முந்தய பக்கம்

ஓராண்டாக திறக்கப்படாத ரேசன்கடை! பொதுமக்கள் அவதி

22 Dec 2025, 4:47 am
ஓராண்டாக திறக்கப்படாத ரேசன்கடை! பொதுமக்கள் அவதி
<p>கள்ளக்குறிச்சி,டிச.22 - உளுந்தூர்பேட்டை அடுத்த உ.நெமிலி பஞ்சா யத்திற்கு உட்பட்ட உ.செல்லூர், கள்ளக் குறிச்சி கிராமம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் கட்டப்பட்ட பகுதி நேர ரேசன் கடை ஓராண்டாக திறக்கப்படாமல் உள்ளது. உ.செல்லூர் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் தலித் மக்கள் வாழ்விடத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள பகுதிநேர நியாய விலை கடை கட்டி முடிக்கப்பட்டு இந்நிலை யில் உள்ளது. தற்போது இந்த நியாய விலை கடை சமூக விரோதிகளின் கூடார மாக மாறி வருகிறது. &nbsp;உளுந்தூர் &nbsp;பேட்டை வட்டவளங்கள் அலுவலரிடம் இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் பலமுறை மனு கொடுத்தும் தற்போது வரை திறக்கப்படாமல் உள்ளது.எனவே துறை சார்ந்த அதிகாரிகள் உடனடியாக பார்வையிட்டு கட்டி முடிக்கப்பட்ட பகுதி நேர நியாய விலை கடையை திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பது வாலிபர் சங்கம் மற்றும் தலித் பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram