பொய் வாக்குறுதிகளை நம்ப வேண்டாம் ரிசர்வ் வங்கி எச்சரிக்கை
6 May 2026, 8:33 pm

பொய் வாக்குறுதிகளை நம்ப வேண்டாம் ரிசர்வ் வங்கி எச்சரிக்கை

கடன் தள்ளுபடி செய்வதாகக் கூறி பொதுமக்களை ஏமா ற்றும் தவறான பிரச்சாரங்கள் குறித்து இந்திய ரிசர்வ் வங்கி எச்ச ரிக்கை விடுத்துள்ளது.

வங்கிகள் அல்லது வங்கி சாரா நிதி நிறுவனங்களில் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தத் தேவையில்லை என்று கூறி மோசடி அமைப்புகள் மக்களை நம்ப வைத்து ஏமாற்றிப் பணம் பறித்து வருகின்றன.

கடன் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டதாகக் கூறி, அங்கீகாரம் இல்லாத கடன் தள்ளுபடி சான்றிதழ்களை வழங்கி கட்டணம் வசூலிக்கின்றனர்.

சேவைக் கட்டணம் அல்லது சட்டக் கட்டணம் என்ற பெயரில் கடன் வாங்கிய வர்களிடமிருந்து பணத்தை வாங்கிக் கொண்டு ஏமாற்றி விடுகின்றனர்.

இவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி எச்ச ரித்துள்ளது.

அதேபோல கடன் தள்ளுபடி பெற்றுத் தருவதாகக் கூறும் நபர்களையோ அல்லது அங்கீகரிக்கப்படாத அமைப்பு களையோ தொடர்பு கொள்ள வேண்டாம் எனவும் வலியுறுத்தியுள்ளது.