திருச்சி விரைவு செய்திகள்
20 Mar 2026, 2:55 pm

போடியில் பால் வியாபாரியிடம் ரூ.15 லட்சம் பணம் பறிமுதல்

தேனி,மார்ச் 20- போடியில் பால் வியாபாரியிடமிருந்து ரூ.15 லட்சம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். தேனி மாவட்டம், போடி சட்டமன்றத் தொகுதி க்குட்பட்ட பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் வாகனச்சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வெள்ளிக்கிழமையன்று போடியிலிருந்து சிலமலை செல்லும் ராணிமங்கம்மாள் சாலையில் ரெங்கநாதபுரம் அருகே வேளாண்மைத்துறை உதவி பொறியாளர் நவநீதகிருஷ்ணன் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு பால் கேன்களுடன் வந்த போடி அருகே சிலமலை கூட்டுறவு வங்கி தெருவை சேர்ந்த செல்வராஜ் (43) என்பவரின் இருசக்கர வாகனத்தை சோதனையிட்டனர். இதில் வாகனத்தில் ரூ.15 லட்சம் இருந்தது தெரியவந்தது. விசாரணையில் போடியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் அடகு வைக்கப்பட்டிருந்த நகைகளை மீட்பதற்காக பணத்தை எடுத்துச் செல்வதாக செல்வராஜ் தெரிவித்துள்ளார். இருப்பினும் ஆவணங்கள் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்தனர். ரூ.10 லட்சத்திற்கு மேல் இருந்ததால் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.15 லட்சத்தை தேனி வருமான வரித்துறையினரிடம் தேர்தல் பறக்கும்படையினர் ஒப்படைத்தனர்.

வாகனத்தில் கொண்டு சென்ற போதைப்பொருட்கள் பறிமுதல்

இராமநாதபுரம், மார்ச் 20- இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சட்ட மன்றத் தொகுதியில் மார்ச் 19 இரவு 9 மணியளவில் வாக னத்தில் பயணம் செய்த இராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஸ்வரூபராம் என்பவர் கொண்டு சென்ற ரூ.2012 மதிப்பிலான போதை பொருட்கள் சட்டமன்ற நிலை யான கண்காணிப்பு குழுவினரால் பறிமுதல் செய்யப் பட்டது. இதுகுறித்து கீழத்தூவல் காவல்நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.

சில்வர் பாத்திரங்களை பறிமுதல் செய்த பறக்கும் படையினர்

திருவில்லிபுத்தூர்,மார்ச் 20- விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதியில் வியாழக்கிழமையன்று மாலை மாவட்ட வனச்சரக அலுவலகம் அருகில் வட்டார வளர்ச்சி அலுவலர் பூமாரி, உதவி ஆய்வாளர் மதிவாணன் தலை மையிலான பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மாரிமுத்து என்பவர் ஓட்டி வந்த வாகனத்தில் 499 ரூபாய் மதிப்பிலான ஏழு சில்வர் பாத்திரங்கள் அடங்கிய கிப்ட் பார்சல்கள் இருந்ததன. இதற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் அவை அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது .சில்வர் பாத்தி ரங்களின் மொத்த மதிப்பு ரூ. 47904 ஆகும் என்று கூறப்படுகிறது.

