தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அறிவியல் கதிர் -- - ரமணன்

29 Nov 2025, 1:28 pm
அறிவியல்    கதிர்   -- - ரமணன்

மூச்சு விடும்  உலோக கூட்டுப்பொருள்

‘மூச்சு விடுகின்ற’ அதாவது ஆக்சிஜன் அணுக்களை உள்ளிழுக்கவும்  வெளிவிடவும் செய்கின்ற  ஒரு உலோக ஆக்சைடை அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். செரினியம், இரும்பு, கோபால்ட் மற்றும் ஆக்சிஜன் அடங்கிய இது SFCO என்று சுருக்கமாக அழைக்கப்படுகிறது. அணுக்களை சேர்ப்பது அல்லது நீக்குவதன் மூலம் அதன் குணங்களை, குறிப்பாக  காந்தத்தன்மை  மற்றும் கடத்தும் திறனை  மாற்றலாம். மின்னணு, மாசில்லா ஆற்றல், கட்டடம் போன்ற துறைகளில் இது பயன்படும்.   இந்த கூட்டுப் பொருளாலான மிக மெல்லிய தகட்டிலிருந்து ஆக்சிஜனை வெளியேற்றும்போது, அது ஒளி ஊடுருவக்கூடியதும் மின்தடுப்பு கூடுதலானதுமாக மாறுகிறது. படிக அமைப்பும் பெரிதாகிறது. ஆக்சிஜனை திரும்பச் சேர்க்கும்போது பழைய நிலைக்கு திரும்புகிறது. ஹைடிரஜனிலிருந்து மின்சாரம் உண்டாக்கும் திட ஆக்சைடு எரிகலன்களில் இந்த முறையானது பயன்படக்கூடும். வெளிச் சூழலில் இன்னும் இது சோதிக்கப்படவில்லை; சோதனைச் சாலையில்தான் நடைபெற்றிருக்கிறது என்றாலும் பொருட்கள் சிதையாமல் துல்லியமாக இரண்டு நிலைகளுக்கு இடையில் மாற்றுவதற்கான தேடலில் இது முக்கியமான முன்னேற்றம். இந்த ஆய்வு நேச்சர் கம்யூனிகேஷன்ஸ் (Nature Communications) என்கிற இதழில் வந்துள்ளது என்கிறது சயின்ஸ் அலர்ட்.

கனமான போர்வையும் சுகமான தூக்கமும்

மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மையினால் அவதிப்படுவோருக்கு கனம் ஏற்றப்பட்ட போர்வைகள் ஒரு நிவாரணமாகச் சொல்லப்படுகிறது. கண்ணாடிச் சரங்கள் அல்லது பிளாஸ்டிக் துண்டுகளால் நிரப்பப்பட்ட இவை உயர் குடியினருக்கான சிகிச்சையாக இருந்தது. இப்போது ஓய்வு எடுக்க முடியாமல் அவதிப்படும் எல்லோருக்குமான ஒன்றாக பரிந்துரைக்கப்படுகிறது. ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கும் உணர்வுக் கோளாறு உள்ள பெரியவர்களுக்கும் இயக்க சிகிச்சையாளர்களால் இது   1970களிலிருந்து  பயன்படுத்தப்பட்டது. 1990களில் வணிக ரீதியாக வந்தது; இருந்தாலும் சிறப்புத் தேவை உள்ளவர்களுக்காகவே இருந்தது. அண்மைக் காலங்களில் வணிக நிறுவனங்கள்,  நவீன வாழ்க்கை முறையால் அழுத்தத்திற்கு உள்ளானவர்களை குறிவைத்து விளம்பரம் செய்தன. 2018இல் டைம் இதழ், இதை 50 முன்னணி கண்டுபிடிப்புகளில் ஒன்றாகக் குறிப்பிடும் அளவுக்கு அது சென்றது.     இந்தப் போர்வைகளின்  பின்னாலுள்ள அறிவியல் எளிமையானது. அது உடல் முழுவதும் கொடுக்கும்  மென்மையான, சீரான அழுத்தம், கட்டிப்பிடிப்பது போன்ற உணர்வை கொடுக்கிறது. 2இலிருந்து 13 கிலோ வரை எடையுள்ள இவை (நிபுணர்கள் நமது உடல் எடையில் 10% உள்ள போர்வையை பரிந்துரைக்கிறார்கள்)’அடியாழ அழுத்த தூண்டல்’ என்பதை செய்கிறது. இது குறித்த ஆய்வுகள் நல்ல விளைவுகளை காட்டியுள்ளன. இதை பயன்படுத்திய சோதனை ஒன்றில்  தீவிர மன அழுத்தம், பை போலார் கோளாறு, படபடப்பு, ஏடிஹச்டி போன்ற கோளாறு உள்ள 120 நோயாளிகளுக்கு  நான்கு வாரங்களில் தூக்கமின்மை குறைவது காணப்பட்டது. என்றாலும் சில நிபந்தனைகள் உள்ளன. மனநோய் உள்ளவர்கள் என்று அறியப்பட்டவர்களிடமே இத்தகைய சோதனைகள் நடத்தப்பட்டன. நிறுவனங்கள் குறி வைக்கும் பொதுவான மக்களுக்கு அல்ல. அவர்களுக்கு இதனால் நலன்கள் கிடைப்பதற்கு ஆதாரங்கள் இல்லை.    ஆரோக்கியமானவர்களுக்கு இதனால் பலன் இல்லை என்று முழுவதுமாகக் கூற முடியாது. ஷிஃப்ட் பணி  செய்பவர்கள் பகலில் தூங்கும்போது அவர்களது மூளை விழித்துக் கொண்டிருக்கும். அவர்களுக்கு இது உதவலாம். உடல்நல பணியாளர்கள், தீயணைப்பு வீரர்கள், விமானிகள் ஆகியோர் பவர் நேப் எனப்படும் தூக்க உத்தியை பயன்படுத்துகிறார்கள். அவர்களுக்கு விரைவாக தூக்கம் வருவதற்கு இது பயன்படலாம். விளம்பரத்தில் சொல்லப்படுகிற எந்தவித பலனும் இல்லாவிட்டாலும் கூட உங்களுக்கு அது பிளேசிபோ எனப்படும் போலியான நிவாரணம் கொடுத்தாலும் அதை ஒதுக்க வேண்டியதில்லை. சில ஆபத்துகளும் உள்ளன. குழந்தைகளும் அதன் கனத்தின் கீழ் புரள முடியாதவர்களும்  இதை பயன்படுத்தக்கூடாது. சர்க்கரை நோய், ஆஸ்துமா, குறட்டை( sleep apnoea), COPD, இரத்த ஓட்டப் பிரச்சனை, உயர் இரத்த அழுத்தம்,கிளாஸ்ட்தோபோபியா(claustrophobia)போன்ற கோளாறு உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் பயன்படுத்தக்கூடாது.   பர்மிங்ஹாம் நகர பல்கலைக்கழகத்தை சேர்ந்த உடல்நல உளவியலாளர் கிராய்க் ஜேக்சனி  பதிவு சயின்ஸ் அலர்ட்டில் வந்தது.

