தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

இரயுமன் துறையில் மீன்பிடித்துறைமுக பிரதான அலை தடுப்புச் சுவர் நீட்டிப்பு பணியை விரைந்து முடித்திடுக!

9 Jul 2026, 9:34 pm
இரயுமன் துறையில் மீன்பிடித்துறைமுக பிரதான அலை தடுப்புச் சுவர் நீட்டிப்பு பணியை விரைந்து முடித்திடுக!
<p><strong>இரயுமன் துறையில் மீன்பிடித்துறைமுக பிரதான அலை தடுப்புச் சுவர் நீட்டிப்பு பணியை விரைந்து முடித்திடுக!</strong></p><p>நாகர்கோவில்,ஜூலை 9- கன்னியாகுமரி மாவட்ட மீன்வளத்துறை சார்பில் தேங்காப்பட்டணம் மீன்பிடித்துறைமுகத்திற்குட்பட்ட இரயுமன்துறை பகுதியில் பிரதான அலைதடுப்பு சுவர் நீட்டிப்பு பணி நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் ஜூலை 9 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் ஆட்சியர் கூறியதாவது: கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தின் மூலம் 68,300 மீனவ மக்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பயன்பெற்று வருகின்றனர். இத்துறைமுகத்தில் 4800 க்கும் மேற்பட்ட நாட்டு படகுகள் (FRP) மற்றும் 850 க்கும் மேற்பட்ட இயந்திர விசைப்படகுகள் (MFV) மூலம் மீன்பிடி தொழிலை செய்து வருகின்றனர். மீனவர்கள் ஆண்டு முழுவதும் பாதுகாப்பாக கடலுக்கு சென்று தாங்கள் பிடித்து வரும் மீன்களை சுகாதாரமான முறையில் விற்பனை செய்வதற்கு மீனவ மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை கருத்தில் கொண்டு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி (FIDF) ன் கீழ் ரூ. 116 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் பெறப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டு 85 சதவீதம் பணிகள் முடிக்கபட்டு மீதம் உள்ள பணிகள் நடைபெற்றுவருகிறது. தேங்காப்பட்டணம் மீன்பிடித்துறைமுக பிரதான அலைதடுப்புச் சுவர் நீட்டிப்பு பணி (பகுதி II) நடைபெற்று வருகிறது. மேலும் மாவட்டத்தில் கட்டுமானத்திற்கு தேவையான பெரிய கற்கள் கிடைப்பதில் சிரமம், பணி நடைபெறும் இடத்திற்கான அணுகு பாதையில் கனரக வாகனங்களின் போக்குவரத்துக்கட்டுபாடுகள் மற்றும் கற்களைக் கொண்டு செல்வதற்கான இணையவழி அனுமதிகள் மற்றும் கடல் அலைகளின் சீற்றத்தால் பழைய அலைத்தடுப்புச்சுவரில் ஏற்பட்ட சேதங்கள் உள்ளிட்ட காரணங்களால் பணிகள் நடைபெறுவதில் சிரமங்கள் நிலவின. தற்போது பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. நடைபெற்று வரும் அனைத்து பணிகளையும் விரைவில் முடித்து, மீன்பிடித்தொழிலில் ஈடுபடும் மீனவர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு மீன்வளத்துறை துணை இயக்குநர், செயற்பொறியாளர் உள்ளிட்ட துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.