முந்தய பக்கம்

ரேஷன் ஊழியர்களுக்கு ஊக்க தொகையை வழங்கிடுக

19 May 2026, 12:50 am
ரேஷன் ஊழியர்களுக்கு ஊக்க தொகையை வழங்கிடுக
<p><strong>ரேஷன் ஊழியர்களுக்கு ஊக்க தொகையை வழங்கிடுக</strong></p><p>திருப்பூர், மே 18 - பல்லடம் வட்டாரத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கிய நியாய விலைக் கடை ஊழியர்களுக்கான ஊக்கத்தொகையை இழுத்தடிக்கா மல் உடனடியாக வழங்க வேண்டும் என்று சிஐடியு கூட்டுறவு பணியாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்ட சிஐடியு கூட்டு றவு பணியாளர் சங்கத்தின் பல்லடம் கிளை பேரவைக் கூட்டம் பல்லடத் தில் உள்ள சிஐடியு அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கிளைத் தலைவர் வி.கருப்புசாமி தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் பி. கௌதமன், மாவட்டச் செயலாளர் கே.மகேந்திரன், மாவட்டப் பொருளா ளர் பி.சுரேஷ் ஆகியோர் பங்கேற்று பேசினர். இதில் திரளானோர் பங்கேற்றனர். இதில், பல்லடம் வட்டாரத்தில் கடந்த பொங்கல் பண்டிகையை முன் னிட்டு, பொதுமக்களுக்குப் பொங் கல் பரிசுத் தொகுப்பு விநியோகித்த நியாயவிலைக் கடை ஊழியர்க ளுக்கு வழங்கப்பட வேண்டிய ஊக்கத்தொகையை எவ்வித தாமத முமின்றி உடனடியாக வழங்க வேண் டும். பல்லடம் வட்டாரத்தில் இன்னும் புதிய ஊதிய உயர்வு கிடைக்கப் பெறாமல் விடுபட்டுள்ள ஊழியர்கள் அனைவருக்கும் உடனே ஊதிய உயர்வை நடைமுறைப்படுத்த வேண்டும். புதிய ஊதிய விகிதப் பார்வையில் உள்ள குளறுபடிகள் மற்றும் முரண்பாடுகளைக் களைந்து ஊழியர்களுக்குப் பாது காப்பான ஊதியத்தை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக, பல்லடம் வட்டம் கோடாங்கிபாளை யம் கூட்டுறவு கடன் சங்கத்தில் விற் பனையாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற தண்டபாணி அவர்களுக்குப் பணிநிறைவு பாராட்டு விழா நடை பெற்றது.</p>
Share
FacebookXWhatsAppTelegram