தீக்கதிர் விரைவு செய்திகள்
19 May 2026, 9:07 pm

ரூ.3 லட்சம் கோடியை ஒன்றிய அரசு பெறுகிறது?

இந்திய ரிசர்வ் வங்கி ஒன்றிய அரசுக்கு 3 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான உபரி நிதியை தரவுள்ளதாக பொருளாதார பத்திரிகைகள் செய்திகள் வெளி யிட்டுள்ளன. கடந்த ஆண்டு 2.68 லட்சம் கோடி ரூபாய் வழங்கப்பட்ட நிலையில் அதனை விட கிட்டத்தட்ட 20 சதவீதம் அதி கமாக இம்முறை உபரி நிதி வழங்கப் படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த உபரி நிதிப் பரிமாற்றத்தை இறுதி செய்வதற்காக ரிசர்வ் வங்கியின் வாரியக் கூட்டம் இந்த வார இறுதியில் நடைபெற உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செலவைக் குறைக்க வங்கிகளுக்கு மோடி அரசு உத்தரவு

நாட்டில் உள்ள பொதுத்துறை வங்கிகள், நிதி நிறுவ னங்கள் தங்களது செயல் பாட்டுச் செலவுகளைக் குறைக்கும் நட வடிக்கைகளில் தீவிரமாக கவனம் செலுத்த வேண்டும் என ஒன்றிய நிதி அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக நிதி அமைச்ச கம் வழங்கியுள்ள அறிவுறுத்தல்க ளில்,“வங்கி, நிதி நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் தங்களது தேவையற்ற வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர்க்க வேண்டும். ஆலோசனைக் கூட்டங்களை நேரில் நடத்துவதைக் குறைத்துக் கொண்டு, அதற்குப் பதிலாகக் காணொலி காட்சி மூலம் கூட்டங்களை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. எரிபொருள் செலவைக் கட்டுப் படுத்தும் விதமாக, தற்போது பயன் படுத்தப்பட்டு வரும் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களுக்குப் பதிலாக, படிப் படியாக மின் வாகனங்களுக்கு மாற வேண்டும்” என அதில் உத்தரவிடப் பட்டுள்ளது.