மூலப்பொருள் விலையேற்றத்தால் ஐப் ஆர்டர் கட்டணத்தை உயர்த்த தொழில்துறை முடிவு
8 Apr 2026, 5:30 am

மூலப்பொருள் விலையேற்றம்: ஜாப் ஆர்டர் கட்டணத்தை உயர்த்த தொழில்துறை முடிவு

கோவை, ஏப். 7- மூலப்பொருள் விலையேற்றத்தால், ஜாப் ஆர்டர் கட்டணத்தை உயர்த்த தொழில் துறை முடிவு செய்துள்ளதாக சிறு குறு தொழில் முனைவோர் சங்கம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பேசிய சிறு குறு தொழில் முனைவோர் சங்க தலைவர் ஜேம்ஸ் கூறும் போது, தொழில் துறை சார்ந்த துணை நூல்கள் தொடர்ச்சியாக இன்னல்களை சந்தித்து வருகின்றன. கடந்த நான்கு ஆண்டுகளாக மூலப்பொருட்களின் விலை கட்டுப்பாடு இன்றி உயர்ந்து வருவதால், கோவை மாவட்ட தொழிலாளர்கள் நாடு முழுவதும் உள்ள தொழில் துறையினர் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகிறோம்.

எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாமல் மூலப் பொருட்களின் விலை ஏற்றப்பட்டு வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மின் கட்டண உயர்வுக்கும் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் தவிப்பு ஏற்பட்டது. இதனை எதிர்த்து பல கட்ட போராட்டங்களை முன்னெடுத்தோம்.

அப்போது தற்காலிக விலை போல தெரிந்தது. மூலப் பொருள் விலை ஏற்றம் இருந்தால், தொழில்துறையினர் கடுமையாக பாதிக்கப்படுவோம் என தொடர்ந்து தெரிவித்து வந்தோம். இதனால் கடுமையாக பாதிக்கப்படுவது, பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் மட்டும் அதிக லாபத்தை பெறுகின்றன. ஆனால் சாதாரண சிறு தொழில் முனைவோர் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

இதனால் ஜாப் ஆர்டர் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்துள்ளோம். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளோம்.