முந்தய பக்கம்

இந்திய அரசியலமைப்புச் சட்ட முகப்புரை வாசிப்பு! தமிழகம் முழுவதும் இன்று நடக்கிறது

25 Nov 2025, 3:29 pm
இந்திய அரசியலமைப்புச் சட்ட முகப்புரை வாசிப்பு! தமிழகம் முழுவதும் இன்று நடக்கிறது
<p><strong>இந்திய அரசியலமைப்புச் சட்ட முகப்புரை வாசிப்பு! தமிழகம் முழுவதும் இன்று நடக்கிறது</strong></p> <p>சென்னை, நவ. 25 - இந்திய அரசியலமைப்புச் சட்டம், நாடாளு மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதன் 76-ஆம் ஆண்டினையொட்டி, &lsquo;நவம்பர் 26&rsquo; அன்று காலை 11 மணிக்கு அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி மற்றும் கல்லூரி களில் அரசியலமைப்பு சட்ட முகப்புரையை வாசிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தர விட்டுள்ளார். அதன்படி, தலை மைச்செயலகம், உயர்நீதிமன்றம், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், தன்னாட்சி நிறுவனங்கள், பள்ளிகள் மற்றும் &nbsp;கல்லூரி கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் புதன்கிழமையன்று இந்த நிகழ்ச்சி நடைபெறும். பள்ளி மற்றும் கல்லூரிகளில் அரசிய லமைப்பு சட்டத்தின் அடிப்படைக் கோட்பாடு கள் மற்றும் நெறிமுறைகள் பற்றிய பேச்சுப் போட்டிகள், கருத்தரங்குகள், வினாடி வினா நிகழ்ச்சிகள் நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. &nbsp;தமிழ்நாடு அரசு அரசியலமைப்பின் அடிப்படைக் கொள்கைகளைப் போற்றி சமூகநீதி, சமநிலை மற்றும் மக்கள் நலனுக்காக பாடுபட்டு வருவதாக முதலமைச்சர் தெரிவித் துள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram