ரெப்போ வட்டி விகிதம் 0.25% உயர்வு!
7 Oct 2026, 12:45 pm
<p>வங்கிகளின் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை 0.25 சதவிகிதம் உயர்த்தி ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா அறிவித்துள்ளார்.</p><p>இந்திய ரிசர்வ் வங்கியின் அக்டோபர் மாதத்திற்கான நிதி கொள்கை கூட்டம், ஆர்.பி.ஐ ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையில் மும்பையில் நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த சஞ்சய் மல்ஹோத்ரா, ரெப்போ வட்டி விகிதத்தை 0.25 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவித்தார்.</p><p>இதன் மூலம் ரெப்போ வட்டி விகிதம் 5.25 சதவிகிதத்தில் இருந்து 5.5 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இதனால் வங்கிகளின் வீட்டு கடன், வாகனக் கடன் உள்ளிட்ட தனிநபர் கடன்களின் வட்டி விகிதம் உயர வாய்ப்புள்ளது. கடந்த பிப்ரவரி 2023-க்குப் பிறகு ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.</p><p>மேலும், நடப்பு நிதியாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.1 சதவிகிதமாக இருக்கும் எனவும், 2026-27 நிதியாண்டுக்கான நுகர்வோர் விலைக் குறியீடு 5.2 சதவிகிதமாக இருக்கும் எனவும் ரிசர்வ் வங்கி கணிக்கப்பட்டுள்ளது.</p>
