முந்தய பக்கம்

5.25%ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை

5 Aug 2026, 8:42 pm
5.25%ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை

5.25%ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கு விதிக்கப்படும் வட்டி விகிதம் ரெப்போ வட்டி விகிதம் என அழைக்கப்படுகிறது. நிதிச்சூழலுக்கு ஏற்ப இந்த வட்டி விகிதத்தை மாற்றுவது குறித்து ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக்குழுகூடி ஆலோசிக்கும்.அந்த வகையில் 2026-27 நிதியாண்டுக்காக ஆகஸ்ட் 3 முதல் 5 வரை மூன்று நாட்கள் நிதிக்குழு கூட்டம் நடைபெற்றது.புதனன்று கூட்டத்திற்குப் பின் ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா, ரெப்போ வட்டி விகிதத்தில்மாற்றமில்லை, ரெப்போ வட்டி விகிதம் 5.25சதவீதமாக தொடரும் என்ற அறிவிப்பைவெளியிட்டார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,”மேற்கு ஆசிய போரால் எரிபொருள், எண்ணெய் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், இந்திய பொருளாதாரத்தின் மீதான பணவீக்க அபாயங்களை உணர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

நடப்பு 2026-27 நிதி ஆண்டிற்கான இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி விகிதம் 6.7 சதவீதம் ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இது முன்பு கணிக்கப்பட்ட 6.6 சதவீதத்தை விட சற்று அதிகமாகும்.

முதல் காலாண்டிற்கான பணவீக்கக் கணிப்பு எதிர்பார்க்கப்பட்டதை விடக் குறைவாக உள்ளது. அதாவது, பணவீக்கம் தற்போது 5 சதவீதமாக கணிக்கப்பட்டுள்ளது. இது முன்பு எதிர்பார்க்கப்பட்ட 5.1 சதவீதத்தை விட குறைவானதாகும்” என ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய்மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.5.25%

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை5.25%ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை

Share
FacebookXWhatsAppTelegram