ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை - ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு!
5 Jun 2026, 12:32 pm

வங்கிகளின் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் மாற்றமின்றி 5.25 சதவிகிதமாக நீடிக்கும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா அறிவித்துள்ளார்.

இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையிலான மூன்று நாள் நிர்வாகக் குழு கூட்டம் ஜூன் 3 தொடங்கி இன்று நிறைவடைந்தது. இக்கூட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சஞ்சய் மல்ஹோத்ரா, ரெப்போ வட்டி விகிதம் மாற்றமின்றி 5.25 சதவிகிதமாக நீடிக்கும் என அறிவித்துள்ளார்.

அதே சமயம், 2026-27 நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 6.6% ஆக குறையும் என ரிசர்வ் வங்கி கணித்துள்ளது. இதுவே, முன்னதாக 6.9% ஆக கணிக்கப்பட்டது. மேலும், நுகர்வோர் விலைக் குறியீட்டு (CPI) பணவீக்கம் 5.1% ஆக இருக்கும் எனவும் ரிசர்வ் வங்கி கணித்துள்ளது.