அருப்புக்கோட்டையில் ரூ.79 ஆயிரம் பணம், வெள்ளிக்கட்டிகள் பறிமுதல்

அருப்புக்கோட்டை மார்ச் 20- அருப்புக்கோட்டையில் தேர்தல் பறக்கும் படையி னர் நடத்திய வாகனச் சோதனையில் அரை கிலோ வெள்ளி கட்டிகள் மற்றும் ரூ. 79,200 பணம் பறிமுதல் செய்யப்பட்டது. விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை எம்.எஸ். கார்னர் அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரி கள் தீவிர வாகனச்சோத னையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி‌ சோத னையிட்டனர். அதில் திருச்சியைச் சேர்ந்த அழகர் சாமி என்பவர் உரிய ஆவண மின்றி ரூ.1,34,560 மதிப்பு டைய அரை கிலோ வெள்ளிக் கட்டிகளை வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து வெள் ளிக்கட்டிகளை அதிகாரி கள் பறிமுதல் செய்து வட்டாட்சியர் அலுவல கத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் செந்தி வேலிடம் ஒப்படைத்தனர். அதேபோல், பெரிய புளி யம்பட்டி பகுதியில் நடத்திய சோதனையில் அவ் வழியாக வந்த காரில் வீரே ஸ்வரன் என்பவர் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.79,200 கொண்டு சென்றது தெரிய வந்தது. மாடு வாங்குவதற்காக அந்த பணத்தை கொண்டு செல்வதாக அவர் தெரிவித் துள்ளார். எனினும் உரிய ஆவணங்கள் இல்லை என்பதால் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர். சாத்தூர் அருகே ரூ.1.55 லட்சம் பறிமுதல் விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோத னையில் 1.55 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. சாத்தூர் கோவில்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் சடையம்பட்டி வழக்கு அருகே தேர்தல் பறக்கும் படையினர் வாகனச்சோத னையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர்.அதில் பயணித்த தயாள மோகன் என்பவரிடம் ரூ 1,55,500 இருந்தது தெரிய வந்தது. ஆனால் அவரிடம் உரிய ஆவணமில்லை. எனவே பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர் தேர்தல் நடத்தும் உதவி அலுவலரிடம் அதனை ஒப்ப டைத்தனர்.

பறிமுதல் செய்த பணம்- பொருட்களை பெற்றுக்கொள்ள குறைதீர் குழு அமைப்பு இராமநாதபுரம் தேர்தல் அலுவலர் தகவல்

இராமநாதபுரம், மார்ச் 20- இராமநாதபுரம் மாவட்ட தேர்தல் அலுவலர் -மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சட்டமன்ற பொதுத்தேர் தல் -2026 நடைபெறுவதை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள தால், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் ரூ.50,000- (ஐம்பாதாயிரம்)க்கு மேல் ரொக்கமாகவோ அல்லது ரூ.10,000- (பத்தாயிரம்)க்கு மேல் மதிப்புள்ள பொருளாக வோ கொண்டு செல்லும்பட் சத்தில் உரிய ஆதாரங்களு டன் கொண்டு செல்ல வேண்டும். உரிய கணக்கு/ஆதாரமின்றி கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் பொருட்கள் இராமநாதபுரம் மாவட்டத்தின் சம்பந்தப்பட்ட தொகுதி பறக்கும்படை அலுவலர்களால் பறிமுதல் செய்து அரசு கஜானாவில் ஒப்படைக்கப்படும். அவ்வாறு பறிமுதல் செய்யப்படும் ரொக்கம் மற்றும் பொருட்களை உரிய ஆவணங்களை சமர்ப்பி த்து பெற்றுக் கொள்ள மாவட்ட குறைதீர் குழு அமைக்கப்பட்டுள்ளது. அக் குழுவின் தலைவராக இராம நாதபுரம் மாவட்ட கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திவ் யான்ஷீநிகம்,உறுப்பினராக மாவட்ட கருவூல அலுவலர் வ.சண்முகசுந்தரி (தொடர்பு எண்: 9442116792) மற்றும் கன்வீனராக மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவி யாளர் (கணக்குகள்) ச.சங்குக்குமார் (தொடர்பு எண்: 9943858085) ஆகியோ ரும் நியமனம் செய்யப் பட்டுள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கம் மற்றும் பொருட் களை மீளப்பெற இராமநாத புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மேற்காணும் மாவட்ட குறைதீர் கமிட்டியிடம் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து பெற்றுக்கொள்ளலாம் . இவ்வாறு அதில் தெரி வித்துள்ளார்.

குடிநீர் கேட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பெண்கள் முற்றுகை

அருப்புக்கோட்டை, மார்ச் 20– அருப்புக்கோட்டையில் குடிநீர் வழங்கக்கோரி ஊராட்சி ஒன்றிய அலுவல கத்தை பெண்கள் முற்று கையிட்டனர். விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை ஒன்றி யத்திற்கு உட்பட்டது இராமா னுஜபுரம் ஊராட்சி. இங்கு கடந்த 6 மாதங்களாக குடிநீர் சரியாக வரவில்லை. இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் பலமுறை கோரிக்கை வைத்தும் ஊராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை. இதனால் ஆவேசம் அடைந்த கிராமப் பெண்கள் ஊராட்சி ஒன்றிய அலுவல கத்தினை முற்றுகையிட்ட னர். பின்பு, ஆழ்துளை குழாயில் புதிய மோட்டார் பொருத்த வேண்டும். சேதம டைந்த குழாய்களை மாற்ற வேண்டும். முறையாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இதையடுத்து சமாதான பேச்சுவார்த்தை நடத்திய ஒன்றிய அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக் கப்படும் என உறுதி யளித்ததன் பேரில் பொது மக்கள் கலைந்து சென்ற னர்.

