முந்தய பக்கம்

தாராசுரம் நூலகத்தை மேம்படுத்த வாசகர்கள் வேண்டுகோள்

1 Feb 2026, 3:51 pm
தாராசுரம் நூலகத்தை மேம்படுத்த வாசகர்கள் வேண்டுகோள்
<p><strong>தாராசுரம் நூலகத்தை மேம்படுத்த வாசகர்கள் வேண்டுகோள்</strong></p> <p>கும்பகோணம், பிப்.1 - &nbsp;தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகராட்சி வார்டு &nbsp;எண்.31-இல் தாராசுரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம் &nbsp;அருகில், மாவட்ட கிளை நூலகம் கடந்த 2009 செப்டம்பர் 18 ஆம் தேதி முதல் இயங்கி வருகிறது. இந்த நூலகத்தில் 31,252 நூல்கள் உள்ளன. இதனை &nbsp;சுமார் 3,425 உறுப்பினர்கள், தினமும் 40 முதல் 50 வாசகர்கள் &nbsp;பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் தாராசுரம் நூலக கட்டி டத்தின் மேல்தள ஓடுகள் சிதிலமடைந்து மழைக் காலங்களில் &nbsp;மழைநீர் கசிவு ஏற்பட்டு வாசகர்களுக்கு பயன்பட்டு வரும் &nbsp;நூல்கள் மற்றும் தளவாடப் பொருட்கள் சேதமடைந்து உள்ளன. நூலகத்தின் அலுவலக கட்டிட சுற்றுச்சூழல் சுகா தாரமற்ற நிலையில் இருக்கிறது. இதனால் மாணவர்கள், பொதுமக்கள், கல்வியாளர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதன் காரணமாக வாசகர்கள் குறைந்து வரும் நிலை நீடிக்கும் சூழல் உள்ளது. எனவே &nbsp;மாவட்ட கிளை நூலகத்தை புதுப்பித்து, ஓர் அறிவு சார் நூல கத்தை அமைத்துத் தந்து மாணவர்கள், கல்வியாளர்கள் நலன் மேம்படவும், பொதுமக்கள் நலன் காக்கவும் வேண்டும் &nbsp;எனக் கேட்டுக் கொள்கிறோம் என மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram