வீடு, வாகனக் கடன்களுக்கான வட்டி விகிதம் உயர்கிறது!
7 Oct 2026, 11:08 pm

வீடு, வாகனக் கடன்களுக்கான வட்டி விகிதம் உயர்கிறது!

அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் சர்வதேச பொருளாதார நெருக்கடிகள் காரணமாக, வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய காலக் கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை இந்திய ரிசர்வ் வங்கி 0.25 சதவீதம் உயர்த்தியுள்ளது. இதன் மூலம் ரெப்போ வட்டி விகிதம் 5.50 சதவீதமாக உயர்ந்துள்ளது.மும்பையில் நடைபெற்ற 6 உறுப்பினர்களைக் கொண்ட ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழுக் (MPC) கூட்டத்தின் முடிவில், ரிசர்வ் வங்கி ஆளுநர்சஞ்சய் மல்ஹோத்ரா செய்தியாளர்களைச் சந்தித்து இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

சர்வதேச அரசியல் நிகழ்வுகள் மற்றும் மோதல்கள் காரணமாக உலகளாவிய பொருளாதாரச் சூழல் மிகவும்சவாலாக உருவெடுத்துள்ளது. தற்போதைய பொருளாதாரத் தரவுகளின் அடிப்படையில், பணவீக்கத்தின் போக்கு கடந்த ஆண்டைப் போலச் சாதகமானசூழலில் இல்லை என சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.ரெப்போ வட்டி உயர்வால் கடன் வாங்கியவர்களுக்கு, கடனுக்கான மாதத்தவணைத் தொகை (EMI) உடனடியாக உயரும் அல்லது கடன் செலுத்தும் காலம் அதிகரிக்கும். வங்கிகள் வட்டி விகிதத்தை உயர்த்துவதால், புதிதாகக்கடன் வாங்குவது மிகவும் செலவுமிக்கதாக மாறும்.

பணவீக்கம், வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் அத்தியாவசியப் பொருட்கள் வாங்கு

வதற்குக்கூட இந்தியர்கள் கடன் வாங்கும்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள நிலையில், ரெப்போ வட்டி விகித உயர்வு மாத சம்பளக்காரர்கள் மற்றும் சிறு, குறு தொழில்நடத்துபவர்கள் தலையில் இடியாக விழுந்துள்ளது.