திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக ரவிகுமார் பொறுப்பேற்பு
1 Jun 2026, 11:46 pm

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக ரவிகுமார் பொறுப்பேற்பு

திருப்பத்தூர், ஜூன் 1- திருப்பத்தூர் மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சியராக ரவிகுமார் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முறைப்படி அரசு கோப்புகளில் கையெழுத்திட்டு, தனது பணியைத் தொடங்கிய அவர், தொடர்ந்து நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பங்கேற்றார். இக்கூட்டத்தில் திருப்பத்தூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு, தங்கள் குறைகள் மற்றும் கோரிக்கைகள் அடங்கிய 531 மனுக்களை ஆட்சியரிடம் அளித்தனர். மனுக்களைப் பெற்றுக்கொண்ட ஆட்சியர் ரவிகுமார், அவற்றின் மீது உரிய விசாரணை நடத்தி, விரைவில் தகுந்த நடவடிக்கை எடுக்க ப்படும் என உறுதியளித்தார். இந்த நிகழ்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், மாவட்ட திட்ட இயக்குநர் உமாமகேஸ்வரி மற்றும் பல்வேறு துறை சார்ந்த அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.