போடி-சென்னை ரயில் வாரத்தில் 6 நாட்கள் இயக்கம் பொதுமக்கள் -பயணிகள் வரவேற்பு

தேனி ,மார்ச் 20- வாரம் 3 நாளில் இருந்து 6 நாளாக சேவை அதிகரிக்கப்பட்ட போடி ரயிலின் முதல் இயக்கத்துக்கு பொதுமக்களும், சங்க நிர்வாகிகளும் வரவேற்பு அளித்தனர். போடியில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு வாரம் மூன்று நாள் எதிரெதிர் மார்க்கமாக அதிவிரைவு ரயில்(20601/02) இயக்கப்பட்டு வந்தது. இதில் பயணிகள் மட்டுமல்லாது ஏலக்காய் வர்த்தகம் மூலமும் கூடுதல் வருவாய் கிடைத்தது. ஆகவே இந்த ரயிலை தினசரி ரயிலாக மாற்ற வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்தனர். இதனைத்தொடர்ந்து இந்த ரயில் சேவை வாரம் 6 நாட்களாக (சனிக்கிழமை தவிர) அதிகரிக்கப்பட்டது. இதற்கான முதல் ரயில் நேற்று முன்தினம் சென்னையில் இருந்து கிளம்பி நேற்று காலை போடி வந்தது. இதற்கு திண்டுக்கல்-குமுளி அகல ரயில்பாதை திட்ட போராட்ட குழு சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தலைவர் ஆர்.சங்கரநாராயணன் தலைமை வகிக்க, செயலாளர்கள் மெல்வின், மகாராஜன், முருகவேல், பிரதீப் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ரேசன் அரிசி கடத்தல் : கம்பத்தில் 2 பேர் கைது

தேனி, மார்ச் 20- ரேசன் அரிசி கடத்திய 2 பேரை கம்பத்தில் போலீசார் கைது செய்தனர். தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு கம்பம்மெட்டு வழியாக ரேசன் அரிசி கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் உத்தமபாளையம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் ரவிசங்கர், சார்பு ஆய்வாளர் லதா மற்றும் சிறப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கேரளா நோக்கிச் சென்ற டாடா சுமோ வாகனத்தை சோதனை செய்த னர். அதில் 40 மூடைகளில் 2,020 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து கடத்தலில் ஈடுபட்ட கம்பம் சுப்பிரமணிய கோயில் தெரு வை சேர்ந்த குமரேசன் (48), கம்பம் ஜல்லிக்கட்டு தெருவைச் சேர்ந்த ஓட்டுநர் விஜய்(28) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். அரிசி மற்றும் வாகனம் பறிமுதல் செய் யப்பட்டது.

நிலக்கோட்டையில் ரூ.16.68 லட்சம் பறிமுதல் மாவட்ட ஆட்சியர் தகவல்

திண்டுக்கல், மார்ச் 20- திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை தேர்தல் நடத்தை விதிகளின்படி கணக்கில் வராத பணமாக ரூ.16,68,820 கைப்பற்றப்பட்டுள்ளதாக திண்டுக்கல் ஆட்சிய ரும் மாவட்ட தேர்தல் அலுவலருமான செ.சரவணன் அறி வித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி யில் 18.3.2026 இல் சிலுக்குவார்பட்டி அருகே நடைபெற்ற சோதனையில் ரூ.1,06,200 பறக்கும்படையினரால் கைப்பற்றப்பட்டது. வத்தலகுண்டு அணுகுசாலை பள்ளபட்டியில் ரூ.68,500 கைப்பற்றப்பட்டது. 19.3.2026 அன்று வரை ரூ.16,24,330, ரூ.44,490 மதிப்புள்ள பொருட்கள் என மொத்தம் ரூ.16,68,820 கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த பணம் மாவட்ட கருவூலத்தில் உதவி தேர்தல் அலுவ லர்கள் வைப்பீடு செய்துள்ளனர் . இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

