தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தேன்கனிக்கோட்டை கிளை நூலகத்தில் தீண்டாமைக் கொடுமை

12 Dec 2025, 3:12 pm
தேன்கனிக்கோட்டை கிளை நூலகத்தில் தீண்டாமைக் கொடுமை
<p>கிருஷ்ணகிரி, டிச.12- கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக் கோட்டை பஞ்சப்பள்ளி சாலையில் உள்ள அரசு கிளை நூலகத்தில், வாசகர்கள் இடையே தீண்டாமைக் கொடுமை தலை தூக்குவதாகவும், இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வாசகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நூலகத்தில், இளைஞர்கள், போட்டித் தேர்வு எழுதும் மாணவர்கள் உட்படப் பலதரப்பட்ட வர்களும் வந்து செல்கின் &nbsp;றனர். ஆனால், ஆறு இருக்கைகள் மட்டுமே இருப்பதால், வாசகர்கள் அமர்ந்து படிக்கப் போதிய இட வசதி இன்றிச் சிரமப் படுகின்றனர். இதற்கிடையில், மாலை நேரத்தில் நூலகத்திற்கு வரும் சிலர், போட்டித் தேர்வுக்குப் படிக்கும் இளை ஞர்களிடம், அவர்களின் குலத்தொழிலைக் குறிப்பிட்டு, &ldquo;நீங்கள் எல்லாம் இங்கு வந்து சரிசம மாக அமர்ந்து படிக்கக் கூடாது&rdquo; எனச் சாதிப் பெயரைக் குறிப்பிட்டுப் பேசு வதாகவும் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் புகார் தெரிவித்துள்ளனர். அண்மையில், நூலக த்திற்குள் சாதிய குறியீடு களுடன் சிலர் பேசி வந்த தால் வாசகர்களுக்கு இடையே வாக்குவாதமும் ஏற்பட்டுள்ளது. இதனால் பலர் நூலகத்திற்கு வர அச்சப்பட்டுத் தவிர்த்து வருவதாகத் தெரிகிறது. இதுகுறித்து நூலகரிடம் கேட்டபோது, &ldquo;நூலகத்தில் 39,000 புத்தகங்கள், 12,000 உறுப்பினர்கள் உள்ளனர். போதிய இடவசதி இல்லாத தால் கூடுதல் கட்டிடம் கட்ட மாவட்ட நூலகருக்குக் கடிதம் எழுதியுள்ளோம். மாலை நேரத்தில் வரும் சிலர், சாதிய சிந்தனையுடன் பேசுவதாகச் சில வாச கர்கள் எங்களிடம் புகார் கூறியுள்ளனர். இதுதொடர் பாக விசாரித்து உண்மை இருந்தால் உரிய நடவ டிக்கை எடுக்கப்படும்&rdquo; என்று அவர் தெரிவித்ததாக வாசகர்கள் கூறினர். எனவே, நூலகத்தில் தலைதூக்கும் சாதிய உணர்வு மற்றும் தீண்டாமைக் கொடுமையை உடனடியாகக் களையவும், நூலகத்தை விரிவாக்கம் செய்து இருக்கை வசதி களை அதிகரிக்கவும் மாவட்ட நிர்வாகம் தலை யிட்டு ஆய்வு செய்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.