உயிர் உருவாக்கத்தில் முதல் படி

400 கோடி ஆண்டு களுக்கு முன் மூலகங்  கள் தாமாகவே ஒன்று  சேர்ந்து உயிர் தோன்றியதை ஆய்வாளர்கள் சோதனைச் சாலை யில் செய்து காட்டியுள்ளார்கள். உல கம் தோன்றிய போது இருந்திருக்கும்  நிலைமைகளை சோதனைச் சாலை யில் உருவாக்கி ஆர்என்ஏ ( ரிபோ  நியூக்ளிக் அமிலம் ) மற்றும் அமினோ  அமிலங்களை இணைத்துள்ளனர். இன்று இயங்கும் பல்வேறு உயிரி னங்கள் தோன்றுவதற்கு முதல் படி  அதுதான்.     “இன்றைக்கு உயினமானது ரிபோ சோம் எனும் மிகவும்  சிக்கலான பொறியை பயன்படுத்தி புரதத்தை தயாரிக்கிறது. செல்களின் டிஎன்ஏ விலுள்ள மரபணு வரிசை வேதியி யல் குறிப்புகளாக மெஸஞ்சர் ஆர்என்ஏ என்பதில் பதியப்பட்டுள்  ளது. இதை ரிபோசோம் படித்து அமினோ அமிலங்களை ஒன்றுடன் ஒன்று இணைத்து புரதங்களை தயாரிக்கிறது” என்கிறார் லண்டன்  பல்கலைக்கழக கல்லூரி வேதியிய லாளர் மேத்யூ பவ்னர். “இந்த சிக்க லான செயல்பாட்டின் முதல் பகுதி யை நாங்கள் சாதித்துவிட்டோம். தண்ணீரில் நியூட்ரல் pH நிலை யில் அமினோ அமிலங்களை ஆர்என்ஏவுடன் இணைத்திருக்கி றோம். இந்த வேதிவினையானது தானாகவும் குறிப்பான தெரிவாக வும் உள்ளது. ஆரம்ப நிலை புவி யில் இது போன்று நடந்திருக்கலாம்.”           உயிர் எவ்வாறு உண்டானது என்பதை புரிந்து கொள்ள புரதங்கள் எவ்வாறு தயாரிக்கப்பட்டன என்  பதை அறிவது முக்கியம். இந்த  ஆய்வில் முதலில் புரதம் தயா ரிப்பதில் ஆர்என்ஏ முக்கியப் பங்கு  வகித்திருக்கலாம் என்பது காட்டப் பட்டுள்ளது. உயிர் உண்டானது குறித்து ‘ஆர்என்ஏ உலகம்’ மற்றும் ‘தயோ எஸ்தர் உலகம்’ என இரண்டு கருதுகோள்கள் ஆய்வாளர்களால் முன்வைக்கப்படுகின்றன. இந்த ஆய்வானது இரண்டையும் இணைத்து செய்யப்பட்டுள்ளது. உயிரின் தோற்றம் குறித்து விரி வான, எல்லாவற்றையும் உள்ளடக்  கிய புரிதலுக்கு இன்னும் தொலை வில் உள்ளோம். ஆனால் இந்த  ஆய்வு, பூமியின் ஆரம்ப கட்  டத்தில் இருந்த இரண்டு வேதிப்  பொருட்களான அமினோ அமி லங்கள் மற்றும் ஆர்என்ஏ எவ்வாறு  உயிருக்கு அத்தியாவசியமான பெப்டைடு எனும் சிறிய இணைப்பு களை உண்டாக்கியிருக்கும் என் பதை காட்டியுள்ளது. இது ‘நேச்சர்’ எனும் இதழில் வந்துள்ளதாக சயின்ஸ் அலர்ட் கூறுகிறது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.