முந்தய பக்கம்

பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்

18 Jul 2026, 8:48 pm
பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்
<p><strong>பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்</strong> </p><p>இந்தியாவில் பிளாஸ்டிக் (பாலிமர்) ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்வதற்கான முதற்கட்ட பணிகளை இந்திய ரிசர்வ் வங்கி தொடங்கியுள்ளது. இதற்காக காகிதத்திற்குப் பதிலாக நீடித்து உழைக்கும் பிரத்யேக பாலிமர் தாள்கள் தேவைப்படுகின்றன. அத்த கைய தாள்களை வழங்க சர்வதேச நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கியின் நோட்டு அச்சிடும் பிரிவு அழைப்பு விடுத்துள்ளது. நீடித்து உழைக்கும் பிரத்யேக பாலி மர் தாள்களை சப்ளை செய்வதற்காக விண்ணப்பிக்க ஆகஸ்ட் 18 கடைசி நாள் எனவும் ரிசர்வ் வங்கி அறிவித்து உள்ளது. பணத்தாள்களை அச்சிடுவ தற்குப் பயன்படும் ஒரு சிறப்பு வகை யான ‘பாலிமர் சப்ஸ்ட்ரேட் ஷீட்’ (polymer substrate sheet) வழங்க சர்வதேச நிறுவனங்களிடம், சர்வதேச ஒப்பந்தப்புள்ளிகள் (EOI) கோரப்பட்டுள்ளன. பாஜக ஆட்சியில் வெளியிட்டுள்ள புதிய ரூபாய் நோட்டுக்கள் மிக விரை வாகவே கிழிந்து நைந்து போய் விடு கின்றன என சில ஆண்டுகளாகவே கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் இந்த பிளாஸ்ட்டிக் ரூபாய் நோட்டு தயாரிப்பை நோக்கி அரசு சென்றுள்ளது. முதலில் ரூ.10 மற்றும் ரூ.20 மதிப்புள்ள சிறிய மதிப்புடைய நோட்டுகளை அச்சடிப்ப தன் மூலம் இந்த முன்னோடித் திட்டம் தொடங்கப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இந்தச் சோதனையின் முடிவுகள் அடிப்படையில் அடுத்தகட்ட முடிவுக ளை ரிசர்வ் வங்கி எடுக்கும். இந்த சோத னை முழுமையான வெற்றி பெற்றால், 2027 முதல் நாடு முழுவதும் பாலிமர் ரூபாய் நோட்டுகளை முழு அளவில் அறி முகம் செய்யும் நடவடிக்கை தொடங்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>
Share
FacebookXWhatsAppTelegram