தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அடிப்படை வசதி செய்து தர வேண்டும் ரத்தினபுரி நகர் மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

9 Feb 2026, 3:02 pm
அடிப்படை வசதி செய்து தர வேண்டும் ரத்தினபுரி நகர் மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு
<p><strong>அடிப்படை வசதி செய்து தர வேண்டும் ரத்தினபுரி நகர் மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு</strong></p> <p>விருதுநகர், பிப்.9- சிவகாசி அருகே உள்ள ரத்தினபுரி நகரில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வச திகளை உடனடியாக செய்து &nbsp;தர வேண்டும் என அப்பகுதி மக்கள் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ராவிடம் திங் களன்று மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியதாவது: சிவகாசி ஒன்றியத்திற்கு உட்பட்ட அனுப்பங்குளம் ஊராட்சியில் உள்ள ரத்தின புரி நகரில் சுமார் 200 குடி யிருப்புகளில் 800க்கும் மேற் &nbsp;பட்டோர் வசித்து வருகின்ற னர். மேலும், இப்பகுதியில் ஏராளமான பட்டாசு கடை களும் செயல்பட்டு வரு கின்றன. இருப்பினும், இப்பகுதி யில் சாலை வசதி, தெரு விளக்குகள், மேல்நிலை நீர்த் &nbsp;தேக்கத் தொட்டி போன்ற அடிப்படை வசதிகள் எது வும் இல்லை. இதனால் குடி நீருக்காக பொதுமக்கள் தனி யாரிடம் இருந்து விலை &nbsp;கொடுத்து தண்ணீர் வாங் கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். தெருவிளக்குகள் இல் லாத காரணத்தால், இரவு நேரங்களில் வெளியே செல்ல மக்கள் அச்சத்துடன் இருக்க வேண்டிய சூழல் &nbsp;உருவாகியுள்ளது. மேலும், &nbsp;மண் சாலையாக உள்ள தால் மழைக் காலங்களில் இருசக்கர வாகனங்கள் கூட &nbsp;செல்ல முடியாத நிலை ஏற் &nbsp;படுவதாக மனுவில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. எனவே, ரத்தினபுரி நக ரில் சாலை வசதி, குடிநீர் வசதி, தெருவிளக்குகள் உள்ளிட்ட அடிப்படை வச திகளை உடனடியாக செய்து &nbsp;தர மாவட்ட நிர்வாகம் நட வடிக்கை எடுக்க வேண்டும் &nbsp;என அப்பகுதி மக்கள் கோரி க்கை விடுத்துள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.