வேடசந்தூர் அருகே தொழிலதிபரிடம் ரூ.84,600 பறிமுதல் ஒட்டன்சத்திரம்,

மார்ச் 20- திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள சேனன்கோட்டையில் ஒட்டன்சத்திரம் சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் வெள்ளியன்று வாகனச் சோதனை யில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வேடசந்தூரில் இருந்து ஒட்டன்சத்திரம் நோக்கி சென்ற காரை நிறுத்தி சோதனை மேற் கொண்டனர் .அப்போது காரில் வேடசந்தூரை சேர்ந்த தொழில் அதிபர் ஜமாலுதீன் என்பவர் உரிய ஆவ ணங்களின்றி கொண்டு சென்ற ரூ.84,600 பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து வேடசந்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜேந்திரனிடம் ஒப்படைத்தனர். இதனைத் தொடர்ந்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜேந்தி ரன் பணத்தை கருவூலத்தில் ஒப்படைத்தார்.

அரசு அனுமதியின்றி சேர்க்கப்பட்ட விபிஎம்எம் கல்லூரி மாணவிகள் தேர்வு எழுத, வேறு கல்லூரிகளில் சேர்க்க உறுதி

மதுரை, மார்ச் 20- விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன் கோவிலில் மதுரை காமராசர் பல்கலைக்கழக இணைவு பெற்ற விபிஎம்எம் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி உள்ளது.இக்கல்லூரியில், அரசு அனுமதியின்றி சேர்க்கப்பட்ட மாணவிகளின் கல்விச் சிக்கலைத் தீர்க்க வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் சார்பில் ஏற்கனவே பலமுறை போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதன் தொடர்ச்சியாக மார்ச் 18, 19 ஆகிய தேதிகளில் பல்கலைக்கழக வளாகத்தின் முன்பு மாணவிகள் இரவு பகலாகத் திரண்டு தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவிகளின் இந்தத் தீவிரப் போராட்டத்தின் விளைவாக, மதுரை காமராசர் பல்கலைக்கழக அதிகாரிகள் மார்ச் 19 அன்று போராட்டக் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு ஒப்பந்தத்தை எட்டினர். அதில், மதுரை காமராசர் பல்கலைக்கழக ஆட்சிக்குழு அரங்கில் பதிவாளர், கல்லூரி கல்வி மண்டல இணை இயக்குநர் மற்றும் உயர்மட்ட அதிகாரிகள் முன்னிலையில் உடன்பாடு கையெழுத்தானது. இதன்படி, இக்கல்லூரியில் பயிலும் மூன்றாம் ஆண்டு மாணவிகளுக்கு 6 ஆம் பருவத் தேர்வை எழுத அனுமதி வழங்குவது தொடர்பாக, அவர்களின் மாற்றுச் சான்றிதழ்களுடன் கூடிய பரிந்துரையை பல்கலைக்கழக ஆட்சிக்குழுவின் (Syndicate) ஒப்புதலுக்கு அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவிகளைப் பொறுத்தவரை, அவர்களை வேறொரு இருபாலர் பயிலும் கல்லூரிக்கு மாற்றம் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதனடிப்படையில், மாணவிகள் உரிய மாற்றுச் சான்றிதழைப் பெற்று சமர்ப்பிக்கும் பட்சத்தில், அவர்களை மாற்று கல்லூரிகளில் சேர்ப்பதற்கான பரிந்துரையை ஆட்சிக்குழுவின் ஒப்புதலுக்குச் சமர்ப்பிக்க அதிகாரிகள் உறுதி அளித்தனர். மேலும், தற்போது 6 ஆம் பருவத் தேர்வு எழுத உள்ள மூன்றாம் ஆண்டு மாணவிகள் மற்றும் முதலாம், இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவிகள் விருப்பம் தெரிவிக்கும் பட்சத்தில், அவர்கள் கோரும் மாற்றுத் தேர்வு மையங்களில் தேர்வு எழுத அனுமதி வழங்குவது குறித்த முன்மொழிவுகளும் உரிய குறிப்புகளுடன் ஆட்சிக்குழுவிற்குச் சமர்ப்பிக்கப்பட உள்ளன. இந்திய மாணவர் சங்கத்தின் தொடர் போராட்டங்களாலும், குறிப்பாக இரண்டு நாட்கள் நடைபெற்ற இரவு பகல் காத்திருப்புப் போராட்டத்தாலும் மாணவிகளின் கல்வி உரிமை காக்கப்பட்டு இந்தத் தீர்வு காணப்பட்டுள்ளது.