிதம், அடுத்த 5 ஆண்டுகளில், 500 பில்லியன் டாலர் (சுமார் 42 லட்சம் கோடி ரூபாய்) மதிப்பிலான அமெரிக்கத் தயாரிப்புகளை வாங்குவதற்கு - அதாவது இறக்குமதி செய்வதற்கு, வர்த்தக ஒப்பந்தம் மூலம் மோடி அரசு அடிமைச் சாசனம் எழுதிக் கொடுத்துள்ளது. இதனால் அமெரிக்க வெள்ளை மாளிகை பெரும் புளகாங்கிதத்தை அடைந்துள்ளது. ‘இந்த ஒப்பந்தமானது, இந்தியா மற்றும் அமெ ரிக்கா இடையிலான வர்த்தக உறவில் புதிய அத்தியாயத்தை கொண்டுள்ளது’ என்று கூறி கொண்டாடித் தீர்த்துள்ளது. ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்துவோம் அல்லது பெருமளவு குறைப்போம்; மறுபுறத்தில், அமெ ரிக்காவிடமிருந்து எரிசக்தி, விமானப் போக்கு வரத்து மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் பெருமளவிலான கொள்முதல்களை செய் வோம் என்ற சரணாகதி உறுதிமொழிகளின் பேரிலேயே, 18 சதவிகிதம் வரி விதிப்பு என்ற ‘உத்தரவை’ அமெரிக்காவிடம் பெற்றுள்ளது. மோடி அரசின் அடிமைச் சாசனம் ரஷ்யாவில் இருந்து இந்தியா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய்யின் அளவு 3 ஆண்டுகளில் இல்லாத அளவு குறைக்கப் பட்டுள்ளது. 2025 டிசம்பரில் இந்தியா 2.7 பில்லியன் டாலர் அளவுக்கு மட்டுமே ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்துள்ளது. கடந்த 38 மாதங்க ளில் ரஷ்யாவிடம் இருந்து இந்தியா பெற்ற கச்சா எண்ணெய் அளவில் இதுவே மிகக் குறைவானது. இந்தியாவின் மொத்த கச்சா எண்ணெய் இறக்குமதி நவம்பரில் 34 சதவிகி தமாக இருந்தது, டிசம்பரில் 25 சதவிகி தத்திற்கும் கீழே குறைக்கப்பட்டு உள்ளது. ஒரே மாதத்தில் ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்கு மதியை 1 பில்லியன் டாலர் அளவுக்கு இந்தியா குறைத்துள்ளது. மறுபுறம் அமெரிக்காவிடம் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் அளவை ஒரே ஆண்டில் 34 சத விகிதம் உயர்த்தியுள்ளது. இதன்காரணமாகவே, இந்தியா மீதான வரியை 18 சதவிகிதமாக குறைத்துள்ள டிரம்ப், “ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கு வது தெரியவந்தால், ரத்து செய்யப்பட்ட 25 சதவிகித அபராத வரி உடனடியாக மீண்டும் விதிக்கப்படும்’ என ஒப்பந்தத்திலேயே மிரட்டி யுள்ளார்.  நாங்கள் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குகிறோமா, இல்லையா? என்பதை அமெரிக்கா கண்காணிக்கலாம் என்றும் அடிமைச் சாசனத்தில் மோடி அரசு எழுதிக் கொடுத்துள்ளது. அதாவது, இரு நாடு களும் இணைந்து கண்காணிப்பு முறையை ஏற்படுத்த உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.  அமெ. பொருள் இறக்குமதி  3 மடங்கு அதிகரிக்கும் இந்த வர்த்தக ஒப்பந்தத்தால், இந்தியாவில் அமெரிக்கப் பொருட்களின் இறக்குமதி மூன்று மடங்கும் அதிகரிக்கும். இதனால், இந்தியச் சந்தை களில் அமெரிக்கப் பொருட்கள் குவிந்து உள்நாட்டு சிறு, குறு உற்பத்தியாளர்கள் கடும் நட்டத்தை சந்திக்க உள்ளார்கள். தற்போது அமெரிக்காவுடன் சுமார் 130 பில்லி யன் டாலர் இருதரப்பு வர்த்தகத்தை இந்தியா  கொண்டுள்ளது. இதில் இந்தியாவுக்கு 45 பில்லியன் டாலர் வர்த்தக உபரி (Trade Surplus) உள்ளது. அதாவது, அமெரிக்காவிடமிருந்து வாங்குவதை விட (40 பில்லியன் டாலர்), அமெரிக்காவுக்கு அதிக பொருட்கள் இந்தியா வில் இருந்து  (85 பில்லியன் டாலர்) ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆனால், மோடி அரசு ஏற்படுத்தியிருக்கும் அடிமை வர்த்தக ஒப்பந்தம் மூலம் இந்தியாவின் நீண்டகால வர்த்தக உபரி இனி இருக்காது. மிகக் கடுமையான வர்த்தகப் பற்றாக்குறை ஏற்படும். இவை ஒருபுறமிருக்க, இந்தியா - அமெ ரிக்கா இடையில் ஏற்பட்டிருப்பது, ஒப்பந்தம் அல்ல; புரிந்துணர்வு மட்டுமே என்று அமெரிக்கா கூறியுள்ளது. தற்போதைய புரிந்துணர்வில் ஒப்புக்கொண்டுள்ளதை எந்த அளவிற்கு இந்தியா கடைப்பிடிக்கிறது என்பதைப் பொறுத்தே ஒப்பந்தம் ஏற்படுத்தப்படும் என்றும் அது தெரிவித்துள்ளது. டிரம்ப்புக்கு நன்றியாம்; கொண்டாடும் மோடி ஆனால், இந்த புரிந்துணர்வையே இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றுக் கொண்டாடியுள்ளார். “இந்தியா மற்றும் அமெ ரிக்காவிற்கு இந்த அறிவிப்பு சிறந்த செய்தி யாகும். இரு நாடுகளுக்கும் இடையே இடைக் கால வர்த்தக ஒப்பந்தத்திற்கான கட்டமைப்பை நாங்கள் ஏற்றுக்கொண்டுள்ளோம். இதற்காக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பிற்கு எனது தனிப்பட்ட நன்றியை தெரிவித்துக் கொள்கி றேன்” என்று நெக்குருகியுள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.