தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விளையாட்டு

1 Jun 2026, 11:07 pm
விளையாட்டு

3 ஆண்டில் 4 சாம்பியன் பட்டங்கள் புதிய வரலாறு படைத்த ஆர்சிபி

19ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் இறுதி ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அணியை வீழ்த்தி பெங்களூரு அணி (ஆர்சிபி) தொடர்ந்து 2ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இந்த வெற்றியின் மூலம் 3 ஆண்டுகளில் 4 சாம்பியன் பட்டங்கள் வென்ற ஒரே டி-20 அணி என்ற பெருமையை பெங்களூரு அணி பெற்று, புதிய வரலாறு படைத்துள்ளது. ஆடவருக்கு ஐபிஎல் தொடர் நடத்துவது போன்று மகளிருக்கு டபிள்யு.பி.எல் இந்தியாவில் நடத்தப்படுகிறது. இந்த தொடரில் மகளிர் பெங்களூரு அணி 2024, 2026 ஆகிய ஆண்டுகளில் சாம்பியன் பட்டம் வென்றது. அதே போல ஐபிஎல் தொடரில் ஆடவர் பெங்களூரு அணி 2025, 2026 ஆகிய ஆண்டுகளில் கோப்பையை கைப்பற்றியுள்ளது. இதன்மூலம் 3 ஆண்டுகளில் 4 சாம்பியன் பட்டங்களை வென்று, சாதனை படைத்துள்ளது.

ரூ. 2.50 கோடியை அள்ளிய சுட்டிக்குழந்தை

ராஜஸ்தான் அணிக்கு மிகக்குறைந்த விலையில் கிடைத்த ஒரு பொக்கிஷம் என வைபவ் சூர்யவன்ஷி (15 வயது) நிரூபித்துள் ளார். இந்த சீசனில் அவருடைய சம்ப ளம் (retainer) ரூ. 1.10 கோடியாக இருந்தாலும், அவருடைய உண்மை யான வருமானம் அதை விடப் பன்மடங்கு அதிகம். தொடர் முழுவதும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய வைபவ் சூர்யவன்ஷி பேட்டிங்கில் மொத்தம் 776 ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியைத் தட்டிச் சென்றார். இதனால் அகமதாபாத்தில் மைதானத்தில் இறுதிப் போட்டிக்குப் பிறகு நடந்த பரிசளிப்பு விழாவில், வைபவ் சூர்யவன்ஷி மீது விருது களும், பரிசுமழையும் பொழிந்தன. பரிசுகள் தொடரின் மிகவும் மதிப்புமிக்க வீரர் : ரூ. 15 லட்சம் ஆரஞ்சு தொப்பி (அதிக ரன்கள்): ரூ. 10 லட்சம் சூப்பர் ஸ்ட்ரைக்கர் : ரூ. 10 லட்சம் மற்றும் டாடா சியரா கார் சூப்பர் சிக்ஸர்கள் : ரூ. 10 லட்சம் (72 சிக்ஸர்களுக்காக) வளர்ந்து வரும் வீரர் : ரூ. 10 லட்சம் அவருடைய ஆண்டு சம்பள மான ரூ. 1.10 கோடி, விருதுகள் மூலம் கிடைத்த ரூ. 55 லட்சத்துடன் அவரது வருமானம் நின்றுவிடவில்லை. இந்த சீசனில் ராஜஸ்தான் அணிக்காக அவர் விளையாடிய 16 போட்டிகளுக்கும் தனித்தனியாக போட்டி ஊதியம் பெற்றுள்ளார். ஒரு போட்டிக்கு ரூ. 7.5 லட்சம் வீதம், போட்டி ஊதியமாக மட்டுமே அவர் ரூ. 1.20 கோடி ஈட்டியுள்ளார். இது தவிர, தொடரின்போது பல முறை ஆட்டநாயகன் விருது, எலக்ட்ரிக் ஸ்ட்ரைக்கர், அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் போன்ற விருதுகளையும் வென்றார். இந்த ஒவ்வொரு விருதுக்கும் தலா ரூ. 1 லட்சம் பரிசுத்தொகை கிடைத்தது. அனைத்தையும் சேர்த்தால், ஐபிஎல் 2026 சீசனில் மட்டும் வைபவ் சூர்யவன்ஷியின் மொத்த வருமானம் ரூ. 2.50 கோடியைத் தாண்டியுள்ளது. இது தவிர ரசிகர் களின் மனங்களையும் வென்றி ருக்கிறார் இந்த சுட்டி குழந்தை. ஆனால் அது மதிப்பிட முடியாதது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.