முந்தய பக்கம்

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!

8 Apr 2026, 12:22 pm
ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!

ரெப்போ வட்டி விகிதம் எந்த மாற்றமுமின்றி 5.25% ஆக தொடரும் என்று இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா அறிவித்துள்ளார்.

இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையில் நிதிக் கொள்கைக் குழு கூட்டம் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி தொடங்கியது. இக்கூட்டத்தின் இறுதி நாளான இன்று, ரெப்போ வட்டி விகிதத்தை மாற்றமின்றி தொடர ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது.

அதன்படி, வங்கிகளுக்கான குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் எந்த மாற்றமும் இன்றி 5.25% ஆக தொடரும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா அறிவித்துள்ளார்.

இதன்மூலம், வீடு, வாகனம், தனிநபர் கடன் உள்ளிட்ட கடன்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றமில்லை. வங்கிகளில் நிரந்தர வைப்பு, தொடர் வைப்பு உள்ளிட்ட சேமிப்புத் திட்டங்களுக்கு, வங்கிகள் அளிக்கும் வட்டியும் குறையாமல் அதே விகிதத்தில் தொடர்கிறது.

2026-27 நிதியாண்டுக்கான நுகர்வோர் விலை குறியீட்டு (CPI) பணவீக்கம் 4.6% ஆக இருக்கும்; இது, முதல் காலாண்டில் 4.0% ஆகவும், இரண்டாம் காலாண்டில் 4.4% ஆகவும், மூன்றாம் காலாண்டில் 5.2% ஆகவும், நான்காம் காலாண்டில் 4.7% ஆக குறையும் என்றும் ரிசர்வ் வங்கி கணித்துள்ளது.

2026-27 நிதியாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி 6.9% ஆக குறையும்; இதுவே, முதல் காலாண்டில் 6.8% ஆகவும், இரண்டாம் காலாண்டில் 6.7% ஆகவும், மூன்றாம் காலாண்டில் 7% ஆகவும், நான்காம் காலாண்டில் 7.2% ஆகவும் இருக்கும் என்று ரிசர்வ் வங்கி கணித்துள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram